எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பாடாவதி!
தமிழகத்தில் பாடாவதி பஸ்கள் இயக்கம்;
விரைவு போக்குவரத்து கழகம் பாரபட்சம்

அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், புதிய பஸ்களை, வெளி மாநிலங்களுக்கு இயக்கிவிட்டு, தமிழக நகரங்களுக்கு இடையே, பழைய பாடாவதி பஸ்களை இயக்குவதாக, புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் பாடாவதி பஸ்கள் இயக்கம்; விரைவு போக்குவரத்து கழகம் பாரபட்சம்


அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின், 25 கிளைகள் மூலம், 1,220 பஸ்கள், 1,020 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. 2011ல், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல், விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு,

ஆண்டுதோறும் புதிய பஸ்கள் வாங்கப்படுகின்றன. இதன்படி, எட்டு ஆண்டுகளில், 600 புதிய பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த பஸ்கள் அனைத்தும், பெங்களூரு, திருப்பதி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, எர்ணாகுளம் ஆகிய வழித்தடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, இயக்கப்படுகின்றன.

இந்த வழித்தடங்களில், ஏற்கனவே இயக்கப்பட்ட பாடாவதி பஸ்கள், தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் வந்த, 150 புதிய பஸ்களும், வெளிமாநிலங்களுக்கே இயக்கப்படுகின்றன. இதனால், தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையே ஓடும் பஸ்கள், பல நாட்கள் பழுதாகி, பாதியிலேயே நின்று விடுகின்றன. குறிப்பாக, சேலம் - நெல்லை, நாகர்கோவில் - வேலுார் வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்களின் நிலைமை பரிதாபமாக உள்ளது.

Advertisement

குறிப்பாக, டிரைவருக்கான, 'ஸ்டியரிங்' மட்டுமே உள்ள நிலையில், 'ஸ்பீடா மீட்டர், ஏர் ஹாரன்' இயக்கத்தை கண்டறிய உதவும் அளவீடு எதுவும் இல்லை; அந்த இடங்கள் அனைத்தும் குழிகளாக காட்சி அளிக்கின்றன. இது போன்ற பழைய பஸ்கள், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாக டிரைவர், கண்டக்டர்கள் புலம்புகின்றனர்.

- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan Duraisamy - Fremont,California,யூ.எஸ்.ஏ
17-ஜூலை-201910:33:19 IST Report Abuse

Nagarajan Duraisamyநாம் நஷ்டத்தில் இயங்கும் ஒரு அரசு நிறுவனத்திடம் என்ன எதிர்பார்க்கமுடியும் ? சமீபத்தில் 2000 பேருந்துகள் வெளியூர் தடங்களில் துவக்கி வைக்கப்பட்டன. பேருந்துகள் எந்த நிலையில் இயங்குகின்றன, எந்த பாகம் எப்போது பழுது பார்க்க வேண்டும் என்று சிறப்பான முறையில் கணினி மூலம் மிக குறைந்த செலவில் செய்ய முடியும். ஒவ்வொரு பேருந்துக்கு ஒரு GPS மற்றும் DATA இருக்கும் ஒரு போன் வைத்தால் போதும், எவ்வளவு தூரம் ஓடுகிறது, எவ்வளவு வேகத்தில் செல்கிறது, சரியான நேரத்தில் இயக்கப்படுகின்றனவா என்று கண்டு கொள்ள முடியும். மேலும் போனில் உள்ள கேமரா மூலம் எவ்வளவு பயணிகள் உபயோகப்படுத்துகின்றனர் என்று கூட தோராயமாக சொல்ல முடியும். வண்டியில் ஓட்டுநர் மற்றும் நடத்துனரும் தடத்தில் டிராபிக் எந்த நிலையில் உள்ளது என்று பார்க்கலாம். மக்கள் சொந்தஉபயோகத்துக்கு வாங்கும் வாகனங்களை பராமரிக்கும் அளவுக்கு இவற்றை பராமரிக்க முடியும். பழைய வண்டிகள் கூட அதிக செலவில்லாமல் பராமரிக்க முடியும். ஒரே ஒரு மொபைல் அப்பிளிகேஷன் மூலம் மக்களுக்கு பேருந்து எப்போது அந்த நிறுத்தத்துக்கு வரும், அதில் இடம் இருக்கிறதா என்று கூட காட்ட முடியும். இதெல்லாம் செய்தால், நஷ்டத்தில் இயங்கும் இந்த துறை குறைந்தபட்சம் கடன் வாங்குவதை தவிர்க்கமுடியும். மக்களுக்கும் சிறந்த சேவை அளிக்க முடியும். செய்யணுமே.

Rate this:
Sivagiri - chennai,இந்தியா
16-ஜூலை-201912:06:34 IST Report Abuse

Sivagiriஇதெல்லாம் அரசியல் விளையாட்டு இந்த பாடாவதி என்று சொல்லி கழித்த வண்டிகளை வாங்கி - தனியார் பேருந்துகள் / ஆம்னிகள் / பள்ளி-கல்லூரிகள் / தொழிற்சாலைகள் / ஐடி கம்பெனிகள் - ரீகண்டிசன் செய்து சூப்பரா பத்து பதினைந்து ஆண்டுகளாக சர்வீஸ் பார்த்து ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் . . . வாங்கும் போதும் விற்கும் போதும் கமிஷன் வாங்கி ஓட்டுவதும் அரசியல்வாதிகளோட ஆம்னி / கல்லூரி / கம்பெனிகள்தான் அவர்களுக்காகவே அரசு பேருந்துகள் சர்வீஸ் பார்க்காமல் ஓட்டி சீக்கிரமாக கழிக்கப் படுகின்றன அதற்காகவே செய்திகளும் லாபி செய்யப் படுகின்றன . . .

Rate this:
K.P SARATHI - chennai,இந்தியா
16-ஜூலை-201912:05:31 IST Report Abuse

K.P  SARATHIஅதி நவீன பஸ் தேவை இல்லை அடிப்படை வசதி இருந்தால் போதும் . மேலும் தொடர் சேவை வேண்டும். எந்த அரசு பொது துறை சிறப்பாக செயல் படுத்துகிறது அதுவே சிறந்த அரசு ஆகும்.

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X