தி.மு.க., - எம்.பி., ராஜா கடும் எதிர்ப்பு

Added : ஜூலை 15, 2019 | கருத்துகள் (30)
Advertisement
தி.மு.க., - எம்.பி.,  ராஜா கடும் எதிர்ப்பு

''பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக, அமெரிக்காவில் உள்ளதைப் போல சட்டம் கொண்டு வருவதாக கூறாதீர்கள். அந்த சட்டத்தின் கதையே வேறு. மத்திய அரசு கொண்டு வந்துள்ள, இந்த சட்ட திருத்தம் வேறு,'' என, தி.மு.க., - எம்.பி., ராஜா, பேசினார்.

என்.ஐ.ஏ., சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தில், அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிராக குற்றம் இழைக்கும் வெளிநாட்டவரை, அந்நாட்டிற்கே போலீஸ் சென்று, கைது செய்து, விசாரணை நடத்துவதற்காக, இச்சட்டத்திருத்தம் கொண்டு வருவதாக கூறுகிறீர்கள். சரி, எத்தனை நாடுகள், இதற்கு சம்மதிக்கும் என, நம்புகிறீர்கள்? இச்சட்டத்தை, அப்போதைய, உள்துறை அமைச்சர், சிதம்பரம் அறிமுகம் செய்த போது, நானும் சபையில் இருந்தேன். மசோதாவை, எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.

அதற்கு சிதம்பரம், 'தயவுசெய்து ஆதரவு தாருங்கள். குறைகள் இருந்தாலும், இது போன்ற சட்டம் இருந்தால் தான், பயங்கரவாதிகளுக்கு பயம் வரும்' என்றார். இந்த சட்டத்தின் மூலம், தண்டனை பெற்றவர்களில், சிறுபான்மையினர் எத்தனை பேர் என்பது தெரிய வேண்டும்.அரசியல் சட்டத்தில், 'இந்தியா என்பது பாரதம்' என்றே உள்ளது. ஆனால், 'இந்தியா என்பது இந்துஸ்தான்' என கருதி, ஆட்சி நடத்துகிறீர்கள். எனவே, சிறுபான்மையினருக்கு அச்சம் உள்ளது. அதை போக்கும் வகையில், இச்சட்டத்தை பயன்படுத்த வேண்டும்.

அமெரிக்காவில், இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டவுடன், அமெரிக்கா இதே மாதிரி சட்டத்தை கொண்டு வந்த போது, 'அமெரிக்கர்கள் யாருக்கும் பொருந்தாது; வெளிநாட்டு பயங்கரவாதிகளுக்கு மட்டுமே பொருந்தும்' என்றனர். ஆனால், இந்த சட்டம், இந்தியர்களுக்கு பொருந்தும். எனவே, அமெரிக்காவைப் பார்த்து, சட்டத்தை கொண்டு வருவதாக கூறாதீர்கள். இச்சட்டத்தின் மூலம், இடதுசாரி தீவிரவாதத்தையும் கட்டுப்படுத்துவோம் என்கிறீர்கள். நாட்டில், இடதுசாரி தீவிரவாதம் மட்டுமல்லாது, வலதுசாரி தீவிரவாதமும் உள்ளது. அதை சரிசெய்ய, எப்போது சட்டம் கொண்டு வரப்போகிறீர்கள்? இவ்வாறு, ராஜா பேசினார்.

மசோதா மீது, காங்கிரசை சேர்ந்த, மணிஷ் திவாரி, பா.ஜ.,வைச் சேர்ந்த, சத்யபால் சிங், பிஜு ஜனதா தளத்தின், மகதாப், தேசியவாத காங்கிரசின், சுப்ரியா சுலே, பகுஜன் சமாஜ் கட்சியின், டேனிஷ் அலி, ஆர்.எஸ்.பி.,யின், பிரேமசந்திரன் போன்றோர் பேசினர்.
- நமது டில்லி நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
southindian - chennai,இந்தியா
22-ஜூலை-201915:17:16 IST Report Abuse
southindian கோவை, சென்னை இன்னும் பல ஊர்களில் குண்டு வெடிச்சது நீங்களா சார் . இந்த சட்டம் யார் குற்றவாளிகளோ அவர்களை தண்டிக்க மட்டும் தான் . காஸ்மீர் காவெர்னெர் சொன்னது சரிதான்
Rate this:
Share this comment
Cancel
bellie kumar - jubail,சவுதி அரேபியா
22-ஜூலை-201903:32:11 IST Report Abuse
bellie kumar நீலகிரி தொகுதியிலிருந்து தேர்வாகி சென்று நீலகிரி யில் மக்கள் தேயிலை தொழில் நலிந்து நசிந்து மக்கள் அன்றாட தேவைகளுக்கு அல்லாடும் நிலையில் ராசா அதைப்பற்றி ஒன்றும் பேசாமல் nia பற்றி பேசுவது நீலகிரி மக்களை கேலி செய்வதாகவே உள்ளது. இவரை சொல்லி ஒன்றும் குற்றமில்லை , வெற்றிபெற செய்த அடிமை மக்களுக்ககே இந்த பெருமை சேரும்.
Rate this:
Share this comment
Cancel
Tamilselvan - Chennai,இந்தியா
22-ஜூலை-201900:03:24 IST Report Abuse
Tamilselvan மக்கள் சொத்துக்களை கொள்ளை அடிப்பார். அதை மறைப்பதற்கு சிறுபான்மை மக்கள்,மத சார்பின்மை என்று பொய் வேடம் போடுவர். மக்கள் சொத்துக்களை ஊழல் செய்து கொள்ளை அடுத்தவர்களை மீண்டும் விசாரித்து உள்ளே தள்ள வேண்டும். அவர்களிடம் இருந்து மீட்கும் பணம்,நாட்டின் பண பற்றாக்குறையை,பல மடங்கு குறைக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X