ஆயுள் தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வேன்: வைகோ| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆயுள் தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வேன்: வைகோ

Updated : ஜூலை 16, 2019 | Added : ஜூலை 16, 2019 | கருத்துகள் (39)
Share
ஆயுள் தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வேன்: வைகோ

சென்னை: ''தேச துரோக வழக்கில், ஆயுள் தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வேன்; மேல்முறையீடு செய்ய மாட்டேன் என, நான் கூறவில்லை,'' என்று, ம.தி.மு.க., பொதுச் செயலர், வைகோ தெரிவித்தார்.

'ம.தி.மு.க.,வை உடைக்க, முதல்வராக இருக்கும் கருணாநிதி முயற்சி செய்கிறார்' என, 2006ல், அப்போதைய பிரதமர், மன்மோகன் சிங்கிற்கு, வைகோ கடிதம் எழுதினார். இந்த கடிதத்தின் அடிப்படையில், தமிழக அரசு சார்பில், வைகோ மீது அவதுாறு வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி, ஜி.கருணாநிதி முன், நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்காக, வைகோ ஆஜரானார்.

பின், குற்றச்சாட்டு பதிவுக்காக, வழக்கு விசாரணையை நாளைக்கு நீதிபதி தள்ளி வைத்தார். நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த, வைகோ கூறுகையில், ''தேச துரோக வழக்கில், ஆயுள் தண்டனை அளித்தாலும் ஏற்றுக்கொள்வேன் என்று கூறினேனே தவிர, மேல்முறையீடு செய்ய மாட்டேன் என்று, கூறவில்லை, '' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X