பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
நிறைவேறியது!
என்.ஐ.ஏ.,வுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதா
லோக்சபாவில் அமித் ஷாவுடன் எம்.பி.,க்கள் காரசாரம்

புதுடில்லி: என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்புக்கு, கூடுதல் அதிகாரம் அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா, லோக்சபாவில், நேற்று நிறைவேறியது. இதன்படி, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் குறித்த விவகாரங்கள், 'சைபர்' குற்றங்கள் மற்றும் ஆள் கடத்தல் வழக்குகளையும், என்.ஐ.ஏ., விசாரிக்கும்.

என்.ஐ.ஏ., கூடுதல், அதிகாரம், மசோதா


லோக்சபாவில் நேற்று, என்.ஐ.ஏ., சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தில், உள்துறை அமைச்சர், அமித் ஷா பேசியதாவது: 'பொடா' எனப்படும், பயங்கரவாத தடுப்பு சட்டத்தை, காங்கிரஸ் அரசு ரத்து செய்தது. நாட்டின் நலனுக்காக அதை செய்யவில்லை. தன் ஓட்டு வங்கிக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காக, அந்த சட்டத்தை, காங்கிரஸ் ரத்து செய்தது. அதற்குப் பிறகு, நாட்டில், பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்தன. முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு, 2008ல், மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், 2009ல், என்.ஐ.ஏ., அமைப்பை ஏற்படுத்தியது.

மிக அவசியம்:


இப்போது, அந்த அமைப்புக்கு, கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டியது மிகவும் அவசியம். எனவே, இந்த மசோதா நிறைவேற, அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். இந்த மசோதாவை எதிர்க்கிறேன் எனக் கூறி,

நீங்கள் பேசும் வார்த்தைகள், பயங்கரவாதிகளுக்கு இளக்காரமாக போய்விடும். அவர்கள், கட்டவிழ்த்து விடப்பட்டது போல உணர்வர். எனவே, லோக்சபா, ஒருமித்த குரலில் இந்த மசோதாவுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

தவறு நடக்காது:


பிரதமர் மோடி தலைமையிலான அரசு, என்.ஐ.ஏ., சட்டத்தை, எந்த காலத்திலும் தவறாக பயன்படுத்தாது. யாரையும் வேண்டுமென்றே குறிவைத்து, என்.ஐ.ஏ., சட்டத்தை ஏவாது. இந்த மதம் தான் என்றில்லாமல், பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதில், எங்கள் அரசு உறுதியாகவுள்ளது. இவ்வாறு, அமித் ஷா பேசினார்.

எதிர்க்கட்சி வரிசையில் இருந்த, எம்.பி.,க்கள் சிலர், 'இந்த கூடுதல் அதிகாரம், குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக பயன்படுத்தப்படும்' என, அச்சம் தெரிவித்தனர்; அதை, அமைச்சர் அமித் ஷா மறுத்தார். ஒரு கட்டத்தில், ஐதராபாத் தொகுதி, எம்.பி.,யும், ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவருமான, அசாதுதீன் ஒவாய்சி, அமைச்சர் அமித் ஷாவுடன் கடுமையாக வாக்குவாதம் செய்தார்.

அப்போது அமித் ஷா, ''நாங்கள் யாரையும் அச்சப்படுத்த, இந்த மசோதாவை அறிமுகப்படுத்தவில்லை; அவ்வாறு பிறர் அச்சப்படுவதாக இருந்தாலும், கவலைப்பட போவதில்லை; அதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது,'' என்றார்.

தொடர்ந்து, ஆளும் தரப்பினரும், எதிர்க்கட்சி, எம்.பி.,க்களும் தங்கள் இருக்கைகளை விட்டு எழுந்து, காரசாரமாக பேசினர். இதனால், கூச்சல், குழப்பம் நிலவியது. பின், குரல் ஓட்டெடுப்பு மூலம், என்.ஐ.ஏ., சட்ட திருத்த மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

Advertisement

தி.மு.க., - எம்.பி., ராஜா கடும் எதிர்ப்பு:

''பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக, அமெரிக்காவில் உள்ளதைப் போல சட்டம் கொண்டு வருவதாக கூறாதீர்கள். அந்த சட்டத்தின் கதையே வேறு. மத்திய அரசு கொண்டு வந்துள்ள, இந்த சட்ட திருத்தம் வேறு,'' என, தி.மு.க., - எம்.பி., ராஜா, பேசினார். என்.ஐ.ஏ., சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தில், அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிராக குற்றம் இழைக்கும் வெளிநாட்டவரை, அந்நாட்டிற்கே போலீஸ் சென்று, கைது செய்து, விசாரணை நடத்துவதற்காக, இச்சட்டத்திருத்தம் கொண்டு வருவதாக கூறுகிறீர்கள். சரி, எத்தனை நாடுகள், இதற்கு சம்மதிக்கும் என, நம்புகிறீர்கள்? இச்சட்டத்தை, அப்போதைய, உள்துறை அமைச்சர், சிதம்பரம் அறிமுகம் செய்த போது, நானும் சபையில் இருந்தேன். மசோதாவை, எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. அதற்கு சிதம்பரம், 'தயவுசெய்து ஆதரவு தாருங்கள். குறைகள் இருந்தாலும், இது போன்ற சட்டம் இருந்தால் தான், பயங்கரவாதிகளுக்கு பயம் வரும்' என்றார். இந்த சட்டத்தின் மூலம், தண்டனை பெற்றவர்களில், சிறுபான்மையினர் எத்தனை பேர் என்பது தெரிய வேண்டும். அரசியல் சட்டத்தில், 'இந்தியா என்பது பாரதம்' என்றே உள்ளது. ஆனால், 'இந்தியா என்பது இந்துஸ்தான்' என கருதி, ஆட்சி நடத்துகிறீர்கள். எனவே, சிறுபான்மையினருக்கு அச்சம் உள்ளது. அதை போக்கும் வகையில், இச்சட்டத்தை பயன்படுத்த வேண்டும். அமெரிக்காவில், இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டவுடன், அமெரிக்கா இதே மாதிரி சட்டத்தை கொண்டு வந்த போது, 'அமெரிக்கர்கள் யாருக்கும் பொருந்தாது; வெளிநாட்டு பயங்கரவாதிகளுக்கு மட்டுமே பொருந்தும்' என்றனர். ஆனால், இந்த சட்டம், இந்தியர்களுக்கு பொருந்தும். எனவே, அமெரிக்காவைப் பார்த்து, சட்டத்தை கொண்டு வருவதாக கூறாதீர்கள். இச்சட்டத்தின் மூலம், இடதுசாரி தீவிரவாதத்தையும் கட்டுப்படுத்துவோம் என்கிறீர்கள். நாட்டில், இடதுசாரி தீவிரவாதம் மட்டுமல்லாது, வலதுசாரி தீவிரவாதமும் உள்ளது. அதை சரிசெய்ய, எப்போது சட்டம் கொண்டு வரப்போகிறீர்கள்? இவ்வாறு, ராஜா பேசினார். மசோதா மீது, காங்கிரசை சேர்ந்த, மணிஷ் திவாரி, பா.ஜ.,வைச் சேர்ந்த, சத்யபால் சிங், பிஜு ஜனதா தளத்தின், மகதாப், தேசியவாத காங்கிரசின், சுப்ரியா சுலே, பகுஜன் சமாஜ் கட்சியின், டேனிஷ் அலி, ஆர்.எஸ்.பி.,யின், பிரேமசந்திரன் போன்றோர் பேசினர்.


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil Selvan - tamilnadeu,இந்தியா
16-ஜூலை-201919:24:49 IST Report Abuse

Tamil Selvanமாநில அரசுகளின் உரிமை பறிக்கப்படும்

Rate this:
mukundan - chennai,இந்தியா
16-ஜூலை-201916:40:38 IST Report Abuse

mukundanஇந்த சட்டம் நாட்டிற்கு மிக முக்கியம். இந்த சட்டத்தால் சிறுபான்மை மக்களுக்கு ஏற்படும் தேவை இல்லாத பயத்தை களைய அரசு முற்பட வேண்டும். இந்த சட்டத்தை எதித்து அரசியல் செய்யும் தி.க, காங்கிரஸ் போன்ற வியாதிகள் ஓலமிடுவது தேவைல்லாத ஒன்று.

Rate this:
svs - yaadum oore,இந்தியா
16-ஜூலை-201913:34:07 IST Report Abuse

svsஇந்த சட்டத்தை பற்றி கருத்து கூறுவதற்கு முன் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தை நினைவு கூறுவது நல்லது....எதனால் அந்த துயர சம்பவம் நிகழ்ந்தது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என்பதற்கு பதில் கூற இயலாது.. அந்த வழக்கு தீர்ப்பையும் படித்து பாருங்கள் ....வாக்கு வங்கி அரசியலில் உயிருக்கு கூட சல்லி காசுக்கு மதிப்பு கிடையாது ......

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X