பொது செய்தி

தமிழ்நாடு

பூட்டிக்கிடக்கும் அங்கன்வாடி மையம்: பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா?

Added : ஜூலை 15, 2019
Share
Advertisement
 பூட்டிக்கிடக்கும் அங்கன்வாடி மையம்: பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா?

பெண்ணாடம்:பெண்ணாடம் காமராஜர் தெருவில், பூட்டிக்கிடக்கும் அங்கன்வாடி மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெண்ணாடம், சோழநகரில் 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், வாடகை கட்டடத்தில் அங்கன்வாடி மையம் துவங்கப்பட்டது.
இந்த கட்டடத்தில் போதிய இடவசதி இல்லாததால், குழந்தைகள் அமர்ந்து படிக்கவும், குழந்தைகளுக்கு சமைக்கவும் பணியாளர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.அதைத்தொடர்ந்து, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில், காமராஜர் தெருவில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. கட்டுமானப்பணிகள் முடிந்து இதுவரை திறக்கப்படாமல், பூட்டியே கிடக்கிறது. இதனால் அங்கன்வாடி மையம் வாடகை கட்டடத்தில் இயங்குவதுடன், புதிய அங்கன்வாடி மைய கட்டடம் பாழாகி வருகிறது.காமராஜர் தெருவில் பூட்டிக்கிடக்கும் அங்கன்வாடி மைய புதிய கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X