ரயில்வேயில் ஊழல்:களை எடுக்க ஆவல்| Dinamalar

ரயில்வேயில் ஊழல்:'களை' எடுக்க ஆவல்

Updated : ஜூலை 15, 2019 | Added : ஜூலை 15, 2019 | கருத்துகள் (28)

புதுடில்லி: ரயில்வே துறையில் ஊழல் அதிகாரிகளை 'களை ' எடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்கான கண்காணிப்பு வேலை துவங்கி விட்தாகவும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.






லண்டனில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் நிருபர்களிடம் பேசுகையில்; மத்திய அரசு 2 வது முறை பொறுப்பேற்ற பின்னர் , ஊழலை முற்றிலுமாக ஒழிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதற்கு உதாரணமாக மத்திய நிதி மற்றும் வரித்துறையில் கமிஷனர்கள் பொறுப்பில் உள்ள 15 க்கும் மேற்பட்டவர்கள் கட்டாய ஓய்வில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


மற்றவர்களுக்கும் பாடம்







இது போல் ரயில்வே துறையில் களை எடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. ஊழல் புரியும் அதிகாரிகள் யார் என கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இது விரைவில் வெளிச்சத்திற்கு வரும் போது பணி விலகல் உத்தரவு பிறப்பிக்கப்படும். இது போன்ற நடவடிக்கைகள் தவறு செய்ய நினைக்கும் மற்றவர்களுக்கும் பாடமாக அமையும். இவ்வாறு கோயல் தெரிவித்தார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X