பதிவு செய்த நாள் :
அனைவருக்கும் குடிநீர் திட்டம்
ரூ. 6.3 லட்சம் கோடி முதலீடு

புதுடில்லி : வரும் 2024க்குள் அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் என்ற மத்திய அரசின் 'நல் சே ஜல்' திட்டத்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 6.3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடிநீர், திட்டம், முதலீடு, பிரதமர் , மோடி, ரூ. 6.3 லட்சம் கோடி, ஒதுக்கீடு, தண்ணீர், மேலாண்மை


பிரதமர் அடுத்து தண்ணீர் மேலாண்மையை முக்கிய மற்றும் முதல் விஷயமாக கையில் எடுத்துக் கொள்ளப் போவதாக மோடி தெரிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது நரேந்திர மோடி இதனை வெளிப்படையாக குறிப்பிட்டார்! தாம் இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப்படும் போது தமது முக்கிய விஷயமாக நீர் மேலாண்மை இருக்கும் என்றார்.


கடந்த 2014 ஆகஸ்ட் 15 அன்று தில்லி செங்கோட்டையில் கொடியேற்றி வைத்து உரையாற்றிய மோடி அப்போது பேசுகையில் இந்தியர்கள் தங்களது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் அதற்காக ஒரு திட்டத்தை தொடங்கப் போகிறேன் ஸ்வச்ச பாரத் அபியான் என்ற தூய்மை இந்தியா திட்டம் என்பதை கொண்டு வரப்போவதாக அறிவித்தார். அதன்படி தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப் பட்டது. தான் இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப் படும் போது நீர்

மேலாண்மையை முன்னிறுத்துவதாக கூறியுள்ளார் மோடி . மத்திய பிரதேசத்தில் கர்காவ்ன் பகுதியில் மே 17ஆம் தேதி மோடி பேசியபோது 50 வருடங்களுக்கு முன்னர் முன்னாள் பிரதமர் லோகியா ஜவகர்லால் நேருவிடம் கூறியபோது பெண்களுக்கான மிக முக்கியமான இரண்டு விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும்… தண்ணீர் மற்றும் கழிவு மேலாண்மை பிரச்னை!

அதன்படி தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டது. தான் இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப் படும் போது நீர் மேலாண்மையை முன்னிறுத்துவதாக கூறியுள்ளார் மோடி. மத்திய பிரதேசத்தில் கர்காவ்ன் பகுதியில் மே 17ஆம் தேதி மோடி பேசியபோது 50 வருடங்களுக்கு முன்னர் முன்னாள் பிரதமர் லோகியா ஜவகர்லால் நேருவிடம் கூறியபோது பெண்களுக்கான மிக முக்கியமான இரண்டு விஷயங்கள் கவனிக்கப் படவேண்டும்… தண்ணீர் மற்றும் கழிவு மேலாண்மை பிரச்னை!

நான் லோகியாவின் ஆசையை நிறைவேற்றுகிறேன். பெண்களுக்கு அவர்கள் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் கழிப்பறைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. அடுத்து பெண்கள் சிரமத்தை அனுபவிக்காத வகையில் தூய்மையான குடிநீர் வழங்குவதற்கு உறுதி செய்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார். பாஜகவின்தேர்தல் அறிக்கையிலும் கூட நீர் மேலாண்மை முக்கிய இடம் பிடித்தது! தேசிய அளவில் நதிகளை இணைப்பதற்கு நதி நீர்

Advertisement

மேலாண்மையை சரி செய்வதற்கும் ஒரு அமைச்சகம் தனியாக தொடங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
தேசிய நதிநீர் இணைப்புக்காக தனி அமைச்சகம் கொண்டு வரும் பாஜகவின் தேர்தல் அறிக்கை அம்சத்தை பலரும் வரவேற்றனர்! இந்நிலையில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்படும் போது தமது வாக்குறுதியான அனைவருக்கும் குழாய்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை நிச்சயம் செயல்படுத்துவார் என்று நம்புகிறார்கள்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இரண்டாவது முறையாக பா.ஜ. அரசு அமைந்த பிறகு 'ஜல் சக்தி' என்ற பெயரில் நீர்வள அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. முந்தைய அரசில் தனித் தனியாக இருந்த குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைச்சகம் நீர்வளம் மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் போன்றவை ஒருங்கிணைக்கப்பட்டு இந்த புதிய அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது.


வரும் 2024க்குள் அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இந்த திட்டத்துக்காக 28 ஆயிரத்து 261 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
15-ஜூலை-201913:32:32 IST Report Abuse

J.Isaacகிராமங்களையும் நகரங்களையும் பார்த்தால்தான் தெரியும் நம் தூய்மை இந்தியா திட்டம் எவ்வளவு படுகேவலமாக இருக்கிறது என்று தெரியும். அதுபோலத்தான் கங்கை துய்மை திட்டமும். எத்தனையோ கோடி பணம் செலவழித்தும் குளிப்பதற்கும் குடிப்பதற்கும் ஏற்றதாக இல்லை என செய்தி வந்தது. அதுபோலதான் இதுவும் இருக்கும். பிளக் டாப்பிங் ரோடு வொய்ட் டாப்பிங் ஆகிறது போல ஏதோ ஒன்றோ இரண்டோ கார்ப்போரேட் கம்பெனிகள் பயடைய போகிறது.

Rate this:
sripa - muscat,ஓமன்
15-ஜூலை-201912:26:35 IST Report Abuse

sripaசபாஷ். மோடியின் தொலைநோக்கு பார்வை இந்தியாவை முன்னேறட்டுப்பாதைக்கு கொண்டு செல்லும் என்பதில் எந்த ஒரு ஐயம் இல்லை. ஜெய் மோடி சர்க்கார்.

Rate this:
15-ஜூலை-201909:39:00 IST Report Abuse

ஆப்பு... 15 லட்சத்தை உடுங்க... 100 நாள்ள எங்கே கருப்பு பணம் வெளீல கணாந்தாரு? 150 லட்சம் கோடி இருக்குன்னவர் வெறும் 96000 கோடி தான் காட்ட முடிஞ்சுது... 2 கோடி பேருக்கு வேலைன்னவர் 2 லட்சம் பேருக்குக் கூட வேலை தர முடியல...

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X