பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'நீட்' விலக்கு கிடையாது
மத்திய அரசு திட்டவட்டம்

புதுடில்லி: 'மருத்துவக் கல்விக்காக நடத்தப்படும், 'நீட்' நுழைவுத் தேர்வில் இருந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு விலக்கு அளிக்க முடியாது' என, மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

NEET exam,medical entrance test,நீட்,விலக்கு,கிடையாது,மத்திய அரசு,திட்டவட்டம்


பார்லிமென்ட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. லோக்சபாவில், கேள்வி ஒன்றுக்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், நேற்று எழுத்து மூலம் அளித்துள்ள பதில்: மருத்துவக் கல்வி,

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. 'மருத்துவ கல்விக்காக தேசிய அளவில் நடத்தப்படும், 'நீட்' நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில், நாடு முழுவதும், ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. அதன்படியே, நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த சட்டம், நாடு முழுவதற்குமானது; அதில் எந்த விலக்கும் அளிக்க முடியாது. அதனால், நீட் நுழைவுத் தேர்வில் இருந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு எந்த விலக்கும் அளிக்க முடியாது. இவ்வாறு பதிலில் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு கேள்விக்கு, அமைச்சர், ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் அளித்து உள்ள பதில்:

Advertisement

குறிப்பிட்ட சில நாடுகளில் வழங்கப்படும், ஒரு ஆண்டு முதுநிலை பட்டப் படிப்புகளை அங்கீ கரிக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை. அதே நேரத்தில், சில நாடு களில் நடைமுறையிலுள்ள பட்டப் படிப்புகள், நாம் அங்கீகாரம் அளித்துள்ள பட்டப் படிப்புகளில் இருந்து வேறுபட்டுள்ளன. இது போன்ற பட்டப் படிப்புகளை அங்கீகரிப்பது குறித்து ஆராய, குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அளித்த பரிந்துரையின் படி, இது போன்ற நாடுகளுடன் பேசவுள்ளோம். இவ்வாறு, பதிலில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Maha - Herndon,யூ.எஸ்.ஏ
17-ஜூலை-201910:09:13 IST Report Abuse

