பதிவு செய்த நாள் :
பயங்கரவாதி,தமிழகம்,தமிழ்நாடு,TN, தகர்க்க, சதி,கைது

'அன்சருல்லா' என்ற அமைப்புக்கு துபாயில் நிதி திரட்டி தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் 14 பேரை டில்லியில் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களை சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இலங்கையில் ஏப்ரல் 21ல் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது; 250 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூரத்தை மேற்கு ஆசிய நாடுகளில் செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் உதவியுடன் தலைமை ஏற்று நடத்திய 'தேசிய தவ்ஹீத் ஜமாத்' நிர்வாகி ஜஹ்ரான் ஹாஷிம் தமிழகத்தில் பதுங்கி இருந்தது என்.ஐ.ஏ. என்ற தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.

இதையடுத்து தமிழகத்தில் பயங்கரவாத செயலுக்கு எதிராக அதிரடி வேட்டையை துவக்கினர். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த கோவையை சேர்ந்த அசாருதீன் 32 என்பவரை கைது செய்தனர்.

என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் அவர் அளித்த வாக்குமூலம்: நாகப்பட்டினத்தை சேர்ந்த ஹசன் அலி 28; ஹாரிஸ் முகமது 32 ஆகியோர் இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய்க்கு அனுப்பி உள்ளனர்.

அவர்களை வேலைக்கு அமர்த்தி சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல் - குவைதாவின் கிளையான 'அன்சருல்லா' என்ற அமைப்புக்கு நிதி திரட்டி வருகின்றனர். அந்த அமைப்பின் உதவியுடன் தமிழகத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

'வாட்ஸ் ஆப்' குழு அமைத்து சங்கேத பாஷையில் பயங்கரவாத கருத்துக்களையும் பரப்பி வருகின்றனர். நானும் அந்த அமைப்பின் உறுப்பினராக செயல்பட்டு வந்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த தகவல் மத்திய அரசு வாயிலாக துபாய் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து துபாய் உளவு போலீசார் அங்கு தங்கியிருந்த சென்னை, மதுரை, திருவாரூர், கீழக்கரை, தேனி

உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 14 பேர் பயன்படுத்திய 'வாட்ஸ் ஆப்' குழுவில் ஊடுருவி ரகசியமாக கண்காணித்தனர். அவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என நாகப்பட்டினத்தில் இருந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வந்ததும் துபாய் போலீசாருக்கு தெரிய வந்தது. அதன்படி 14 பேரும் தற்கொலை படையாக மாற திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் தங்கி இருந்த வீட்டில் சோதனை நடத்திய துபாய் போலீசார் சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். தொடர்ந்து மதுரையை சேர்ந்த முகமது ஷேக் மொய்தீன் திருவாரூர் - அகமது அசாருதீன் சென்னை - தவுபிக் அகமது ஆகியோரை முதலில் பிடித்து விசாரித்தனர். பின் தேனியைச் சேர்ந்த முகமது அக்சர் மீரான் கனி; ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த

மொய்தீன் சீனி சாகுல் ஹமீது நாகப்பட்டினத்தை சேர்ந்த முகமது இப்ராஹிம் ஆகியோரை பிடித்தனர்.

அதேபோல பெரம்பலுார் - குலாம் நபி ஆசாத் ராமநாதபுரம் - ரபிக் அகமது முன்தாப்சிர் பைஷல் செரீப்; திருநெல்வேலி - முகமது இப்ராஹிம் பாருக்; தஞ்சாவூர் - உமர் பாருக் ஆகியோரிடம் விசாரித்தனர். அப்போது பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களாக செயல்பட்ட இவர்கள் தமிழகத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது துபாய் போலீசாரின் விசாரணையில் உறுதியானது.

இதையடுத்து 14 பேரின் 'பாஸ்போர்ட்'கள் முடக்கப்பட்டு இந்திய துணை துாதரக அதிகாரிகள் உதவியுடன் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். டில்லியில் அவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். விமானத்தில் நேற்று சென்னைக்கு அழைத்து வந்தனர்.

பின் மாலை 3:50க்கு முகத்தை துணியால் மூடியபடி சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் செந்துார்பாண்டி முன் ஆஜர்படுத்தினர். அனைவரையும் ஜூலை 25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து 14 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

- நமது நிருபர் குழு -


Advertisement

வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
18-ஜூலை-201912:09:42 IST Report Abuse

Malick Rajaஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை நிச்சயம் உண்டு அதிலிருந்து தப்புவது என்பதே இருக்கமுடியாது ..

Rate this:
Samaniyan - Chennai ,இந்தியா
16-ஜூலை-201920:47:05 IST Report Abuse

SamaniyanAlmost all tamil tv channels speak against hindus and support muslims and Christian's. Not only that they deride any one who tries to speak with reason. They include communists in their talk shows whose only aga is destruction of India. So Ministry of I & B should look at their functioning with microscope and shut them down if they are not fair.

Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
16-ஜூலை-201919:55:17 IST Report Abuse

Natarajan Ramanathanஉலகில் உள்ள அனைத்து முசுலீம்களும் தற்கொலை படையாக மாறிவிட்டால் ஒருவேளை இந்த அறுவருப்பான மதம் ஒழியுமோ?

Rate this:
மேலும் 61 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X