ரயில்வேயில் ஊழல்:'களை' எடுக்க ஆவல்

Updated : ஜூலை 15, 2019 | Added : ஜூலை 15, 2019 | கருத்துகள் (28)
Advertisement

புதுடில்லி: ரயில்வே துறையில் ஊழல் அதிகாரிகளை 'களை ' எடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்கான கண்காணிப்பு வேலை துவங்கி விட்தாகவும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.






லண்டனில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் நிருபர்களிடம் பேசுகையில்; மத்திய அரசு 2 வது முறை பொறுப்பேற்ற பின்னர் , ஊழலை முற்றிலுமாக ஒழிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதற்கு உதாரணமாக மத்திய நிதி மற்றும் வரித்துறையில் கமிஷனர்கள் பொறுப்பில் உள்ள 15 க்கும் மேற்பட்டவர்கள் கட்டாய ஓய்வில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


மற்றவர்களுக்கும் பாடம்







இது போல் ரயில்வே துறையில் களை எடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. ஊழல் புரியும் அதிகாரிகள் யார் என கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இது விரைவில் வெளிச்சத்திற்கு வரும் போது பணி விலகல் உத்தரவு பிறப்பிக்கப்படும். இது போன்ற நடவடிக்கைகள் தவறு செய்ய நினைக்கும் மற்றவர்களுக்கும் பாடமாக அமையும். இவ்வாறு கோயல் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopi - Chennai,இந்தியா
16-ஜூலை-201917:05:22 IST Report Abuse
Gopi முதற் கட்டமாக அரசாங்க ஊழியர்கள் , கவுன்சிலர்கள், எம்பி எம் எல் ஏ க்களின் சொத்துக்களை ஆதாரில் இணைக்க சொல்லுங்கள். அது போதும்
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
16-ஜூலை-201916:33:56 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கர்நாடகாவில் ஆட்சியை கவுக்க தனி விமானம் கால் டாக்சி மாதிரி, அம்புட்டு களவாணிகளையும் ஸ்டார் ஓட்டலில் வெச்சி 20 நாளா கவனிக்கிறது, அதுக்கு மேலே அவர்களுக்கு ஆளுக்கு 10-20 கோடி லஞ்சம்..
Rate this:
Share this comment
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
16-ஜூலை-201909:24:07 IST Report Abuse
Appan எழுபதுகளில் சீனா ரயில்வே இந்திய ரயில்வேயை விட மோசமாக இருந்தது.. ஆனால் இப்போ உலகிலே சீனா தான் ரயில்வேயில் முன்ணணியில் உள்ளது.. இது எதனால்.? அங்கு ரயில்வேயில் ஊழல் செய்தால் மரண தண்டனை கொடுக்கிறார்கள்.ஏன் என்றால் எந்த ஒரு தவறும் ரயில்வேயில் விபத்தில் முடிந்து பொது ஜனங்கள் சாவார்கள்..இந்திய ரயில்வே ஊழலுக்கு ஒரு எடுத்து காட்டு. இந்திய ரயில்வேயில் கண்டுபிடிப்புகளுக்காக RDSO லக்னவுவில் மையம் அமைத்து உள்ளார்கள்..இந்த 76 வருடங்களில் RDSO என்ன கண்டு பிடிதத்து என்று யாரவது சொல்ல முடியுமா..> மாற்றாக இங்கு Standards Documents வாங்குவதற்க்கே லஞ்சம் கொடுக்கணும்..இதை யாரிடம் சொல்வது..? ஆனால் இந்திய விண்வெளி, அணுசக்தி ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ளது..இவைகள் சுதந்திரத்திற்கு பின் இந்தியர்களால் நிர்மாணிக்க பட்ட அமைப்புகள்.. ரயில்வேயில் இன்னும் வெள்ளைக்காரர்கள் விட்டு சென்ற டெக்னோலஜி, அமைப்புகளை வைத்து உள்ளது..சரக்கு ரயில் போக்குவரத்தை இன்னும் முழுமையாக கணினிமயம் செய்யவில்லை.. ஏனென்றால் இவர்களின் கிம்பளம் குறைந்து விடும்..போதாதற்கு அரசியல்வாதிகள் ரயில்வேயை பணம் பண்ணும் துறையாக பார்க்கிறார்கள்.. பீகாரின் லல்லு பிரசாத் வாழ்க்கையை அரசாங்கத்தில் ஒரு பியூனாக வாழ்க்கையை தொடங்கினார்..இப்போ...அவருக்கு 11 குழந்தைகள்.. ஒவ்வொருவரின் சொத்தும் 10000 கோடிக்கு மேல்..அதாவது இவர் சுமார் ஒரு லட்சம் கோடி அரசியலில் சம்பத்து உள்ளார்.. தமிழகத்தின் திமுக தலைவரும் இதை விட அதிகம் சம்பாதித்து உள்ளார்..அரசு வேலை என்றால் சம்பளம், கிம்பளம் என்ற எண்ணம் உள்ள நாட்டில் என்ன பண்ண முடியும்..? ரயில்வேயில் ஊழல் செய்தவர்களுக்கு மரண தண்டனை தர வேண்டும்,.. அப்போ தான் ரயில்வே மாறும்..மது தாண்டவதே , ஜார்ஜ் பெர்னான்டர்ஸ் ..போன்றவர்கள் ரயில்வேயில் ஊழலை அழிக்க முயன்றார்கள்..அவர்கள் தான் மாண்டார்கள்..ரயில்வே இன்னும் மாறவில்லை..எதோ ரயில்வே மாற்றத்திற்கு டிக்கெட் ரெசர்வசேனை போற்றும் படி கனினிமயம் ஆக்கி உள்ளார்கள்.. இதுபோல் எல்லா துறைகளிலும் ரயில்வேயில் மாற்றம் வரணும்.. ஏனென்றால் நாட்டின் productivity -உற்பத்தி திறன் போக்குவரத்தை சார்ந்தது.. கோயல் முயற்சிக்கிறார்..வெற்றி பெற வாழ்த்துக்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X