பா.ஜ.,வில் முன்னாள் பிரதமர் மகன் ஐக்கியம்

Updated : ஜூலை 16, 2019 | Added : ஜூலை 16, 2019 | கருத்துகள் (9)
Advertisement
பா.ஜ., சந்திரசேகர், மகன், நீரஜ் சேகர், நட்டா,

புதுடில்லி: முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகனும், சமாஜ்வாதிகட்சி ராஜ்யசபா எம்.பி.யுமான நீரஜ் சேகர், பா.ஜ.,வில் இணைந்தார். முன்னதாக அவர் தனது எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார்.

உ.பி.யில் பிரதான கட்சியான அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ராஜ்யசபா எம்.பி.யாக உள்ளவர் நீரஜ் சேகர், இவர் மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் ஆவார். நேற்று தனது பதவியை ராஜினாமா செய்து அதன் கடிதத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் அளித்தார்.


கட்சி வட்டாரங்கள் கூறுகையில், நீரஜ் சேகரின் எம்.பி.பதவி காலம் அடுத்தாண்டு நவம்பரில் நிறைவடைகிறது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வைத்து படு தோல்வியடைந்தது. அகிலேஷூடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கட்சியிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். விரைவில் பா.ஜ.வில் இணைய திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக பா.ஜ. மேலி நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு வருகிறார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நீரஜ் சேகர், டில்லியில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில், பொது செயலாளர்கள் பூபேந்திர யாதவ் மற்றும் அனில் ஜெயின் முன்னிலையில், பா.ஜ.,வில் இணைத்து கொண்டார். தொடர்ந்து, தேசிய செயல் தலைவர் ஜே.பி., நட்டாவையும் சந்தித்து பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THENNAVAN - CHENNAI,இந்தியா
16-ஜூலை-201914:30:07 IST Report Abuse
THENNAVAN தமிழகத்தில் கட்சி மாறாத ஒன்றுக்கு மேற்படட கூடடணி வைக்காத தலைவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்க .புதியவர்கள் பற்றி நீங்க கேடடாள் ஒரே வார்த்தை அவர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது அதை சொல்லிவிட்டு பின் பதில் சொல்லுங்கள்.(புதியவர்கள் அனைவருமே ஹிந்தி,ஹிந்து எதிர்ப்பாளர்களாக நடந்து கொள்வதை பார்க்கும்போது அண்ணாவும் ,கருணாநிதியும் ராமசாமி நாயக்கரும் விட்டு சென்ற தொழிலை இவர்கள் செய்கிறார்கள் போல தோணுது,அதாவது பணம் கொடுப்பவனுக்கு சாரமும் ,கொடுக்காத ஹிந்து தமிழனுக்கு வசை பாடலும் பரிசாக கொடுக்கிறார்கள்)இன்னும் தமிழன் ஏமாற அடுத்த ரவுண்டு தயாராக இருங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
16-ஜூலை-201910:38:48 IST Report Abuse
Ramalingam Shanmugam 370 நீக்கும் வரை தொடரும்
Rate this:
Share this comment
Cancel
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
16-ஜூலை-201909:37:47 IST Report Abuse
DSM .S/o PLM நீரஜ், முன்னாள் பிரதமரின் மகன். சந்திரசேகர் எப்படிப்பட்ட ஒரு பெரும் தலைவர்.. இளம் துருக்கியர்.. எமர்ஜென்சியை எதிர்த்து பதவியை உதறி தள்ளி விட்டு வெளியேறியவர்.. நேர்மையானவர்.. நாடுமுழுதும் உண்மையான பாதயாத்திரை நடத்தியவர்.. எளிமையானவர்.. ஆனால் அவரது மகன் ஊழலுக்கு அஸ்திவாரம் போட்ட முலாயம் / அகிலேஷ் கட்சியில் .. சில நேரங்களிலரசியலை நினைத்தால் அருவெறுப்பாக இருக்கிறது .
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
16-ஜூலை-201911:31:18 IST Report Abuse
Pannadai Pandianஇளம் துருக்கியர்கள் யார் ? இவர்களை young turks என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். ஆட்டோமான் எம்பயர் துருக்கியில் இருந்து ஐரோப்பா வரை பல நாடுகளை தங்கள் பலத்தால் பிடித்து ஆட்டோமான் எம்பையரை நிறுவியது. அது முஸ்லீம் காலிபைட் ஆட்சி. இந்த துருக்கியர்கள் அவர்கள் ஆட்சியின் போது செய்யாத பஞ்சமா பாதகங்கள் இல்லை. ஆர்மீனியாவில் லட்சக்கணக்கான கிறிஸ்துவர்களை கொன்றொழித்தார்கள். தற்போதைய போஸ்னியா, கொசோவா, அல்பேனியா, சீசனிய, டார்ட்டார் முஸ்லிம்கள் இவர்களின் அடக்கு முறையால் மதம் மாற்றம் செய்யப்பட்டவர்கள். ஆனால் கடந்த 20 நூற்றாண்டின் துவக்கத்திலும், 19ஆம் நூற்றாண்டின் கடைசி பகுதிகளிலும் துருக்கியர்கள் ஆட்சிக்கு எதிராக வெள்ளைக்காரர்கள் கிளர்ந்தெழுந்தார்கள். வெள்ளைக்காரர்கள் வெற்றி பெற்று ஒரு கட்டத்தில் ஆட்டோமான் ஆட்சி ஐரோப்பாவில் முடிவுக்கு வந்தது. அப்படி முடிவுக்கு வந்த பின் சில இளம் துருக்கிய தலைவர்கள் மீண்டும் தாங்கள் இழந்த ஐரோப்பிய பகுதிகளை மீட்டெடுக்க முயன்றனர். கிடைத்ததா? உதை தான் முயற்சிக்கு பலனாக கிடைத்தது. அதனால் ஐரோப்பா பக்கம் தலை வைக்காமல் தங்கள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் மத்திய கிழக்கில் தங்கள் திறமையை காட்டத்துவங்கினர். சிறிது வெற்றி பெற்றாலும், தக்க வைக்க முடியவில்லை. எல்லா வித காரியங்களுக்கும் எழுச்சியும் வீழ்ச்சியும் உண்டு. இந்தியாவில் நேரு காலத்தில் இந்திரா காலத்தில் காங்கிரஸ் எழுச்சி கண்டது ஆனால் ராஜிவ், சோனியா, ராகுல் காலத்தில் வீழ்ச்சி காணுகிறது. இது காலத்தின் கட்டாயம். இனி காங்கிரஸ் என்ன முயன்றாலும் மேலே ஏற முடியாது, அது முடிவுக்கு வந்துள்ளது. அதுபோலவே ஆட்டோமான் எம்பெயரும் வீழ்ச்சி பெற்று ஆசிய மைனர் என்று பேர் பெற்ற துருக்கி 1947 வாக்கில் ஆசியாவின் சீக்காளி என்று பேர் வாங்கியது. அதன் வீழ்ச்சிக்கு கூடா நட்பும் ஒரு காரணம். முதல் இரண்டாம் உலக போரில் ஜெர்மனிக்கு ஆதரவாக போரில் பங்கேற்றதும் அதன் வாழ்வுக்கு காரணம்....
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
16-ஜூலை-201911:39:13 IST Report Abuse
Pannadai Pandian……...அதன் வீழ்ச்சிக்கு காரணம் என்று படிக்கவும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X