Mahaநண்பர்களே, இந்த நீட் தேர்வு தேவையாற்றது…..இதன் மூலம் ஒரு பயனும் இல்லை. ஒரு நன்கு படித்தவன், தமிழ்நாட்டின் ஒரு பட்டிக்காட்டு பள்ளி கல்வி தொடங்கி, உலகின் பல்வேறு உயரிய நிறுவங்களின் உயர்ந்த பொறுப்பில் பணியாற்றி, புதிய படைப்புகளை கொடுத்தவன் என்ற முறையில், கூறுகிறேன்… திரு. மோடி அய்யா அவர்களின் மீது அளப்பரிய அன்பும், நம்பிக்கையும் உள்ளவன் நான். ஓகே, விசயத்துக்கு போவோம், இது எவ்வாறு தேவை அற்றது என்று…..சற்று தயவு செய்து, நான் எழுதிய இந்த பத்தி முழுவதும் படிக்காமல், எந்த முடிவுக்கும் வர வேண்டாம்….முதலில், நான் எந்த கட்சி, எந்த மதமும் சார்ந்தவன் இல்லை. மனிதன் படைத்த அடையாளங்களில் நான் ஒரு போதும் விருப்பு கொண்டவன் இல்லை. முதல் குறிப்பு: சிலர் தனியார் மருத்துவ கல்லூரிகள், அதிகம் பணம் வாங்குகின்றன. அதற்கு தீர்வு NEET இல்லை, இது போன்ற பிரச்சனைகளை, ஒரு கடும் விதி கொண்டு வந்து கட்டுப்படுத்தி விடலாம், மத்திய அரசுக்கு அந்த வலிமை உள்ளது…. குறிப்பு 2: தமிழ் நாட்டு பாட திட்டம் மோசம்….மத்திய அரசின் பாட திட்டம் சிறப்பானது….CBSE , நீட், IIT போன்றவை மிக சிறப்பானது….தமிழ் நாட்டின் பாட திட்டம், சாதாரண கல்லூரிகள் மிக மிக மோசம்....ஒரு புள்ளி விவரம் சொல்கிறேன்: திருச்சி ஜோசப் காலேஜ், Chennai லயோலா கல்லூரி,மெட்ராஸ் Christian காலேஜ், சென்னை பல்கலை- இந்த மூன்றில் படித்த, மிக மிக சிறந்த சாதனையாளர்களை புள்ளி விவரங்களை கூட்டினால், (இந்த 4 கல்லூரிகள்), ஒட்டு மொத்த இந்தியாவின் கல்லூரிகளின் சாதனைகளை விட அதிகம், (considering the "ஸ்டாடிஸ்டிக்கால் weightage of positive IMPACT they made to society and India and world" given to famous people studied in these 4 institutions), தயை செய்து, அலும்னி லிஸ்ட் பாருங்கள்…ஒரு சிறு உதாரணம்: அப்துல் காலம் அய்யா, நோபல் பரிசு பெற்ற CV Raman, நோபல் பரிசு பெற்ற Chandrasekar, உலகின் சக்தி வாய்ந்த பெண்மணிகளின் 5 இடத்தில உள்ள பெப்சி CEO. Indira Nooyi, நியூ யார்க் பல்கலையின் துணை தலைவர். Chandrika தண்டொன், சனாதிபதி. ர். வெங்கட்ராமன் அய்யா, Nithi அமைச்சர் சிதம்பரம், ரேசெர்வே பேங்க் கவர்னர்: ரெங்கராஜன், சனாதிபதி: ராதாகிருஷ்ணன்…..எனக்கு ஒரு நாள் வேண்டும் இந்த லிஸ்ட் செய்ய....தமிழக பள்ளியில் : இந்த கால, உலகின் தலை சிறந்த கணிப்பொறி GOOGLE CEO : சுந்தர் பிட்சை (Tamil nadu Matriculation)…….எனவே இந்த கூற்று, பொய்யானது....ஏன் நான் கூட ஒரு தொழில் நுட்பம் உருவாக்கினேன், ஜூன் மாதம், 1999 - ம் ஆண்டு....பல லக்ஷம் கோடி புரளும் தொழில் நுட்பம் அது இன்று....நானும் ஒரு பட்டிக்காட்டு தமிழ் பள்ளியில்தான் படித்தேன்...எனவே, சும்மா NEET, CBSE போன்றவை சிறப்பானது என்பதை தூக்கி போடுங்கள்...I have worked with MIT Phds/Post doctorates (Worlds no.1), Harvard scholars, Columbia MBAs, IVY Leagues- Your Entrance/Competitive exam does not matter...does not bring any talent...in fact it brings more stress to students..... உலகின் முதல் இதய அறுவை சிகிச்சை செய்தவன் டாக்டர் இல்ல, அவன் ஒரு ஆசாரி…. எந்த மருத்துவ படிப்பும் படிக்காதவன்….அனால், அவன் முதல் அறுவை சிகிச்சை செய்த பிறகு, உலகின் முதல் மருத்துவம் பல்கலையான John Hopkins University, Baltimore, Maryland, USA, அவரை இதய சிகிச்சை பேராசிரியராக பதவி கொடுத்து, இன்றும் அவரின் படம், அந்த பல்கலையில் உள்ளது… சரி அதுத்த பகுதிக்கு செல்வோம்: ஸ்டேட் போர்டு பாட திட்டம் வேறு….மத்திய திட்டம் வேறு...அவ்வளவுதான்...பாட திட்டம் வேறு என்பதற்கும், சிறப்பான திட்டம் என்பதற்கும், பெரிய வித்யாசம் உள்ளது. நம் ஸ்டேட் போர்டு சிறப்பானது….பாருங்கள் நான் போட்ட மேலே உள்ள லிஸ்டை. நோபல் பரிசு கொடுத்து விட்டான், கூகுளை CEO ஆகா உள்ளன….உங்கள் கூற்று சும்மா…. உபயோகம் இல்லாதது… சரி, வேறு பாட திட்டங்கள் என்றால், அந்த வேறுபட்ட பாடங்களை படிக்க "குறிப்பிட்ட காலம்" ஆகும். IT WILL TAKE TIME TO READ LESSONS, DONT SAY HARD WORK, HARD WORK - ALL THESE NON-SENSE...THINGS TAKE TIME, TO READ, TO UNDERSTAND.....This time can be, T0, T1, T2, ...differ from person to person, based on poor village, rural, town, city, metros etc.....WHO IS RESPONSIBLE TO TEACH THOSE DIFFERING LESSONS, Did central government discuss with state governments-regarding the timeline, who is responsible to teach the differing subjects, budget, timeline..... I can see, hey some small town students are passing NEET etc...let me tell you, even my nephew lives in a village, but I give the world's best education, he just started college, but I teach unique areas such as Decision analytics, Data Science, Financial stress test, etc....so, do not say an individual case here...provide statistics - village, panchayat level, town panchayat, township, city, metro, state level, that will tell lots of stories...how can a poor village person go to city for coaching in a short amount of time ? money for them ? time ? ஒரு சிறு உதாரணம்: NEET எக்ஸாம், என்பது, அனைவரையும் ஓட விட்டார்கள். அனால், every track is different...some are stones, some are concrets, some are bricks...they should have fixed the standadised common syllabus first.....then should have common platform for competitive exams, but this is other way around. அவசரத்தில் அள்ளி தெளித்த கோலம் நீட், ஸ்வச் பரத் போல…..

Rate this:
Krish - Chennai ,இந்தியா
22-ஜூலை-201905:59:09 IST Report Abuse

Krish மகா , நாம் படித்த பழைய புத்தகங்கள் வேறு, இப்போ அரசு பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் வேறு. புது புத்தகங்களை அரசு இணைய தளத்தில் பார்த்து விட்டு அப்புறம் சொல்லுங்கள். ...

Rate this:
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
16-ஜூலை-201920:11:35 IST Report Abuse

SIVA. THIYAGARAJANநீட் தேர்வு அசியமே. நற்செயலுக்கு தடைபோடுவது கயமை தனமே. நல்லதை துணிவுடன் செயல்படுத்துவதே விவேகம்.

Rate this:
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
16-ஜூலை-201920:09:20 IST Report Abuse

SIVA. THIYAGARAJANஅதுதான் நல்லது. மைய அரசு பொறுப்பு .நல்ல அறிவாளிகளை தேர்வுசெய்வது. நல்ல அறிவாற்றல் மிகுந்த மருத்தவர்களால்தான் நற்பணி ஆற்றமுடியும் . குறைந்த அறிவாற்றல் உள்ள வர்களால் போராட்டமும் மறியலுதான் நடைபெறும் .

Rate this:
மேலும் 24 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X