அரசியல் செய்தி

தமிழ்நாடு

இந்தி திணிப்பு சர்ச்சை ; சட்டசபையில் காரசாரம்

Updated : ஜூலை 15, 2019 | Added : ஜூலை 15, 2019 | கருத்துகள் (58)
Advertisement

சென்னை : தமிழகத்தில் நடந்த தபால்துறை தேர்வில் தமிழை அனுமதிக்காததை கண்டித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போதான விவாதத்தில் அதிமுக- திமுக இடையே காரசார விவாதம் நடந்தது. பின் திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.


கவன ஈர்ப்பு தீர்மானம் :

திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, அண்மையில் நடந்த தபால்துறை தேர்வில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. தமிழை தேர்வில் கடைசி நேரத்தில் அனுமதிக்கவில்லை. இதுகுறித்து சபையில் விவாதிக்க வேண்டுமென கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

லோக்சபாவில் பேசுங்கள் :

இதில் அதிமுக சார்பில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ''லோக்சபாவில் உள்ள திமுக உறுப்பினர்கள் 37 பேரும் இதுகுறித்து அங்கு குரல் எழுப்ப வேண்டும்,'' என்றார். பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ''திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பை நோக்கமாக கொண்டு, இதுபோன்ற பிரச்னைகளை எழுப்புகின்றனர். லோக்சபாவில் இப்பிரச்னை குறித்து மத்திய அரசு பதிலளித்த பின்னர்தான் தமிழக அரசு இது குறித்து நிலை எடுக்க முடியும்,''என்றார்.

காங்கிரஸ் இந்தியை எதிர்க்குமா?

துணைமுதல்வர் பன்னீர்செல்வம், '' இப்போது இந்தி திணிப்பிற்கு எதிராக பேசும் காங்கிரஸ், நாடாளுமன்றத்தில் மும்மொழிக்கொள்கை தான் ; இந்தியை எதிர்க்கிறோம்,'' என்று பேசமுடியுமா?'' என்றார்.


இந்தி திணிப்பு ; துரைமுருகன்

திமுக பொருளாளர் துரைமுருகன், '' இந்தி எதிர்ப்பு குறித்த எங்களது உணர்வை, முதல்வர் கொச்சை படுத்துகிறார். இப்பிரச்னையில் அதிமுகவுக்கும் திமுகவுக்கு ஒரே கருத்தென்றால், மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றலாமா, தயாரா?,'' என்று கேட்டார்.


அதிமுக மீது குற்றச்சாட்டு :

பின்னர், முதல்வரை கண்டித்து திமுக உறுப்பினர்களும், காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். பின்னர் அங்கு செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், '' மத்திய அரசு, எல்லாத்துறையிலும் இந்திமொழியை திணித்து வருகிறது.


அஞ்சலக தேர்வில் இந்தி நுழைப்பு தொடர்பாக எழுந்த வாதத்தின் போது முதலமைச்சர் பழனிச்சாமி பேசியதைக் கண்டித்து வெளிநடப்பில் ஈடுபட்ட தி.மு.க.வினர். அப்போது நடக்கமுடியாமல்  படியின் கைப்பிடியை தாங்கி வந்த துரைமுருகன்.  இடம்-தலைமைச் செயலகம்.

அஞ்சலக தேர்வில் இந்தி நுழைப்பு தொடர்பாக எழுந்த வாதத்தின் போது முதலமைச்சர் பழனிச்சாமி பேசியதைக் கண்டித்து வெளிநடப்பில் ஈடுபட்ட தி.மு.க.வினர். அப்போது நடக்கமுடியாமல் படியின் கைப்பிடியை தாங்கி வந்த துரைமுருகன். இடம்-தலைமைச் செயலகம்.
ஆனால், அதிமுக கண்டித்து மட்டுமல்ல மத்திய அரசை வலியுறுத்திக்கூட தீர்மானம் நிறைவேற்ற மறுக்கிறது. அதிமுக அரசு, மத்திய அரசு தமிழகத்தின் மீது இந்தியை திணித்தாலும், ஏற்றுக்கொள்ளும்,'' என்றார்.


அஞ்சலக தேர்வில் இந்தி நுழைப்பு தொடர்பாக எழுந்த வாதத்தின் போது முதலமைச்சர் பழனிச்சாமி பேசியதைக் கண்டித்து வெளிநடப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்.எல்.ஏ. அபுபக்கர். இடம்-தலைமைச் செயலகம்.

