பொது செய்தி

தமிழ்நாடு

855 கிராம் எடையில் பிறந்த குழந்தை; காப்பாற்றிய அரசு டாக்டர்கள்

Added : ஜூலை 15, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
855 கிராம், எடை, பிறந்த ,குழந்தை

ஓசூர்: ஓசூரில், 855 கிராம் எடையில் பிறந்த பெண் குழந்தையை, 60 நாட்கள் சிகிச்சை அளித்து, அரசு டாக்டர்கள் காப்பாற்றியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலுார் அருகே, பட்டவாரப்பள்ளியைச் சேர்ந்தவர், புட்டராஜ், 29; விவசாயி. இவருக்கும், கர்நாடகாவவைச் சேர்ந்த தேஜஸ்வினி, 24, என்பவருக்கும், 2018 செப்., 6ல் திருமணம் நடந்தது. கர்ப்பமடைந்த தேஜஸ்வினிக்கு, ஏழாவது மாதத்தில், வலி வந்ததால், ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, மே, 15ல், அறுவை சிகிச்சை மூலம், குறை பிரசவத்தில், பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் எடை, 855 கிராம் மட்டுமே இருந்ததால், தாய்ப்பால் குடிக்க முடியவில்லை. 'பிழைப்பது சிரமம்' எனக் கூறிய டாக்டர்கள், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, ஏற்கனவே, 780 கிராம் எடையில் பிறந்த குழந்தைகளை கூட, சிகிச்சை அளித்து, காப்பாற்றி உள்ளனர். ஆனால், வேறு மருத்துவமனையில் பிறந்து, கொண்டு வரப்பட்ட குழந்தை என்பதால், குழந்தையை காப்பாற்றுவது, டாக்டர்களுக்கு சவாலான விஷயமாக இருந்தது.

டாக்டர் பூபதி தலைமையில், மருத்துவக் குழுவினர், குழந்தையை பராமரித்தனர். 'பெட்டர், வாமர்' போன்றவற்றில் வைத்து, 60 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து, 1 கிலோ, 240 கிராம் வரை, எடையை அதிகரித்துள்ளனர். தற்போது, குழந்தை ஆரோக்கியமாக உள்ளதுடன், தாய்ப்பால் குடிக்க துவங்கி உள்ளது. எடை குறைவாக உள்ள குழந்தைக்கு மூளைக்காய்ச்சல், நிமோனியா போன்ற நோய்கள் வராமல் தடுக்க, 'நீமோ காக்கல்' என்ற தடுப்பூசி போட்டு, குழந்தையை பெற்றோரிடம் டாக்டர்கள் ஒப்படைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
16-ஜூலை-201910:36:58 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj இந்த அரசு மருத்துவர்களுக்கு இதயங்கனிந்த பாராட்டுக்கள் பல அவர்களது குடும்பங்களும் ஆசிர்வதிக்கப்படும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X