கர்நாடகாவில் 5 நாளில் பா.ஜ. ஆட்சி: எடியூரப்பா உறுதி

Added : ஜூலை 16, 2019 | கருத்துகள் (22)
Advertisement
கர்நாடகாவில் 5 நாளில் பா.ஜ. ஆட்சி: எடியூரப்பா உறுதி

பெங்களூரு: கர்நாடகாவில் 5 நாட்களில் பா.ஜ. ஆட்சி அமைக்கும் என முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறினார்.
கர்நாடகாவில் ஆளுங்கூட்டணியை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் நாளுக்கொரு அரசியல் நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. ஆட்சியை தக்க வைக்கும் விதமாக நம்பிக்கை கோரும் தீர்மானத்தை நேற்று காலையில் சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் முதல்வர் குமாரசாமி வழங்கினார். இதையடுத்து நம்பிக்கை தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்துவதற்கான தேதியை அறவிக்க சபாநாயகர் தலைமையில் சட்டசபை ஆலோசனை குழு கூட்டம் நடந்தது.




இக்கூட்டத்தில் ம.ஜ.த. சார்பில் முதல்வர் குமாரசாமி; காங்கிரஸ் சார்பில் சட்டசபை காங். குழு தலைவர் சித்தராமையா துணை முதல்வர் பரமேஸ்வர்; பா.ஜ. சார்பில் எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 'ஜூலை 18ம் தேதி நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தலாம்' என சபாநாயகர் தெரிவித்தார். இந்நிலையில் எடியூரப்பா செய்தியாளர்களுக்கு அளித்த கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்ல குமாரசாமி தவறிவிட்டார். அவரது கட்சியைச்சேர்ந்த எம்.எல்.ஏ.க்களே குமரசாமியை முதல்வராக ஏற்க விரும்பவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பின் இந்த அரசு கவிழும், இன்னும் 4 அல்லது 5 நாட்களில் பா.ஜ. ஆட்சியை அமைக்கும். எங்களது கட்சி (பா.ஜ.) எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
16-ஜூலை-201916:02:41 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam திமுகவின் காய்ச்சல், எடியூரப்பாவுக்கும் தொற்றிவிட்டதா?
Rate this:
Share this comment
Cancel
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
16-ஜூலை-201915:41:27 IST Report Abuse
Sridhar Rengarajan வேண்டாம் ஆட்சி மாற்றத்தை விட கர்நாடக சட்டமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் நடத்தினால் பாஜக இருநூறு இடங்களுக்கு குறையாமல் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கலாம். காங்கிரஸ் பாதி இடங்களில் டெபாசிட்டை இழந்து கேவலமாக தோற்கும். மஜத முக்கால்வாசி இடங்களில் டெபாசிட் இழக்கும். கர்நாடகாவில் காங்கிரசையும் தேவகவுடா கட்சியையும் ஒழித்துக்கட்ட பாஜகவுக்கு இப்படி ஒரு சிறப்பான வாய்ப்பு கிடைக்காது.
Rate this:
Share this comment
Cancel
16-ஜூலை-201915:26:12 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் வாழ்த்துக்கள் எடுயூரப்பா ஜி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X