அஞ்சலக தேர்வில் இந்தி நுழைப்பு தொடர்பாக எழுந்த வாதத்தின் போது முதலமைச்சர் பழனிச்சாமி பேசியதைக் கண்டித்து வெளிநடப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்.எல்.ஏ. அபுபக்கர். இடம்-தலைமைச் செயலகம்.
100 மடங்கு உணர்வு

வெளிநடப்புக்கு பின்னர் சட்டசபையில் தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, '' எதிர்க்கட்சியினரைவிட எங்களுக்கு 100 மடங்கு மொழி உணர்வு உள்ளது. தபால்துறை தேர்வில் தமிழில் எழுத அனுமதிக்கும் வரை தமிழக அரசு தொடர்ந்து போராடும்,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
16-ஜூலை-201907:24:50 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> எதையும் யாரும் திணிக்கவே இல்லீங்க படிச்சால் நல்லது நீங்கதான் ஹிந்தி தெரியமலே வாழ்ந்தாச்சு உங்கபிள்ளை பெண்ணுகள் படிச்சா நல்லது என்று எண்ணினால் படிக்கவுடுங்க இல்லியாமுக குடும்பம்போல இல்லாமல் உங்கள்வாரிசுகளும் லபோதிபோன்னு கைத்தொண்டுக்குதிக்கட்டும் வடக்கிருந்து பஞ்சம்பிழைக்கவரும் பலகுடும்பங்கள் வேலைசெய்து தமிழ் பாஷையும் கத்துக்குறாங்க ஏமாந்தால் கொள்ளையும் அடிச்சுட்டு போடறானுக
Rate this:
Share this comment
Maha - Herndon,யூ.எஸ்.ஏ
16-ஜூலை-201911:27:47 IST Report Abuse
Mahaஹிந்தி, என்பது, Urdu, பார்சி, சமஸ்க்ரித கலவை..Urdu mostly in Pakistan....Farsi is Iranian background....My history book taught me Sanskrit came from Central Asia, countries like Uzbekistan, Why do they push Hindi as its mix of foreign origin languages?...
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஜூலை-201912:37:10 IST Report Abuse
தமிழ்வேல் நமக்கு வர்ற கவர்ல தமிழில் அட்ரஸ் எழுதி இருந்தா, போஸ்ட்ல வேலைசெய்ற தமிழ் தெரியாதவங்க அதை என்ன பண்ணுவாங்க ?...
Rate this:
Share this comment
Cancel
G.S.KRISHNAMURTHI - chennai,இந்தியா
16-ஜூலை-201903:52:05 IST Report Abuse
G.S.KRISHNAMURTHI ஏங்க துரைமுருகன் உங்க பையன்MP நிக்கறப்போலே இருக்க இந்தி தெரியாதா மத்தியில அமைச்சராயிருந்து இந்தி தெரியாமையாஊழல் பண்ணீங்க உங்களுக்கு பள்ளி மருத்துவக்கல்லூரி இருக்காமே .இந்தி இல்லையா 37 பேரு இருக்கீங்களே அங்கே போய் கூச்சல் போடறதுதானே
Rate this:
Share this comment
Cancel
tamizha tamizha - Bellevue,யூ.எஸ்.ஏ
16-ஜூலை-201902:57:53 IST Report Abuse
tamizha tamizha இங்கே பேசப்படுவது ஹிந்தி திணிப்பை பற்றி... ஹிந்தி கற்றுக்கொள்ள யாரும் தடை விதிக்கவில்லை... ஆட்டு மந்தைபோல் இருக்க வேண்டுமானால் ஹிந்தி கற்றுகொள்ளுங்கள்.. யார் தடுத்தது... 22 மொழிகள் அரசு பதிவேட்டில் உள்ளபோல்ழுது ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டும் தேர்வு என்பது.. சுத்த யோகியதானம்.. இதே திராவிட காட்சிகள் தான் மிகவும் பின்தங்கிய இடதிதில் இருந்த தமிழகத்தை இன்று இந்தியாவிலேயே இரண்டாவது முன்னேறிய மாநிலமாக மாற்றியது... ஹிந்தி எந்தவகையிலும் நம்மக்கு தேவை இல்லை..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X