பொது செய்தி

தமிழ்நாடு

குறுவை நெல் வரத்து துவங்கியது: சுறுசுறுப்பான விருதை கமிட்டி

Added : ஜூலை 15, 2019
Share
Advertisement

விருத்தாசலம்:குறுவை நெல் வரத்து துவங்கியதால், விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகள் வருகை அதிகரித்தது.விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு நெல், உளுந்து, மக்காச்சோளம், தேங்காய் பருப்பு, எள், கேழ்வரகு உள்ளிட்ட விளைபொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அன்றாட கொள்முதல் பொருட்களுக்கு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. இதனால், கடலுார், விழுப்புரம் மற்றும் அருகிலுள்ள அரியலுார், பெரம்பலுார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும் இங்கு, வரத் துவங்கிவிட்டனர்.கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நெல் அறுவடை இல்லாமல், குறைந்த அளவே விளைபொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதனால், விவசாயிகள் வருகையின்றி கமிட்டி வளாகம் வெறிச்சோடியது. தற்போது, குறுவை அறுவடை சீசன் துவங்கியதால், நெல் வரத்து அதிகரித்த நிலையில், விவசாயிகளும் அதிகளவு வருகை தருவதால், கமிட்டி வளாகம் பரபரப்பாக இயங்க துவங்கியது.அதன்படி, நேற்று நெல் 7,500 மூட்டைகள், மக்காச்சோளம் 150 உட்பட 7,744 மூட்டை வேளாண் விளைபொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அதில், அதிகபட்சமாக ஒரு மூட்டை எள் 9,499 ரூபாய்க்கும், வேர்க்கடலை 7,869, நரி பயறு 7,009, தேங்காய் பருப்பு 6,222 மற்றும் நெல் வகையில் பி.பி.டி., 1,913 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X