செப்., 22ல் பிரதமர் மோடி உரை; ஹூஸ்டன் மக்கள் எதிர்பார்ப்பு

Updated : ஜூலை 16, 2019 | Added : ஜூலை 16, 2019 | கருத்துகள் (23)
Advertisement

ஹூஸ்டன்: செப்டம்பரில் அமெரிக்கா வரும், பிரதமர் மோடியை, ஹூஸ்டன் நகர மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்; அங்குள்ள, இந்தியர்கள் மத்தியில், அவர் உரையாற்ற உள்ளார்.






வரும் செப்டம்பர், 20 - 23ம் தேதிகளில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டம் நடக்க உள்ளது. அதில் பங்கேற்க வரும், பிரதமர் மோடி, 22ம் தேதி, ஹூஸ்டன் நகரில், இந்தியர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், வெளியிடப்படவில்லை. எனினும், ஹூஸ்டன் நகரில் உள்ள இந்தியர்களுக்கு கிடைத்த தகவல்படி, 22ம் தேதி, மோடி பேச உள்ளதாக கூறப்படுகிறது.





கடந்த, 2014ல், பிரதமராக பொறுப்பேற்ற மோடி, இதுவரை, அமெரிக்காவில் இரண்டு, அமெரிக்க - இந்தியர் கூட்டங்களில் பேசியுள்ளார். அவை, கலிபோர்னியாவின் சிலிக்கான் வேலி மற்றும் நியூயார்க் நகரம். ஹூஸ்டன் நகரில் அவர், 22ம் தேதி உரையாற்றினால், அது, மூன்றாவது உரையாக இருக்கும்; இரண்டாவது முறையாக, பிரதமராக பொறுப்பேற்ற பின், அவரின் முதல் உரையாக இருக்கும்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஜூலை-201918:49:55 IST Report Abuse
ஆப்பு என்ன எதிர்பாக்க்ய்றாங்க? அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு ஆளுக்கு 15 மில்லியன் டாலர் போடற அளவுக்கு அமரிக்காவுல கருப்பு பணம் பதுக்கி வெச்சிருக்காங்க... நூறே நாள்ள நீங்க நினச்சா வெளீல கொண்டாந்துருவோம்னு பேசுவாரா?
Rate this:
Share this comment
Cancel
Yezdi K Damo - Chennai,இந்தியா
16-ஜூலை-201912:11:16 IST Report Abuse
Yezdi K Damo தயவுசெய்து இந்த போட்டோவை போடாதீங்க தினமலர் [முதல் போட்டோ}. எனக்கு ஹாலிவுட் பட நியாபகம்தான் வருது. இவருடைய பேச்சு கேட்டா காதுல ரத்தம் வருமே . Feel sorry for the Indian community in Houston.
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
16-ஜூலை-201914:33:13 IST Report Abuse
Nallavan Nallavanஹூஸ்டன் நகரவாசி இந்தியர்களே ஆவலாக உள்ளதாக செய்தியில் இருக்கிறது ........
Rate this:
Share this comment
Cancel
Venkata Subbukrishnan - Hyderabad,இந்தியா
16-ஜூலை-201910:39:45 IST Report Abuse
Venkata Subbukrishnan அமெரிக்காவுக்கு அவரு போய் இந்தியாவுக்கு என்ன ஆவ போகுது தெரியலேய்யே?
Rate this:
Share this comment
Sundar - ,
16-ஜூலை-201913:28:28 IST Report Abuse
Sundarநீங்க ஐதராபாத் போனவுடன் ஓங்கூருக்கு என்ன ஆச்சோ அதே தான்! ஒன்றரை அணா போனும் கொஞ்சூண்டு டேட்டாவும் இருந்தா என்ன வேனா கேபீங்களா சார்?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X