தமிழகத்தில் என்ஐஏ ரெய்டு எதிரொலி: டில்லியில் 14 பேர் கைது| Dinamalar

தமிழகத்தில் என்ஐஏ ரெய்டு எதிரொலி: டில்லியில் 14 பேர் கைது

Added : ஜூலை 15, 2019 | கருத்துகள் (45)
Share

புதுடில்லி : பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி திரட்டுவதாக எழுந்த புகாரில் டில்லியில் 14 பேரை தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) கைது செய்துள்ளனர்.



latest tamil news




பயங்கரவாத அமைப்புக்களுக்கு சிலர் நிதி திரட்டி வருவதாக வந்த புகாரை அடுத்து தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் தமிழகத்தில் நாகை, சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் நாகையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் எதிரொலியாக டில்லியில் இன்று (ஜூலை 15) காலை 14 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 14 பேரும் தனி விமானம் மூலம் டில்லியில் இருந்து சென்னை அழைத்து வரப்பட உள்ளனர்.


latest tamil news




சென்னையில் பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் 14 பேரும் இன்றே ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X