பொது செய்தி

இந்தியா

6 கோடி சுற்றுலா பயணியர்: குஜராத் அரசு எதிர்பார்ப்பு

Updated : ஜூலை 15, 2019 | Added : ஜூலை 15, 2019 | கருத்துகள் (17)
Share
Advertisement
6 கோடி, சுற்றுலா பயணியர், குஜராத், மாநிலம்

ஆமதாபாத்: நடப்பு நிதியாண்டில், ஆறு கோடிக்கும் அதிகமான சுற்றுலா பயணியர் வருவர் என, குஜராத் மாநில அரசு எதிர்பார்க்கிறது.

குஜராத்தில், முதல்வர், விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. குஜராத்துக்கு அதிக சுற்றுலா பயணியரை வரவழைக்கும் நோக்கில், அம்மாநில அரசு சார்பில், புதிய சுற்றுலா கொள்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது.மாநிலத்தில் தற்போது, 33 பாரம்பரிய நினைவிடங்கள் உள்ளன. 2016 - 17ல் மாநிலத்துக்கு, 4.48 கோடி சுற்றுலா பயணியர் வருகை தந்தனர்.


latest tamil newsஇது, 2018 - 19ல், 5.8 கோடியாக அதிகரித்தது. மாநிலத்தின் மொத்த வருவாயில், 3 சதவீதம், சுற்றுலா துறை வாயிலாக கிடைக்கிறது. வரும் ஆண்டுகளில், இது மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சுற்றுலா துறையின் வளர்ச்சிக்காக, நான்கு ஆண்டுகளில், மாநில அரசு சார்பில், 12 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.


latest tamil newsஇது பற்றி, மாநில சுற்றுலா துறை அமைச்சர், ஜவஜர் சாவ்டா கூறியதாவது:நடப்பு ஆண்டில், ஆறு கோடிக்கும் அதிகமான சுற்றுலா பயணியர் வருவர் என, எதிர்பார்க்கிறோம்.வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வருகையை அதிகரிக்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நர்மதா மாவட்டத்தில், ஒற்றுமைக்கான சிலையாக, 2,389 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள, 600 அடி உயரமுள்ள, சர்தார் படேல் சிலையை பார்வையிட, வார நாட்களில், 7,000 - 8,000 பேரும், விடுமுறை நாட்களில், 15 ஆயிரம் பேரும் வருகின்றனர்.இதுவரை, ஒற்றுமைக்கான சிலையை, 25 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டு உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
15-ஜூலை-201915:09:30 IST Report Abuse
Vijay D Ratnam தமிழ்வேல், முகப்பேர் மேற்கு, இந்தியா அவர்களே, ஒரு மாநிலத்தின் நலத்திற்கு மத்திய அரசு செய்யவில்லை நண்பரே. நம்ம திருவள்ளுவர் சிலை மாதிரி அரசுப்பணத்தில், மக்களின் வரிப்பணத்தில் படேல் சிலை அமைக்கப்படவில்லை. இந்த சிலை அரசுப்பணத்தில் செய்யவில்லை. குஜராத்தை தாண்டி வடமாநிலங்களில் யாரையும் கட்டாயப்படுத்தாமல் நாடு முழுக்க பொதுமக்களிடம் நிதி வசூல் செய்து உருவாக்கிய சிலை. இப்போது சுற்றுலா மூலம் வரும் வருவாய், இனி ஆண்டுக்கு ஆண்டு கோடிக்கணக்கில் குஜராத் மாநிலத்துக்கு குவிய போகிறது. நமது திருவள்ளுவர் சிலையை அவர் பிறந்த தமிழகத்தின் தலைநகரம் சென்னை மயிலாப்பூரில் அமைத்து இருந்தால் அதுமாதிரி வருவாய் கிடைத்திருக்கும்.ஆனால் மதமாற்ற மாஃபியாக்களின் விருப்பத்துக்காக ஹிந்துமத துறவி விவேகானந்தர் பாறையின் முக்கியத்துவத்தை குறைக்கவேண்டும் என்பதற்காக கன்னியாகுமரியில் அமைத்தார்கள்.
Rate this:
15-ஜூலை-201919:56:26 IST Report Abuse
பாமரன்இந்தியாவில் அதிக அளவில் அதாவது 39 கோடிக்கும் மேலான சுற்றுலா பயணிகளை கவரும் மாநிலம் தமிழ்நாடு... இன்னிக்கு மலரில் கூட நியூஸ் வந்திருக்கிறது. குசராத் எல்லாம் அந்த லெவலை இன்னும் நூறு வருடங்கள் ஆனாலும் எட்ட முடியாது. உங்களுக்கு சரியாக கூஜா தூக்க கூட வரலை...போங்க பாஸு......
Rate this:
Cancel
Kumar periyaar - Chennai,இந்தியா
15-ஜூலை-201914:33:31 IST Report Abuse
Kumar periyaar ஏழை மக்களுக்கு முதலில் உணவு பற்றாகுறையை போக்குங்கள்
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஜூலை-201909:21:03 IST Report Abuse
Janarthanan பாமரன் மக்கள் என்று இங்கு சில குரூப் வந்து இந்த சிலைக்கு ஆன செலவை ஏழைகள் முன்னேற உபயோகி படுத்தி இருக்கலாம் என்று போதிப்பார்கள், ஆனால் அவர்களின் சிக்குளர் தலைவர்களிடம் ஊழலில் சேர்ந்து உள்ள கோடி கணக்கான சொத்துக்கள் மட்டும் கண்ணுக்கு படாது??? அதையும் ஏழைகள் முன்னேற, வளர்ச்சிக்கு பயன் படுத்த குரல் கொடுப்பார்களா???உங்கள் தலைவர்கள் அவர்களுக்கு என்று வாழந்தததால் தான் ஏழைகள் உண்ணும் ஏழைகளாகவே இருக்கிறார்கள்?? இந்த சிலை கட்டும் போதும், கட்டிய பின்பும் பல பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X