பொது செய்தி

இந்தியா

சந்திரயான்-2 பயணம்: திடீர் ஒத்திவைப்பு

Updated : ஜூலை 15, 2019 | Added : ஜூலை 15, 2019 | கருத்துகள் (29)
Advertisement

ஸ்ரீஹரிகோட்டா: இன்று அதிகாலை ஏவப்பட இருந்த சந்திரயான் -2 பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது.






நிலவின் தென்துருவ பகுதிகளை ஆய்வு செய்ய இஸ்ரோ நிறுவனம் சந்திரயான்-2 செயற்கை கோளை இன்று அதிகாலை 2.51 மணிக்கு ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவு தளத்தில் இருந்து ஏவப்பட இருந்தது.இதற்கான கவுன்டவுன் நேற்று காலை முதல் துவங்கியது.







தொழில் நுட்ப கோளாறு:


இந்நிலையில் சற்று நேரத்தில் ஏவப்பட இருந்த சந்திரயான் -2 விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைனையடுத்து கவுன்டவுன் தற்காலிக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கின்ற0ன.
சிறு பிரச்னையால்தான் சந்திரயான் -2 தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பெரிய பின்னடைவு என்று சொல்ல முடியாது எனு விஞ்ஞானி நம்பி நாராயணன் தெரிவித்துள்ளார்.
பிஎஸ்எல்வி மார்க்-3 யில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ வெளியிட்டுள்ள டுவிட்டரில் தெரிவித்துள்ளது. ஏவப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
15-ஜூலை-201920:09:00 IST Report Abuse
venkatan வாழ்த்துக்கள்.தாமதமானாலும் வெற்றிக்காகவே.... புலி சற்று பின்னால் பதுங்குவது இலக்கை உறுதி செய்யவே...
Rate this:
Share this comment
Cancel
n.jayaraman - Chennai,இந்தியா
15-ஜூலை-201917:01:21 IST Report Abuse
n.jayaraman இம்மாதிரி ராக்கெட் அனுப்பும் போது இதெல்லாம் சகஜம் தான். கண்டு பிடித்த நமது விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள். வெற்றி நமதே.
Rate this:
Share this comment
Cancel
krishna - chennai,இந்தியா
15-ஜூலை-201915:04:35 IST Report Abuse
krishna நமது இஸ்ரோ உலகில் தலை சிறந்த விஞ்சானிகள் வசம் உள்ளது.அவர்களை கிண்டல் செய்வது தேச துரோகம்.செவ்வாய்க்கே சரியாய் மங்கள்யான் விட்ட டீமுக்கு நிலவு எல்லாம் ஜுஜுபி.கோளாறு இருந்தால் கொன்டடௌனில் நிறுத்துவது நல்ல செயல்.சரி செய்து வெற்றிகரமாக நிலவை பிடிக்க வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X