அதிருப்தி எம்எல்ஏ.,க்களை மிரட்டுகிறதா காங்.,?

Updated : ஜூலை 15, 2019 | Added : ஜூலை 15, 2019 | கருத்துகள் (11)
Advertisement

மும்பை : கர்நாடக அதிருப்தி எம்எல்ஏ.,க்களை சந்தித்து, பேசுவதுடன், மிரட்டல் விடுக்கவும் காங்., தலைவர்கள் முயற்சித்து வருவதால் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் மும்பை போலீசிடம் புகார் அளித்துள்ளனர்.





ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள கர்நாடகா எம்எல்ஏ.,க்கள் தற்போது மும்பையில் உள்ள சொகுசு விடுதியில் தங்கி உள்ளனர். ராஜினாமா கடிதம் குறித்து உடனடியாக முடிவு எடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் இதுவரை 15 எம்எல்ஏ.,க்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் நாளை (ஜூலை 16) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
இதற்கிடையில் குமாரசாமி அரசுக்கு எதிராக கர்நாடக சட்டசபையில் இன்று (ஜூலை 15) நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த பா.ஜ., வலியுறுத்தி உள்ளது. காங்., மற்றும் பா.ஜ., கட்சிகள் தங்கள் கட்சி நிர்வாகிகளை அழைத்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை, மேலும் ஒரு காங்., எம்எல்ஏ., அதிருப்தி தெரிவித்துள்ளார். இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்படுவது உறுதி செய்யபட்டால் உடனடியாக மும்பையில் உள்ள அதிருப்தி எம்எல்ஏ.,க்களை அழைத்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




இந்நிலையில், தங்களுக்கு மிரட்டல் இருப்பதால் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் மும்பை போலீசிடம் மனு அளித்துள்ளனர். அதில், மல்லிகார்ஜூன கார்கே, குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் எங்களை தொடர்பு கொண்டு பேச முயற்சித்து வருகின்றனர். உண்மையில் அவர்கள் மட்டுமின்றி மகாராஷ்டிரா, கர்நாடகாவை சேர்ந்த காங்., தலைவர்கள், நிர்வாகிகள் அல்லது வேறு எந்த அரசியல் தலைவரையும் சந்திக்க நாங்கள் தயாராக இல்லை. அவர்களிடம் இருந்து எங்களுக்கு மிரட்டல் வர வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
ஒருவேளை காங்., அமைச்சர்கள் தங்களை சந்திக்க முயற்சித்தால் அது தொடர்பாகவும் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட உள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளனர். எம்எல்ஏ.,க்கள் 14 பேர் கையெழுத்திட்ட புகார் கடிதத்தை போலீசில் அளித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohankumar - Trichy,இந்தியா
15-ஜூலை-201921:00:02 IST Report Abuse
mohankumar ஒரு வேளை காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தலில் வென்றிருந்தால் நீங்கள் எல்லோரும் சேர்ந்து பிஜேபி யை உண்டு இல்லை என ஆக்கி இருப்பீர்கள் .
Rate this:
Share this comment
Cancel
mohankumar - Trichy,இந்தியா
15-ஜூலை-201920:58:00 IST Report Abuse
mohankumar காங்கிரஸ் முன்பு நடத்திய பாவங்கள் இப்போது எதிர் வினையாகி கொண்டிருக்கிறது செய்த பாவங்கள் கொஞ்ச நஞ்சமா அல்போன்ஸ் அவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ
Rate this:
Share this comment
Cancel
Suri - Chennai,இந்தியா
15-ஜூலை-201915:56:37 IST Report Abuse
Suri தன் சொந்த மகளையே மிரட்டும் உத்தர பிரதேச பீ ஜே பீ MLA குறித்து எழுத மாட்டீர்கள் தானே??
Rate this:
Share this comment
vivek c mani - Mumbai,இந்தியா
15-ஜூலை-201921:03:51 IST Report Abuse
vivek c maniஅது போல தமிழ்நாட்டுல , உங்கள சார்ந்தவங்க வீட்டுல நடக்கறதில்லயா? அதையுந்தான் எழுதறது. பிஜேபினா தனி ருசியோ?...
Rate this:
Share this comment
Ramesh Lal - coimbatore,இந்தியா
15-ஜூலை-201922:56:09 IST Report Abuse
Ramesh Lalபி. ஜெ.பி. இடம் புரளும் கொள்ளை , கொள்ளைகளை கண்டு வயித்தெரிச்சல்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X