அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம்
அ.தி.மு.க., மறுப்பு; தி.மு.க., வெளிநடப்பு

சென்னை: தபால் துறை தேர்வை, பழைய முறைப்படி, தமிழில் நடத்த வலியுறுத்தி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற, அரசு முன்வராததை கண்டித்து, எதிர்க்கட்சி, எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

தீர்மானம்,அதிமுக மறுப்பு, திமுக ,வெளிநடப்பு


சட்டசபையில், கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது, நேற்று நடந்த விவாதம்:
தி.மு.க., - தங்கம் தென்னரசு: 'தபால் துறை தேர்வுகள், இனி, மாநில மொழிகளில் நடத்தப்படாது' என, மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது. இதற்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், கண்டன அறிக்கை விட்டார். அதை மீறி, தேர்வை நடத்தி முடித்துள்ளது, தபால் துறை. தேர்வு அறிவித்த பின், விதிகளை மாற்றக் கூடாது என்ற, நீதிமன்ற உத்தரவை மீறி, தேர்வு நடத்தப்பட்டு உள்ளது. இதனால், தமிழக இளைஞர்களுக்கு, கடும் பாதிப்பு ஏற்படும். மத்திய அரசு பணிகளில், தென் மாநில மாணவர்கள் இடம்பெற முடியாத நிலை ஏற்படும். எனவே, தமிழில் தேர்வு நடத்த, மத்திய அரசை வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றுவோம்; சிறப்பு விவாதம் நடத்துவோம்.

அமைச்சர் ஜெயகுமார்: தபால் துறை தேர்வு, சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் நடந்துள்ளது. இத்தேர்வில், இரண்டாம் தாளில், ஆங்கில வார்த்தைகளை, தமிழில் மொழி பெயர்த்தல்; தமிழ் வார்த்தைகளை, ஆங்கிலத் தில் மொழி பெயர்த்தல்; தமிழில், இரண்டு கட்டுரைகள் எழுதுதல் போன்றவை இடம் பெற்றுள்ளன. இதில், எந்த பிரச்னையும் இல்லை. முதல் தாளில் கேள்விகள், ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் ஆகியவற்றில் இருக்கும். இம்முறை, ஆங்கிலம் மற்றும், ஹிந்தியில் மட்டும் இடம் பெற்றுள்ளன.

நாம், ஹிந்தி திணிப்பை ஏற்கவில்லை. இரு மொழி கொள்கையில், அரசு உறுதியாக

உள்ளது. நீங்களும், அந்த கொள்கையில் உறுதியாக உள்ளீர்கள். எனவே, இப்பிரச்னையை, லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும், எங்கள் எம்.பி.,க்கள் எழுப்புவர்; உங்கள், எம்.பி.,க்களும் எழுப்பட்டும். அரசு சார்பிலும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர், துரைமுருகன்: ஒருமித்த கருத்தை கொண்டுள்ள நாம், தீர்மானத்தை நிறைவேற்றுவோம். மத்திய அரசை கண்டிக்கக் கூடாது என்றால், வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுவோம்.

அமைச்சர் ஜெயகுமார்: நம் உரிமையை நிலைநாட்ட, எம்.பி.,க்கள், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், குரல் கொடுக்கட்டும்.

துரைமுருகன்: எம்.பி.,க் கள் குரல் கொடுப்பர். நமது சபையில், தீர்மானம் நிறைவேற்ற என்ன தயக்கம்?

துணை முதல்வர், பன்னீர் செல்வம்: வெளிநடப்பு செய்ய திட்டமிட்டு வந்து உள்ளீர்கள். லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும், எம்.பி.,க்கள் வலியுறுத்தும் போது, மத்திய அரசின் நிலைபாடு, நமக்கு தெரிய வரும். அதற்கேற்ப, நாம் முடிவெடுப்போம்.

துரைமுருகன்: சாதுரியமாக பதில் அளிக்கிறீர்கள். மத்திய அரசு, சபையை ஒத்திவைக்கும். வேறு எதுவும் நடக்காது.

