பாபர் மசூதி இடிப்பு வழக்கு; அவகாசம் கேட்கிறார் நீதிபதி

Updated : ஜூலை 15, 2019 | Added : ஜூலை 15, 2019 | கருத்துகள் (5)
Advertisement

புதுடில்லி : உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணையை முடிக்க, கூடுதல் அவகாசம் தரும்படி, சிறப்பு நீதிமன்ற நீதிபதி கேட்டுள்ளார்.






உ.பி., மாநிலம் அயோத்தியில் இருந்த, பாபர் மசூதி, 1992 டிசம்பரில் இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் இருந்து, பா.ஜ., மூத்த தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மசூதி இடிக்கப்பட்டபோது முதல்வராக இருந்த கல்யாண் சிங் உள்ளிட்டோரை விடுவித்து, அலகாபாத் உயர் நீதி மன்றம், 2001ல் உத்தரவு பிறப்பித்தது.






விசாரணை


இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்றம், 'அத்வானி உள்ளிட்டோர் மீதான வழக்கை, மீண்டும் விசாரிக்க வேண்டும்' என, 2017 ஏப்ரலில் உத்தரவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தது. இந்த வழக்குகை, ரேபரேலியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து, லக்னோவில் உள்ள, அயோத்தி தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றவும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.






பதிலளிக்க வேண்டும்


இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும், சிறப்பு நீதிமன்ற நீதிபதி, இந்தாண்டு மே மாதத்தில், உச்ச நீதிமன்றத்துக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில், 'இந்தாண்டு, செப்., 30ல் ஓய்வு பெற உள்ளேன். அதனால், வழக்கை விசாரிக்க, கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்' என, கூறியிருந்தார். உச்ச நீதிமன்ற நீதிபதி, ஆர்.எப்.நாரிமன் தலைமையிலான அமர்வு முன், இந்தப் பிரச்னை கொண்டு வரப்பட்டது.

அப்போது, 'சிறப்பு நீதிபதிக்கு, மேலும், ஆறு மாதங்கள் பதவி நீட்டிப்பு வழங்குவது குறித்து ஆராய்ந்து, வரும், 19க்குள் பதிலளிக்க வேண்டும்' என, உத்தர பிரதேச அரசுக்கு, உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஜூலை-201912:11:26 IST Report Abuse
தமிழ்வேல் அப்போ தப்பிச்சுக்குவாரு...
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
16-ஜூலை-201906:18:58 IST Report Abuse
Darmavan பதவி நீட்டிப்புக்கு ஆசைப்படும் நீதிபதி அதற்காகவே வழக்கை இழுக்கும் நீதிகள் /கமிஷன்கள் இவர்களிடம்/இந்த சுய நலமிகளிடம் தர்மத்தை நீதியை எதிர்பார்க்க முடியுமா. ஹிந்து கலாச்சாரப்படி அரசுதான் நீதிமன்றத்தை விட உயர்ந்தது. அரசிடம்தான் மக்கள் தன் அதிகாரத்தை கொடுத்துள்ளார்கள்... தற்கால ஆங்கிலேய அடிமை முறை மாற வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
16-ஜூலை-201902:07:06 IST Report Abuse
ஆப்பு இதெல்லாம் விசாரிச்சு தீர்ப்பு சொல்லக்கூடிய வல்லமை தனக்கில்லைன்னு ஒரு நீதிபதியும் சொல்ல மாட்டேங்குறாரு.... வாய்தா, பதவி நீட்டிப்பு, கூடுதல் அவகாசம் இதே பல்லவிதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X