பதிவு செய்த நாள் :
கர்நாடக சட்டசபையில்
18ம் தேதி நம்பிக்கை ஓட்டு

பெங்களூரு: கர்நாடக முதல்வர் குமாரசாமி கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது 18ல் விவாதம் நடத்தப்படுகிறது. விவாதம் முடிந்த பின் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் கடந்த சில வாரங்களாக மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கு முடிவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கர்நாடகா, சட்டசபை,  நம்பிக்கை, ஓட்டு



கர்நாடகாவில் ஆளுங்கூட்டணியை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் நாளுக்கொரு அரசியல் நிகழ்வுகள்

அரங்கேறுகின்றன. ஆட்சியை தக்க வைக்கும் விதமாக நம்பிக்கை கோரும் தீர்மானத்தை நேற்று காலையில் சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் முதல்வர் குமாரசாமி வழங்கினார். இதையடுத்து நம்பிக்கை தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்தும் நாள் குறிப்பதற்காக சபாநாயகர் தலைமையில் சட்டசபை ஆலோசனை குழு கூட்டம் நேற்று நடந்தது.


ம.ஜ.த. சார்பில் முதல்வர் குமாரசாமி; காங்கிரஸ் சார்பில் சட்டசபை காங். குழு தலைவர் சித்தராமையா துணை முதல்வர் பரமேஸ்வர்; பா.ஜ. சார்பில் எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 'ஜூலை 18ம் தேதி நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தலாம்' என சபாநாயகர் நாள் குறித்தார். இதை அனைத்து கட்சியினரும் ஒப்புக்கொண்டனர்.


ம.ஜ.த. காங்கிரஸ் பா.ஜ. என மூன்று கட்சி எம்.எல்.ஏ.க்களுமே வெவ்வேறு சொகுசு விடுதிகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.

Advertisement

பலத்த பாதுகாப்புடன் நேற்றைய சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்று மீண்டும் அவரவர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றனர்.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மனு இன்று விசாரணை:

கர்நாடகாவைச் சேர்ந்த ஐந்து காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் இன்று விசாரிக்கப்பட உள்ளன. கர்நாடகாவில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தில் ஆளும் ம.ஜ.த. மற்றும் காங். கூட்டணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். 'தங்களுடைய ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும்' என 10 எம்.எல்.ஏ.க்கள் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் 'இந்த ராஜினாமா கடிதங்களின் மீதோ அல்லது அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அவர்களுடைய கட்சி அளித்த கடிதங்கள் மீதோ 16ம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது' என உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் 'தங்களுடைய ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும்' என காங்.கைச் சேர்ந்த மேலும் ஐந்து எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் இன்று விசாரிக்கப்பட உள்ளன. ஏற்கனவே வழக்கு தொடர்ந்த 10 எம்.எல்.ஏ.க்களின் மனுக்களும் இன்று விசாரிக்கப்பட உள்ளன.


Advertisement

வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X