பொது செய்தி

தமிழ்நாடு

எழுமேடு கோவிலில் 19 ம் தேதி தீமிதி விழா

Added : ஜூலை 15, 2019
Share
Advertisement

நடுவீரப்பட்டு:பாலுார் அடுத்த எழுமேடு பச்சைவாழியம்மன் கோவிலில் வரும் 19 ம் தேதி தீமிதி திருவிழா நடக்கிறது.பாலுார் அடுத்த எழுமேடு மன்னார்சுவாமி ஸ்ரீபச்சைவாழியம்மன் கோவிலில், வரும்19 ம் தேதி ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தீமிதி திருவிழா நடக்கிறது. விழாவையொட்டி, கடந்த 5 ம் தேதி கொடியேற்றப்பட்டது. இன்று தினந்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடக்கிறது. வரும் 19 ம் தேதி காலை 6:00 மணிக்கு விநாயகர், வள்ளி தேவசேனா சுப்ரமணியர், மன்னார் சுவாமி, பச்சைவாழியம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடக்கிறது.காலை 9:00 மணிக்குமேல் 10:30 மணிக்குள் வள்ளி தேவசேனா சுப்ரமணியர் திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து 11:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாண கோலத்தில் வீதி உலா நடக்கிறது. மாலை 5:30 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு சுவாமிக்கு பால் அபிேஷகம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் இதயரசு எத்திராஜலு செய்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X