பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'குரூப் -- 4' தேர்வு
14 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை : 'குரூப் - 4' தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நேற்றுடன் முடிந்தது. இந்த தேர்வை எழுத 14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

குரூப்-4, ஆன்லைன் ,போட்டி தேர்வு, விண்ணப்பம், கல்வித்தகுதி,


தமிழக அரசு துறைகளில் குரூப் - 4 பதவிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு செப். 1ல் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 14ல் துவங்கியது. இந்த தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி. அதனால் 10ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் வரை விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்ப பதிவு நேற்று நள்ளிரவு முடிந்தது. மொத்தம் 14 லட்சம் பேர் விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது. தேர்வு கட்டணத்தை நாளைக்குள் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. அறிவுறுத்தி உள்ளது.


இந்த தேர்வின் வாயிலாக வி.ஏ.ஓ. என்ற கிராம நிர்வாக அதிகாரி 397; பிணையமற்ற இளநிலை உதவியாளர் 2688; பிணையம் உள்ள இளநிலை உதவியாளர் 104; வரி வசூலிப்பவர் நிலை - 1க்கு 34; நில அளவையாளர் 509; வரைவாளர் 74; தட்டச்சர் 1901; சுருக்கெழுத்து தட்டச்சர் 784 என எட்டு வகை பதவிகளில் 6491 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு குறைந்த பட்சம் 20 ஆயிரத்து 600 முதல் 65 ஆயிரத்து 500 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும். மற்ற பதவிகளுக்கு குறைந்த பட்சம் 19 ஆயிரத்து 500 முதல் 62 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். கூடுதல் விபரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


எச்சரிக்கை

இதற்கிடையில் குரூப் - 4 தேர்வில் தேர்ச்சி பெற வைத்து வேலைவாங்கி தருவதாக சில இடைத் தரகர்கள் சுற்றுவதாக டி.என்.பி.எஸ்.சி.க்கு தகவல் கிடைத்துள்ளது. அதனால் தேர்வர்களுக்கு எச்சரிக்கை விடுத்து டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிக்கை : தமிழ்நாடு அரசு

Advertisement

பணியாளர் தேர்வாணையத்தின் நியமனங்கள் அனைத்தும் தேர்வர்களின் தரவரிசைப்படியே மேற்கொள்ளப் படுகின்றன. பொய்யான வாக்குறுதிகள் கூறி குறுக்கு வழியில் வேலை வாங்கி தருவதாக சொல்லும் இடைத்தரகர்களிடம் தேர்வர்கள் கவனமாக இருக்க வேண்டும்.


தவறான நபர்களால் தேர்வர்களுக்கு ஏற்படும் எந்தவொரு இழப்புக்கும் தேர்வாணையம் பொறுப்பாகாது. விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் அனைத்து தகவல்களுக்கும் விண்ணப்பதாரரே பொறுப்பாவார். விண்ணப்பித்த இணையதள சேவை மையங்களையோ பொது சேவை மையங்களையோ குறை கூறக்கூடாது. விண்ணப்பத்தை சரிபார்த்த பின் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-ஜூலை-201922:21:27 IST Report Abuse

ஆப்புசுமார் 7000 வேலை இடங்களுக்கு 1400000 பேர் போட்டி... மோடீஜீ... சப்கோ காம் குடுத்திருவார் ஹைன்... 2040 க்குள்ள பிரதான் மந்திரிக்கீ வேலை யோஜனாவுல கிடைச்சுரும் ஹைன். வந்து வரிசைல நில்லுங்க ஹைன்.

Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
15-ஜூலை-201910:29:04 IST Report Abuse

நக்கீரன்குரூப் - 4 தேர்வில் தேர்ச்சி பெற இடைத்தரகர்களை அணுகாதீர்கள். நேரடியாக அரசையோ அதிகாரிகளையோ அணுகுங்கள். இந்த கையில் காசு அந்த கையில் வேலை. தேர்வாணையம் வெளிப்படையாக செயல்படவில்லை. அதனுடைய நிறைய நடவடிக்கைகள் மூடு மந்திரமாகவே உள்ளன. லஞ்ச ஊழலின் பிறப்பிடம் இங்குதான். காசு கொடுத்து வேலைக்கு சேர்ந்தவனிடம் எப்படி நேர்மையை எதிர்பார்க்க முடியும்? மோடிஜி நாட்டில் ஊழலை ஒழிக்க விரும்பினால் முதலில் இந்த திருடர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
15-ஜூலை-201908:44:03 IST Report Abuse

ஆரூர் ரங்தேச சேவை செய்ய 14 லட்சம் பேர் தயார் என்பது புல்லரிக்க வைக்கிறது

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X