கடலுார்:கடலுாரில், பரதநாட்டிய அரங்கேற்றம் மற்றும் சலங்கை பூஜை விழா நடந்தது.கடலுார் ஸ்ரீயுவ சூர்யா நாட்டிய இசைப் பள்ளி மாணவிகள் சுபலட்சுமி, பவித்ரா, சவுபாக்கிய ஷாலினி, ஜீவிகா, சிந்துஜா, தனுஜாஸ்ரீ, ஓவிய நிலா, ப்ரதன்யா ஆகியோர் பரதநாட்டிய அரங்கேற்றம் செய்தனர்.தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு தாசில்தார் சத்தியன் தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன் வரவேற்றார். அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். சப் -கலெக்டர் சரயூ சிறப்பு விருந்தினராக பங்கேற்று, நாட்டிய மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.காரைக்கால் கலைமாமணி சித்ரா கோபிநாத், வெங்கடாஜலபதி, ஏஞ்சலின் தேவகுமாரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வேல்முருகன், வசந்தராஜா, தணிகாச்சலம், ஜனார்த்தனன் உட்பட பலர் கலந்து கொண்டனர். புவனேஸ்வரி ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE