வைகை அணையில் தண்ணீர் திருட்டு என்ன செய்கிறது பொதுப்பணித்துறை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வைகை அணையில் தண்ணீர் திருட்டு என்ன செய்கிறது பொதுப்பணித்துறை

Added : ஜூலை 16, 2019
Share
 வைகை அணையில் தண்ணீர் திருட்டு என்ன செய்கிறது பொதுப்பணித்துறை

மதுரை : வைகை அணை நீர்பிடிப்பு பகுதியில் தண்ணீர் திருட்டு தாராளமாக நடக்கிறது. இதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணை 71 அடி உயரம், 6 ஆயிரத்து 868 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டது. மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாய நீராதாரமாக விளங்கும் அணை, தற்போது வறட்சியில் சிக்கியுள்ளது. சில வாரங்களுக்கு முன் நீர்வரத்து அடியுடன் நின்ற நிலையில் நேற்று காலை வினாடிக்கு 2 கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 27.99 அடியாகவும், நீர் இருப்பு 298 மில்லியன் கன அடியாகவும் இருந்தது.

மதுரை, தேனி மாவட்ட குடிநீருக்காக வினாடிக்கு 60 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 20 முதல் 22 அடி வரை மண் மேவி இருப்பதால், எஞ்சிய 6 அடிக்கு மட்டுமே நீர் எடுக்க முடியும். தொடர்ந்து மழை பொய்த்தால் சில வாரங்களில் அணை முற்றிலும் வறண்டுவிடும்.அணை பகுதியில் தண்ணீர் திருட்டு நடக்கிறது. நீர்பிடிப்பு பகுதியில் ராட்சத பள்ளம் தோண்டி அதில் ஊறும் நீரை மோட்டார் மூலம் உறிஞ்சி விளைநிலங்களுக்கு கொண்டு செல்கின்றனர். இதற்காக மோட்டார், குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அணையிலுள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு அருகில் நீர்பிடிப்பு பகுதியில் இத்திருட்டு நடக்கிறது. தடுக்க வேண்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X