கர்நாடகாவில் கோடிகள் புரளுது: சந்தேகம் வளருது

Updated : ஜூலை 15, 2019 | Added : ஜூலை 15, 2019 | கருத்துகள் (62)
Advertisement

பெங்களூரு: கர்நாடக அரசியலில் பதற்றம் துவங்கியது முதல், தங்கள் கட்சி எம்எல்ஏ.,க்களை தக்கவைத்துக் கொள்ள இதுவரை காங், மஜத, பா.ஜ., ஆகிய 3 கட்சிகளும் கோடிக்கணக்கில் பணத்தை செலவிட்டு வருகின்றன. இந்த பணம் யாருடையது என்ற கேள்வி நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சாமானிய மக்களின் மனதிலும் எழுந்துள்ளது.





ஆளும் கட்சியை சேர்ந்த 13 எம்எல்ஏ.,க்கள் ஜூலை 6 அன்று ராஜினாமா கடிதம் அளித்தது முதல் எம்எல்ஏ.,க்களை ரிசார்ட்களிலும், நட்சத்திர ஓட்டல்களிலும் தங்க வைப்பதற்காக இந்த 3 கட்சிகளும் கோடிக்கணக்கான பணத்தை வாரி இறைத்து வருகின்றன.
கட்சி தாவிய அதிகமான அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் பெங்களூருவிற்கும், மும்பைக்கும் சென்று வர தனி விமானம், அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவதற்காக வக்கீல்களுக்கு என சில பல லட்சங்கள் செலவிடப்பட்டுள்ளது.
தற்போது கிடைத்துள்ள தகவலின் படி, எம்எல்ஏ.,க்களை தக்கவைக்க ஒவ்வொரு எம்எல்ஏ.,விற்கும் சராசரியாக ரூ.20 கோடி வரை கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர மும்பையிலும், பெங்களூருவிலும் எம்எல்ஏ.,க்கள் தங்குவதற்கு ஓட்டல் மற்றும் ரிசார்ட்களுக்கு நாள் ஒன்றிற்கு ரூ.4000 முதல் ரூ.11,000 வரை செலவிடப்பட்டுள்ளது.




சிறப்பு விமானம் மூலம் பெங்களூருவில் இருந்து மும்பைக்கு சென்று வர ஒருமுறைக்கு ரூ.4 லட்சம் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் இதுவரை சுமார் 5 முறை சிறப்பு விமானங்களில் பயணித்துள்ளனர். இதுதவிர சில அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் மகாராஷ்டிராவில் உள்ள கோயில்களை சுற்றி பார்க்கவும் சிறப்பு விமானங்களை பயன்படுத்தி உள்ளனர். எம்எல்ஏ.,க்கள் தங்குவதற்கு ஓட்டல் அறைகளுக்கு மட்டும் சில நாட்களில் ரூ.50 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கெல்லாம் யார் பணம் செலவிடுகிறார்கள் என கேள்வி எழுப்பிய போது, தங்களின் சொந்த பணத்தை செலவிடுவதாக அதிருப்தி எம்எல்ஏ.,க்களும், பா.ஜ., தான் இதன் பின்னணியில் இருப்பதாக காங்-மஜத.,வும் கை காட்டுகின்றன. ஆனால் உண்மையில் யார் பணம் செலவிடுகிறார்கள் என யாரும் தெளிவாக கூறவில்லை.




இதன் பின்னணியில் பா.ஜ., இல்லை என்றால், அதிருப்தி எம்எல்ஏ.,க்களுக்கு அவர்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் சிறப்பு விமானம் எப்படி கிடைத்தது என சமீபத்தில் காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பி இருந்தார். எம்எல்ஏ.,க்களை தக்க வைக்க 3 கட்சிகளும் கோடிக்கணக்கான பணத்தை கைமாற்றுவது இது முதல் முறையல்ல.
கடந்த 14 மாதங்களில் இந்த 3 கட்சிகளும் 3 முறை தங்களின் எம்எல்ஏ.,க்களை சொகுசு விடுதிகளில் தங்க வைத்துள்ளன. இதற்கும் யார் பணம் செலவிட்டார்கள் என இதுவரை தெரியவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sitaraman Munisamy - SALEM,இந்தியா
16-ஜூலை-201910:03:40 IST Report Abuse
Sitaraman Munisamy இதைப்பற்றியெல்லாம் கருத்தில் கொள்ளாது, சபாநாயகர் உடனே முடிவு எடுக்க வேண்டும் என்று அதிகார தொனியில் உத்திரவு இடுகிறது.
Rate this:
Share this comment
Cancel
16-ஜூலை-201909:06:44 IST Report Abuse
ஸாயிப்ரியா Side income அல்லது மக்களின் வரிப்பணம் தான்.
Rate this:
Share this comment
Cancel
சீனி - Bangalore,இந்தியா
16-ஜூலை-201906:45:53 IST Report Abuse
சீனி காசை எப்படி கரியாக்குவது என்பது அரசியல்வாதிகளுக்கு ஏற்க்கெனவே கைவந்த கலை. எரியும் வீட்டில் எவ்வளவு பிடிங்கினால் என்ன, என்ற மனநிலையில் இருக்கும் இவர்கள் அனைவரும் உருப்படாமல் போவர் என்பது மட்டும் நிஜம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X