அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அ.தி.மு.க.,வுக்காக தேர்தல் வியூகமா?
மறுக்கிறார் பிரஷாந்த் கிஷோர்

தமிழக சட்டசபைக்கு, 2021ல் நடக்க உள்ள தேர்தலில், ஆளும் அ.தி.மு.க.,வுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து தர உள்ளதாக வந்த செய்தியை, பிரபல தேர்தல் வியூக நிபுணர், பிரஷாந்த் கிஷோர் மறுத்துள்ளார்.

A.D.M.K,ADMK,அ.தி.மு.க,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்


கடந்த, 2014ல், பிரதமர் மோடி தலைமையில், மத்தியில், பா.ஜ., ஆட்சி அமைந்தபோது தான், அந்த வெற்றிக்கு பின்னணியில், பிரஷாந்த் கிஷோர் வகுத்து தந்த வியூகங்களே காரணம் என, தெரிய வந்தது.

அமோக வெற்றி:


அதன்பிறகு, நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள், அவருடைய சேவையை பெற முயற்சித்து வருகின்றன. பீஹாரில், 2015ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது, நிதிஷ்குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத்

தலைமையிலான, ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அந்தத் தேர்தலிலும், பிரஷாந்த் கிஷோரின் வியூகங்களால் தான், கூட்டணியின் வெற்றி சாத்தியமானது.

சமீபத்தில், ஆந்திராவில் நடந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலின்போது, ஜெகன்மோகன் ரெட்டியின், ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சிக்கு பிரஷாந்த் கிஷோரின், ஐ.பி.ஏ.சி., எனப்படும், இந்திய அரசியல் செயல் குழு அமைப்பு வியூகங்களை வகுத்து தந்தது. அதன் பலனாக, சட்ட சபை தேர்தலில், ஒய்.எஸ்.ஆர்.காங்., மிகப் பெரிய வெற்றியை பெற்று, ஜெகன் மோகன் ரெட்டி முதல்வரானார்; லோக்சபா தேர்தலிலும், அந்தக் கட்சி அமோக வெற்றி பெற்றது.

தற்போது, மேற்கு வங்கத்தை ஆளும் முதல்வர், மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., கட்சிக்காக, பிரஷாந்த் கிஷோர் வியூகங்களை வகுத்து வருகிறார். வரும், 2021ல் அங்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

செய்தி:


இந்நிலையில், தமிழகத்தில், 2021ல் நடக்கும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு, பிரஷாந்த் கிஷோர், தேர்தல் வியூகங்களை

Advertisement

வகுத்து தர உள்ளதாக, பரவலாக செய்தி வெளி வந்தன. அதேபோல், நடிகர் கமல்ஹாசனின், மக்கள் நீதி மையத்துக்காகவும், அவர் பணியாற்ற உள்ளதாக செய்திகள் வெளியாகின.

இது குறித்து, பிரஷாந்த் கிஷோர் கூறியதாவது: நான், பலரையும் சந்தித்து பேசுவதால், அவர்களுக்காக வியூகங்களை வகுத்து தர உள்ளதாக கூற முடியுமா. அ.தி.மு.க., உடனோ, மக்கள் நீதி மையத்துடனோ, தேர்தல் வியூகம் தொடர்பாக எந்த பேச்சும் நடக்கவில்லை. இது தொடர்பாக வந்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை. ஒரே நேரத்தில், ஒரு மாநிலத்தை சேர்ந்த இரண்டு கட்சிகளுக்கு வியூகங்களை வகுத்து தர முடியுமா என்ன. இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
16-ஜூலை-201915:58:49 IST Report Abuse

J.Isaacமக்களுக்கு சேவை செய்து ஆட்சிக்கு வரவேண்டும் . அதைவிட்டுவிட்டு இந்த விதமான முறைகளை ஆதரிக்கக்கூடாது . இந்த ஆளுடைய தந்திரம் தமிழ் நாட்டில் செல்லாது .

Rate this:
Balaji - Chennai,இந்தியா
16-ஜூலை-201917:43:13 IST Report Abuse

Balajiஅரிசி சேவையை? கம்பு செய்யவா? செரிக ஹெலி குரு. ...

Rate this:
சிவ.இளங்கோவன் . - Thanjavur,இந்தியா
16-ஜூலை-201910:51:14 IST Report Abuse

சிவ.இளங்கோவன் .உன்னோட முதல் தோல்வியும் அதுவாகத்தான் இருக்கும் .. அதிமுகவிற்கு வேலைசெய்து தான் பாரேன் .. அப்புறம் உன் பொழப்பில் மண்ணுவிழுந்துவிடும் .

Rate this:
Suri - Chennai,இந்தியா
16-ஜூலை-201909:37:15 IST Report Abuse

Suriஎந்த வ்யூகத்துக்கும் பலன் கிடைக்காது என்று தெளிவாக புரிந்து கொண்டு தப்பித்தார். இந்த அடிமை கூட்டம் எந்தவிதமான மீட்புக்கு உகந்தது அல்ல குறைந்த பட்ச வெற்றிக்கு கூட சாத்தியம் இல்லை என்பதை நன்றாக தெரிந்து கொண்டார்.

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X