பதிவு செய்த நாள் :
ரூபாய் நோட்டை அடையாளம் காண
'மொபைல் ஆப்' உருவாக்க முடிவு

புதுடில்லி : ரூபாய் நோட்டுகளை, பார்வையற்றோர் எளிதாக அடையாளம் காணும் வகையில், 'மொபைல் ஆப்' எனப்படும் செயலியை அறிமுகப்படுத்த, ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

பார்வையற்றோர், குறைபாடு, மொபைல் ஆப், ரூபாய், கேமரா


உலகில் சில நாட்டு ரூபாய்களில் மட்டுமே பிரெய்லி முறை இருக்கிறது. அதாவது பார்வையற்றோர் எளிதாக ரூபாய் நோட்டை அடையாளம் காணும் வகையில் அதில் சில அச்சுகள் இருக்கும். அந்த அடையாளங்களை வைத்து நோட்டுகளை அடையாளம் காண முடியும். இந்திய பணத்திலும் இந்த பிரெய்லி முறை இருக்கிறது. நம் நாட்டில், 80 லட்சத்துக்கும் மேற்பட்ட, பார்வையற்றோர் உள்ளனர். இவர்கள் ரூபாய் நோட்டுகளை எளிதில் அடையாளம் காணும் வகையில், 'இண்டக்லியோ' என்ற, அச்சு பதிப்பின் மூலம், நோட்டுகள் அச்சிடப்படுகின்றன. இந்த முறையின் மூலம், பார்வையற்றோர், ரூபாய் நோட்டுகளை தொட்டு அல்லது தடவிப் பார்த்து, அவற்றை அடையாளம் காண முடியும்.


ஆனால், தற்போது, 100 ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள நோட்டுகளில் மட்டுமே, இந்த வசதி உள்ளது. தற்போது ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டு புழக்கத்தில் உள்ளன. இதுதவிர, சில்லரை தட்டுப்பாட்டை நீக்க மத்திய அரசு அறிமுகம் செய்த ஒரு ரூபாய் நோட்டும் ஒரு சில இடங்களில் புழக்கத்தில் உள்ளது.

கடினமாக இருக்கிறது

டிமானிடைசேஷன் எனப்படும் பணமதிப்பிழப்பு நீக்கம் எல்லா மக்களையும் எப்படி பாதித்ததோ அதேபோல் பார்வையற்றோரையும் பாதித்துள்ளது. புதிய ரூபாய் நோட்டை அடையாளம் காண முடியாமல் அவர்கள் திணறிவருகிறார்கள். புதிய ரூபாய் நோட்டில் எது இரண்டாயிரம், எது ஐந்நூறு என்று தெரியாமல் குழம்பி வருகிறார்கள்.

உருவாக்க போகிறது

இந்த நிலையில் தான் பார்வை யற்றோரால் ரூபாய் நோட்டுகளை எளிதாக அடையாளம் காணும் வகையில் ஒரு ஆப் ஒன்றை வெளியிட இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது. ஆண்ட்ராய்ட் ஆப் ஒன்றை இதற்காக வெளியிட இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது. இதை உருவாக்கும் பணியில் ரிசர்வ் வங்கி ஈடுப்பட்டு வருகிறது. இதற்காக தனியார் அமைப்பு ஒன்றின் ஆதரவை நாடி இருக்கிறது. அந்த அமைப்பு குறித்த விவரம் வெளியாகவில்லை. ஆனால் அந்த அமைப்பு ஆண்ட்ராய்ட் உலகில் ஏற்கனவே நிறைய ஆப்களை வெளியிட்டு இருப்பதாகவும், இது புதிய ஆப் ஒன்றை எளிதாக உருவாக்கி கொடுக்கும் என்றும் கூறியுள்ளது.