முதல்வர்: துணை முதல்வர் தெளிவாக கூறி உள்ளார். நீங்கள், ஒரு முடிவுக்கு வந்துள்ளீர்கள். எங்களுக்கு, 37 எம்.பி.,க்கள் இருந்தபோது, 'என்ன சாதித்தனர்' என, கேட்டீர்கள். தற்போது, 37 எம்.பி.,க்களை, நீங்கள் வைத்து உள்ளீர்கள். நீங்கள், மத்திய அரசை, விதியை தளர்த்த சொல்லுங்கள். நாங்களும், அதே கேள்வியை எழுப்புகிறோம். மத்திய அரசு பதில் அறிந்த பின், முடிவு எடுப்போம்.

துரைமுருகன்: இது, இருவருக்கும் உணர்வுப்பூர்வமான பிரச்னை. கர்நாடகம், மேற்கு வங்கத்தில், தபால் துறை தேர்வு நடத்தப்படவில்லை. ஹிந்தி எதிர்ப்பு, நம் ரத்தத்தில் கலந்துள்ளது. ஆனால், துணை முதல்வர், உணர்வை கொச்சைப் படுத்தும் வகையில்,

Advertisement

வெளிநடப்பு செய்ய திட்டமிட்டிருப்பதாகக் கூறியதை கண்டித்து, வெளிநடப்பு செய்கிறோம். இவ்வாறு, துரைமுருகன் கூறியதும், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

முதல்வர்: தேடி தேடி பார்த்து, இதை சாக்காக வைத்து வெளிநடப்பு செய்துள்ளனர். மாநில மொழிகளில், தேர்வுத்தாள் இடம்பெறாது என, மத்திய அரசு வழிமுறை கொண்டு வந்துள்ளது. அதை ரத்து செய்ய வலியுறுத்தி, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் குரல் கொடுப்பர். மத்திய அரசு அளிக்கும் பதிலுக்கு ஏற்ப, அரசு முடிவு எடுக்கும்.

அமைச்சர் ஜெயகுமார்: அரசின் நிலைப்பாடை தெளிவாகக் கூறியும், அரசியல் ஆதாயத்திற்காக, வெளிநடப்பு செய்து உள்ளனர்.

அமைச்சர், சி.வி.சண்முகம்: எதற்கெடுத்தாலும், மத்திய அரசை கண்டித்து, தீர்மானம் போடவேண்டும் என்கின்றனர். அவர்களுக்கு, தமிழில் தேர்வு எழுத அனுமதி பெற வேண்டும் என்பதை விட, மத்திய அரசுக்கு எதிராக, கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே, பிரச்னை ஏற்படுத்தி, குளிர்காய நினைக்கின்றனர்; அது நடக்காது. ஐந்து ஆண்டுகள், அ.தி.மு.க., ஆட்சி இருக்கும். தமிழகத்திற்கு எதிரான, எந்த திட்டமாக இருந்தாலும், அதை, தமிழக அரசு எதிர்க்கும்.

இவ்வாறு, அமைச்சர் கூறியதை தொடர்ந்து, தமிழக சட்டசபையில், மத்திய அரசுக்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்ற, அரசு முன்வராததை கண்டித்து, காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.,க்களும், வெளிநடப்பு செய்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
16-ஜூலை-201913:40:14 IST Report Abuse

oceஇந்தி எதிர்ப்பு ரத்தத்தில் ஊறியுள்ளதாக கூவும் துரை முருகனுக்கு இந்தி பள்ளிக்கூடங்கள் எதுவும் சொந்தமாக இல்லையா.

Rate this:
oce - tokyo,ஜப்பான்
16-ஜூலை-201913:36:43 IST Report Abuse

oceபாராளுமன்றத்தில் கேட்க வேண்டியதை இங்கு சட்ட மன்றத்தில் கேட்டு நேரத்தை வீணடிக்கிறார்கள்.

Rate this:
selvakumar - chennai,இந்தியா
16-ஜூலை-201910:56:57 IST Report Abuse

selvakumarRural and poor are ignored in AIADMK & BJP rule

Rate this:
Darmavan - Chennai,இந்தியா
16-ஜூலை-201912:04:27 IST Report Abuse

DarmavanRural and poor should not be poor in brain ...

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X