பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'சந்திரயான் - 2' விண்கலம்
ஏவுவதை நிறுத்தியது ஏன்?

சென்னை: விண்ணில் ஏவப்பட இருந்த ஒரு மணி நேரத்திற்கு முன் 'ஜி.எஸ்.எல்.வி. மாக் 3 - எம் 1' ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் 'சந்திரயான் - 2' விண்கலம் ஏவும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சந்திரயான் - 2,ராக்கெட்,சிலிண்டரில் கசிவு


நிலவை ஆராய 'இஸ்ரோ' 'சந்திரயான் - 2' என்ற விண்கலத்தை உருவாக்கியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து 'ஜி.எஸ்.எல்.வி. மாக் 3 - எம் 1' என்ற ராக்கெட் உதவியுடன் 'சந்திரயான் - 2' விண்கலம் நேற்று அதிகாலை 2:51 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. இதற்கான 'கவுன்ட் டவுன்' ஞாயிறு காலை 6:51 மணிக்கு துவங்கியது.

இந்நிலையில் 'சந்திரயான் - 2' விண்கலம் விண்ணில் ஏவப்படுதற்கு 56 நிமிடங்கள் 24 வினாடிகள் மட்டுமே இருந்த நிலையில்

'கவுன்ட் டவுன்' திடீரென நிறுத்தப்பட்டது. அந்த விபரம் சதீஷ் தவான் மையத்தில் உள்ள 'மீடியா சென்டரில்' உள்ள 'கவுன்ட் டவுன்' கடிகாரத்தில் தெரிந்தது. உடனே பத்திரிக்கையாளர்கள் அங்கிருந்த இஸ்ரோ அதிகாரிகளிடம் அதற்கான காரணம் கேட்டபோது 'எங்களுக்கும் எதுவும் தெரியவில்லை; நாங்களும் தகவலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்' என்று கூறினர்.

பின் அதிகாலை 2:40 மணிக்கு இஸ்ரோவின் மக்கள் தொடர்பு அதிகாரி 'ராக்கெட்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக 'சந்திரயான் - 2' விண்கலம் விண்ணில் ஏவுவது தள்ளிவைக்கப்பட்டு உள்ளது; அதன் விபரம் பின்னர் தெரிவிக்கப்படும்' என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து விண்கலம் ஏவுதலை பார்க்க சதீஷ் தவான் மையத்திற்கு வந்த 3000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் உட்பட பலரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது: ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை விண்ணில் ஏவும் பணியில் முதல் படியாக திரவநிலை எரிபொருளும் திட எரிபொருளும் பயன்படுத்தப்பட்ட பின் கிரையோஜெனிக் திரவ எரிபொருள் பயன்படுத்தப்படும். அதில் திரவநிலை ஆக்சிஜன் திரவநிலை ஹைட்ரஜன் இருக்கும்.

Advertisement

இவை தனித்தனியாக இரு டேங்குகளில் வைக்கப்பட்டிருக்கும். அவற்றை திறந்ததும் எரிபொருளாக மாறும். டேங்குகள் வால்வு உதவியுடன் திறக்கப்படும். அந்த வால்வை திறக்க சிறிய சிலிண்டரில் உள்ள 'ஹீலியம்' என்ற எரிவாயு அதிக அழுத்தத்தில் செல்லும்.

ராக்கெட் ஏவ தயாராக இருந்த சமயத்தில் திடீரென சிலிண்டரில் கசிவு ஏற்பட்டது. இதனால் வால்வை திறக்க அதிக அழுத்தத்தில் எரிவாயு செல்லவில்லை. இந்த தொழில்நுட்ப கோளாறால் 'சந்திரயான் - 2' விண்ணில் ஏவும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது பிரச்னை ஏற்பட்ட பகுதியில் சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. அந்த பணி முடிந்ததும் ராக்கெட் ஏவப்படும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (7+ 30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Meenu - Chennai,இந்தியா
16-ஜூலை-201920:47:41 IST Report Abuse

Meenu. உலக நாடுகள் எல்லாம் இனி நம் பின்னால வர வைக்க போறாங்க.

Rate this:
16-ஜூலை-201919:33:55 IST Report Abuse

ஆப்புஹீலியம் எரிவாயு அல்ல... நம்ம ஊர்ல கேஸ் பலூன்னு ஒண்ணு விப்பாங்களே அதுக்குள்ளாற இதைத்தான் ரொப்புவாங்க. இது எரியாது.

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஜூலை-201912:52:58 IST Report Abuse

தமிழ்வேல் இன்று இரவு 12 .13 லிருந்து 1 .31 வரை சந்திர கிரகணமாச்சே (உண்மை), சந்திரனுக்கு லீவுன்னு நினைச்சேன். (தமாஷுக்கு)

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X