இருப்பினும், பார்வைக்குறைபாடு உள்ளவர்கள் நூறு ரூபாய்க்கு மேல் உள்ள நோட்டை அடையாளம் காண சிரமப்படுவதாக கூறப்படுகிறது. மற்றபடி, 10, 20, 50 ஆகிய ரூபாய் நோட்டுகளில் இந்த வசதி இல்லை. 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின், புதிய நோட்டுகள், புதிய வடிவில் அச்சிடப்பட்டு வருகின்றன. இவற்றையும், பார்வை யற்றோரால், எளிதில் அடையாளம் காண்பதில் சிக்கல் உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், புதிய, 'மொபைல் ஆப்'பை உருவாக்க, ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இவற்றையும், பார்வை யற்றோரால், எளிதில் அடையாளம் காண்பதில் சிக்கல் உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், புதிய, 'மொபைல் ஆப்'பை உருவாக்க, ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

Advertisement

இதன்படி, ரூபாய் நோட்டுகளை, மொபைல் போன் கேமரா முன் காட்டினால், அது என்ன நோட்டு என்பதை, 'ஆடியோ' வாயிலாக கூறி விடும். இதற்கான, 'சாப்ட்வேர்' எனப்படும், மென்பொருளை உருவாக்குவதற்காக, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவி கோரப்பட்டு உள்ளது. ரூபாய் நோட்டுகளை, மொபைல் போன் கேமரா முன் காட்டினால், அது என்ன நோட்டு என்பதை, 'ஆடியோ' வாயிலாக கூறி விடும்.


இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ஏற்கெனவே உள்ள மகாத்மா காந்தி வரிசை ரூபாய் நோட்டு மற்றும் புதிய மகாத்மா காந்தி வரிசை ரூபாய் நோட்டு ஆகியவற்றை அடையாளம் காண முடியும். மொபைல் கேமராவில் படம் பிடிப்பது அல்லது கேமரா பகுதியில் நோட்டை தடவும்போது அடையாளம் காண்பது போன்ற வசதிகள் இதில் ஏற்படுத்தப்படும். அதுமட்டுமின்றி, ஆப்ஸ் ஸ்டோர்களில் இந்த ஆப்சை குரல் கட்டளைகள் மூலம் பெறவும் செயல்படுத்தவும் இருக்கும் வகையில் உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த ஆப் மொபைலில் இருக்கும் சென்சார்கள் மூலம் இயங்க கூடியது. மொபைலின் கேமராவில் ரூபாயை காட்டினால் அதுவே அதை ஸ்கேன் செய்து என்ன ரூபாய் என்று கண்டுபிடிக்கும். அடையாளங்களை வைத்து கண்டுபிடிக்கும். பின் ஸ்பீக்கர் மூலமாக அதை தெரிவிக்கும் என்று கூறப்படுகிறது.


Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasanth - Bangalore,இந்தியா
15-ஜூலை-201912:39:31 IST Report Abuse

vasanthஅடப்பாவிகளா என்ன ஆப் இது. பார்வையற்றோர் முதலில் ஆண்டராய்டு ஸ்மார்ட் போன் பயன்படுத்த வேண்டும். அதுவே கஷ்டம். விரல்ரேகை மூலம் போனை அன்லாக் செய்யும் வசதி இருக்க வேண்டும். பிறகு அந்த ஆப்பை ஓபன் செய்ய வேண்டும். கையால் தொட்டு ஓபன் பண்ணமுடியாது அதனால் குரல் மூலம் ஓபன் செய்ய வேண்டும். பிறகு நோட்டை எடுத்து குரல் மூலம் கேமராவை அந்த செய்து. நோட்டையும் கேமாராவிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவு வைத்து ஸ்கேன் செய்ய வேண்டும்.

Rate this:
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
15-ஜூலை-201908:08:33 IST Report Abuse

 Muruga Velஆப்புக்கே ஆப்பு தேவைப்படுதா

Rate this:
15-ஜூலை-201904:15:23 IST Report Abuse

ஆப்புஅது கள்ள நோட்டா இல்லியான்னு கண்டுபுடிக்க ஒரு ஆப்பு கண்டு புடிச்சா எல்லாருக்கும் உபயோகமா இருக்குமே...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X