காணாமல் போன இந்தியரின் உடல் மீட்பு

Added : ஜூலை 16, 2019 | கருத்துகள் (1)
Advertisement

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் படித்து வந்த இந்திய மாணவர், போஷிக் சர்மா, 21, தனது நண்பர்களுடன் விக்டோரியா மாகாணத்தின் மேரிஸ்வில்லே பகுதிக்கு சென்றுள்ளார். குடித்துவிட்டு, விளையாடிக் கொண்டிருந்தபோது, நண்பர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதலை அடுத்து, போஷிக் சர்மா, அங்கிருந்து புறப்பட்டுள்ளார். அதன்பிறகு, காணாமல் போனதால், அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், மேரிஸ்வில்லேவுக்கு வெளியே, புதரில் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இது கொலையாக இருப்பதற்கு வாய்ப்பில்லை என, போலீசார் தெரிவித்துள்ளனர். அங்கு கடும் குளிர் நிலவுவதால், குளிர் தாங்காமல் அவர் இறந்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chails ahamad - doha,கத்தார்
16-ஜூலை-201920:37:01 IST Report Abuse
chails ahamad கல்வி கற்க சென்ற இடத்தில் மது போதை அவசியமற்றது , உயிர் இழந்த நிலைகளில் மாணவரின் உடல் கண்டு எடுக்கப்பட்டது மிகவும் என் மனதை கனக்கின்றது, பிள்ளையை இழந்த மாணவரின் பெற்றோர்களுக்கு மனதில் அமைதியை தந்தருளவும் , உயிர் இழந்த மாணவரின் ஆன்மா அமைதியடையவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X