சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நான்கு வீடுகளுக்கு தீ வைத்த 10 பேர் கைது

Added : ஜூலை 16, 2019
Share
Advertisement

விழுப்புரம்:கோட்டக்குப்பம் அருகே நான்கு வீடுகளை தீயிட்டு கொளுத்திய வழக்கில், பத்து பேரை போலீசார் கைது செய்தனர்.கோட்டக்குப்பம் அடுத்த அனிச்சங்குப்பத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் வினோத், 40; இவரும் அவரது நண்பர் முகிலன் என்பவர் கடந்த 11ம் தேதி புதுச்சேரி நோக்கி பைக்கில் சென்ற போது, 4 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து வெட்டியது. இதில், வினோத் பரிதாபமாக இறந்தார்.கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, கலைஞர்(எ) நாகராஜ் உட்பட 7 பேரை கைது செய்தனர். இதில், நாகராஜ் மீனவர் சங்க பொறுப்பில் இருப்பதை பயன்படுத்தி, அவரது பகுதிக்கு தேவையானதை செய்து கொள்வதாலும், முன்விரோத பகையில், வினோத்தை கொலை செய்திருக்க கூடும் என நினைத்துள்ளனர்.அதனால் அவரது ஆதரவாளர்களாகிய அனிச்சங்குப்பம் சுகனேஷ்,30; கோதண்டபானி,49; சதீஷ்,24; கலைவாணன்,27; குமரன்,28; அஞ்சாபுலி,54; ஞானமணி,54; சிவக்குமார்,37; ராஜா, 30; வாசு,22; ஆகியோர் கடந்த 13ம் தேதி, நாகராஜ், அவரது அண்ணி ரீனா உட்பட உறவினர்கள் நான்கு பேரின் வீட்டில் அத்துமீறி உள்ளே நுழைந்து பொருட்களை உடைத்து சேதமாக்கி தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.இது சம்பந்தமாக, நாகராஜ் மனைவி துர்காதேவி, ரீனா ஆகியோர் அளித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து சுகனேஷ் உட்பட பத்து பேரை நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X