அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
வேலுார் வெற்றியை அபகரிக்க
ஆட்சியாளர்கள் முயற்சி: ஸ்டாலின்

சென்னை : 'பொதுத்தேர்தலில் படுதோல்வி அடைந்த மத்திய, மாநில ஆட்சியாளர்கள் அதே கூட்டணியுடன் வேலுார் தேர்தலில் அதிகாரத்தை பயன்படுத்தி வெற்றியை அபகரிக்க முடியுமா என ஆலோசித்து வருகின்றனர்' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஸ்டாலின், வேலூர் ,தேர்தல், அபகரிப்பு ,முயற்சி


அவரது அறிக்கை: தி.மு.க.வின் மீதும் அதன் கூட்டணி கட்சிகள் மீதும் மக்கள் வைத்த நம்பிக்கையின் வெளிப்பாடுதான் 37 எம்.பி.க்கள் மற்றும் 13 எம்.எல்.ஏ.க்களின் மகத்தான வெற்றி. தி.மு.க. மிட்டாயும் கொடுக்கவில்லை;மக்கள் குழந்தைகளும் இல்லை. 'நீட் தேர்வு விலக்குக்கு தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் ஆவன செய்கிறோம்' என மத்திய ஆட்சியாளர்கள் குச்சி மிட்டாய் கொடுத்தனர். அந்தக் குச்சி மிட்டாயை வாயில் கவ்வி தாங்களும் ஏமாந்து மக்களையும் ஏமாற்றியவர்கள் மாநில ஆட்சியாளர்கள்.


அதுபோல 'பொருளாதார இடஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தினால் 25 கூடுதல் இடங்கள் தருவோம்' என்கிற அடுத்த குச்சி மிட்டாயையும் மத்திய ஆட்சியாளர்கள் நீட்டியிருக்கின்றனர். அதையும் வாங்கி வாயில் மென்று தமிழகத்தின் நுாற்றாண்டு கால சமூக நீதிக் கொள்கைக்கு சவக்குழி வெட்டத் தயாராகி விட்டது முதல்வர் பழனிசாமி அரசு. பொதுத்தேர்தலில் படுதோல்வி அடைந்த மத்திய, மாநில ஆட்சியாளர்கள் அதே கூட்டணியுடன் வேலுார் தேர்தலில்

Advertisement

அதிகாரத்தை பயன்படுத்தி வெற்றியை அபகரிக்க முடியுமா என ஆலோசனை நடத்துகின்றனர். வேலுார் கோட்டை எப்போதும் தி.மு.க.வின் வெற்றிக் கோட்டை என்பதை கட்சியினர் நிரூபிக்க வேண்டும். சட்டசபை தொகுதி வாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களுடன் இணைந்து அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் கட்சியினர் களப் பணியாற்ற வேண்டும். வெற்றிப் பயணம் தொடரட்டும்; உரிமை போர்க்குரல் உயரட்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
16-ஜூலை-201918:47:46 IST Report Abuse

Natarajan Ramanathan. எவ்வளவு கேவலப்பட்டாலும் தீயசக்தி குடும்ப கொள்ளை கும்பலுக்கே திரும்ப திரும்ப ஓட்டு போடும் குணமுண்டு.

Rate this:
15-ஜூலை-201923:46:18 IST Report Abuse

padma rajanஒருவேளை தோற்றுவிட்டால் இப்போதே காரணம் கண்டுபிடித்து வைத்துள்ளீர்கள்.ண ஆனால் ஜெயிக்கப்போவது திமுக தான் அதில் ஒன்றும் சந்தேகமில்லை

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
15-ஜூலை-201917:53:30 IST Report Abuse

Malick Rajaஊமையன் கண்டகனவின் முடிவுதான் தமிழகத்தில் பாஜக கம்பெனிக்கு .. கடந்த பல தேர்தல்களிலும் பலவற்றையும் சொல்லி இப்போது பாஜக தமிழகத்தில் காணாமல் போய்விட்டது ..இருப்பினும் இருப்பை காண்பிக்க தொண்டர்கள் இல்லாத பாஜக தலைவர்கள் அப்பப்ப அள்ளிவிடுவதும் . ஆனால் அல்லிமுடியமுடியாமல் போவதும் வாடிக்கை .. பாஜகவின் கூலிப்படைகள் எவ்வளவூ கூவினாலும் தமிழகத்தில் தொ. த்த .தா ..தா .. தாமரைக்கு வாய்ப்பே இல்லை ..காரணம் தமிழக மக்களால் வாய்க்கரிசி போடப்பட்டு முடிந்து போன ஒன்று ..

Rate this:
மேலும் 39 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X