பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
காவிரியில் ஐந்து கதவணைகள் கட்ட ஆய்வு
முதல்வர் இ.பி.எஸ்., அறிவிப்பு

சென்னை: ''மழை காலத்தில், காவிரியில் வரும் வெள்ள நீர், வீணாக கடலில் கலப்பதை தடுக்க வேண்டும்,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., நேரு கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த முதல்வர், ''காவிரி யில், ஐந்து கதவணைகள் கட்ட, ஆய்வு பணிகள் நடக்கின்றன,'' என்றார்.

காவிரி, ஐந்து கதவணைகள், கட்ட ,ஆய்வு


சட்டசபையில் நடந்த விவாதம்:


தி.மு.க., - நேரு: எட்டு ஆண்டுகளாக, நதி நீர் இணைப்பில், அரசு போதிய கவனம் செலுத்தவில்லை. பருவ மழை பெய்யும் போது கிடைக்கும் நீரை, சிறப்பாக பயன்படுத்த வேண்டும். கடந்த ஆண்டு, அதிக மழை பெய்து, காவிரியில் வெள்ளம் வந்தபோது, அனைத்து நீரும் கடலுக்கு சென்றது. கடலில் கலந்த நீர், 100 டி.எம்.சி., இருக்கும் என, கூறப்படுகிறது.

அந்த தண்ணீரை, கொள்ளிடம் வழியே திருப்பி விட்டால், பல கிராமங்களில், நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும் என்றோம். ஆனால், அங்கு மணல் அள்ளியதால், தண்ணீரை திருப்பி விட, அதிகாரிகள் மறுத்து விட்டனர். முக்கொம்பு அணை கட்டும் பணியை, விரைவாக முடிக்காவிட்டால், மழைக் காலத்தில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாது.

முதல்வர்: முக்கொம்பில் கதவணை கட்டும் பணி துவங்கி உள்ளது. காவிரி நீர், கடலுக்கு செல்வதை தடுக்க, நாகை மற்றும் கடலுார் மாவட்டம் இடையே, ஆதனுார் - குமாரமங்கலம் என்ற இடத்தில், கதவணை அமைக்க,

428 கோடி ரூபாய் மதிப்பில், கட்டுமானப் பணி நடந்து வருகிறது. கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டம் இடையே, நஞ்சை புகளூர் கிராமத்தில் கதவணை அமைக்க, ஆய்வு முடிந்து, விபர மதிப்பீடு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

மேலும், கரூர், நாமக்கல் மாவட்டங்களுக்கு இடையே, ஒருவந்துார் கிராமத்திலும், கரூர் - திருச்சி மாவட்டம் இடையே, முசிறி கிராமத்திலும், கதவணை அமைக்க, ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே, துாத்துார் - வாழ்க்கை கிராமத்திலும், கருப்பூர் - மாதிரி வேலுார் கிராமத்திலும், அளக்குடி கிராமத்திலும், கதவணை அமைக்க, ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

நேரு: டெல்டா மாவட்ட, வாய்க்கால்களை துார் வார வேண்டும். மற்ற மாவட்டங்களை விட, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு, அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஏனெனில், அங்குள்ள விவசாயிகள் தான், மற்ற மாவட்டங்களுக்கு சோறு போடுகின்றனர்.

முதல்வர்: டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக, தனி சிறப்பு அதிகாரியை நியமித்துள்ளோம். ஓய்வுபெற்ற பொறியாளர்கள் குழு, எங்கெல்லாம் தடுப்பணை, கதவணை கட்டலாம் என ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது.

நேரு: நீர்ப் பாசன திட்டங்களுக்கு, குறைந்த நிதியே ஒதுக்கப்படுகிறது. குடிமராமத்து திட்டத்தில், ஏரிகள் துார் வாரப்படுகின்றன. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில், 30 ஆயிரம் ஏரிகள் உள்ளன. குறைந்த நிதி ஒதுக்கினால், அனைத்தையும் எப்போது துார் வாருவது?

முதல்வர்: குடிமராமத்து திட்டத்தில், 2016 - 17ம் ஆண்டு, 100 கோடி ரூபாயில், 1,513 ஏரிகளில் பணிகள் முடிந்துள்ளன.

Advertisement

அடுத்து, 1,511 ஏரி பணிகளை, 329 கோடி ரூபாயில் செயல்படுத்த, அனுமதி அளிக்கப்பட்டது. இதில், 1,408 பணிகள் முடிந்துள்ளன. நடப்பாண்டு, 1,829 பணிகளை, 500 கோடி ரூபாயில் மேற்கொள்ள, ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

நேரு: கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம்; தாமிரபரணி - கருமேனி - நம்பியாறு இணைப்பு திட்டம்; தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டம் என, பல்வேறு நதிகள் இணைப்பு திட்டம், ஒவ்வொரு ஆண்டும் கொள்கை விளக்க குறிப்பில் இடம்பெறுகிறது; பணிகள் துவக்கப்படவில்லை.

முதல்வர்: நிலம் எடுப்பது சிரமமாக உள்ளது. இதனால், பணி தாமதமாகிறது. அனைத்து திட்டங்களுக்கும், நிலம் கையகப்படுத்தப்பட்டு, விரைவில் பணி துவக்கப்படும்.

நேரு: திருச்சியில், உய்யகொண்டான் கால்வாய், கழிவு நீர் கால்வாயாக மாறி உள்ளது; அதை, சீர்செய்ய வேண்டும்.

முதல்வர்: உய்யகொண்டான் கால்வாய், திருச்சியில், 7 கி.மீ., பயணிக்கிறது. மாநகராட்சி பகுதியில், 34 இடங்களில் கழிவு நீர் கலக்கிறது. திருச்சி மாநகராட்சியில், 'அம்ரூத்' திட்டத்தின் கீழ், 344 கோடி ரூபாய் மதிப்பில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இப்பணி முடியும் போது, கால்வாயில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்படும். இவ்வாறு, விவாதம் நடந்தது.


Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஜூலை-201916:48:45 IST Report Abuse

ஆப்புதோ பார்ரா... எட்டு ஆண்டுகளாக நதிநீர் இணைப்பில் கவனம் செலுத்தலியாம். அதுக்கு முன்னாடி இவிங்க ஆட்சில ரொம்ப கவனம் செலுத்தி, தமிழக நதிகள் எல்லாத்தையும் இணைக்க ப்ளான் போட்ட மாதிரி பேசுறாரு. அடிச்சு உடறதிலே கட்டுமரத்தையே தூக்கி சாப்பிட்டுருவாங்க.

Rate this:
Nathan -  ( Posted via: Dinamalar Android App )
16-ஜூலை-201916:37:27 IST Report Abuse

Nathanwe can a new dame at the place where the river ends up at the Sea . We have to do that for our next generation

Rate this:
vbs manian - hyderabad,இந்தியா
16-ஜூலை-201909:58:12 IST Report Abuse

vbs manianஇப்போது தான் ஆய்வு செயகிறார்கள் இந்த ஆய்வு முடிந்து ஆணை கட்டலாமா வேண்டாமா என்று முடிவு செய்வதற்குள் ஆட்சி மாரி விடும்

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X