நேர்மை எஸ்.ஐ.,க்கு நேர்ந்த சோகம்

Updated : ஜூலை 16, 2019 | Added : ஜூலை 16, 2019
Advertisement
உலக கோப்பையில், இங்கிலாந்து 'த்ரில்' வெற்றி பெற்றது குறித்து, சித்ராவின், வீட்டில், மித்ரா 'டிஸ்கஷன்' செய்து கொண்டிருந்தாள்.''ச்சே... நாம ஜெயிக்க வேண்டிய 'கப்' அநியாயமா கோட்டை விட்டுட்டாங்கா...''''என்னக்கா... பண்றது. வெளையாட்டுன்னு வந்துட்டா, யாரோ ஒருத்தர்தானே ஜெயிக்கணும்,''''அடடே... வரவர ரொம்ப தத்துவம் பேசற. பரவாயில்ல. இதுவும் நல்லாத்தான் இருக்குது. ஏண்டி
 நேர்மை எஸ்.ஐ.,க்கு நேர்ந்த சோகம்

உலக கோப்பையில், இங்கிலாந்து 'த்ரில்' வெற்றி பெற்றது குறித்து, சித்ராவின், வீட்டில், மித்ரா 'டிஸ்கஷன்' செய்து கொண்டிருந்தாள்.''ச்சே... நாம ஜெயிக்க வேண்டிய 'கப்' அநியாயமா கோட்டை விட்டுட்டாங்கா...''''என்னக்கா... பண்றது. வெளையாட்டுன்னு வந்துட்டா, யாரோ ஒருத்தர்தானே ஜெயிக்கணும்,''''அடடே... வரவர ரொம்ப தத்துவம் பேசற. பரவாயில்ல. இதுவும் நல்லாத்தான் இருக்குது.


ஏண்டி மித்து, ராயபுரம் கட்டப்பஞ்சாயத்து ஏரியாவா மாறிடுச்சே. புதுசா, ஆட்டோ ஸ்டேண்ட் வந்ததுல, இவ்வளவு விஷயமிருக்கா,''''என்னக்கா, கம்யூ., வார்டுக்குள்ளயே கட்டப்பஞ்சாயத்தா.'' கிண்டலாக கேட்டாள்.''தோழர்கள்தானே பண்றாங்க. அங்க இருக்கற தோழர் சொல்ற வேலையை மட்டும்தான் கார்ப்ரேஷன் ஆபீசருங்க செய்றாங்களாம். ஏன்னா, அவரோட, சொகுசு ஓட்டலுக்கு, அதிகாரிகள் உட்பட பலர் நிரந்தர கஸ்டமர்களாம். அப்பப்ப, பார்ட்டி, டின்னர் எல்லாம் அங்கதான், சத்தமே இல்லாம நடக்குதாம்''
''அதில்லாம, வார்டிலுள்ள கார்ப்ரேஷன் ஆபீசுல வேலை செய்ற, தற்காலிக பணியாளருக்கான சம்பளம் கூட, தோழர் வகையறாதான் கொடுக்கறாங்களாம்,'' ''அப்புறம், விசுவாசத்தை காட்டாம என்ன செய்வாங்களாம்?'' சிரித்தாள் மித்ரா.
''அதனாலதான், அவரோட ஓட்டல் முன்னாடி, புதுசா ஆட்டோ ஸ்டேண்ட் போட்டிருக்காங்க. பழைய ஸ்டாண்டிலேயே, இடமிருக்குது. ஆனா, எதிர்த்த மாதிரியே, புது ஸ்டேண்ட் போட்டிருக்காங்க''''அந்த இடத்தை, ஆபீசர்கள், தோழர்களுக்கு தாரை வார்த்து கொடுத்துட்டு, ரெவின்யூதான் தான் நடவடிக்கை எடுக்கணும்னு, தந்திரமா தப்புச்சிட்டாங்க,''''ஏக்கா... அப்ப, ராயபுரத்தில், தோழர்கள் கட்டப்பஞ்சாயத்து கொடி கட்டி பறக்குதுன்னு சொல்லுங்க,'' என, மித்ரா சொல்லவும், சித்ராவின் அம்மா, ஸ்நாக்ஸ், டீ சகிதம் வந்தார்.''மம்மி... நானே சொல்லலாமுன்னு இருந்தேன்.
கரெக்டா, நீங்களே கொண்டு வந்துட்டீங்க. தேங்க்ஸ்மா. சாப்பிடு மித்து,'' என்றதும், அவள் சாப்பிட துவங்கினாள்.'ரெண்டு பேரும் பேசிட்டிருங்க. நான், மங்கலம் வரை போயிட்டு வந்துடறேன்,' என, சித்ராவின் அம்மா கிளம்ப, ''ஓ.கே., மம்மி,'' என்றாள்.''அக்கா... மங்கலம்னு சொன்னதும், ஆளுங்கட்சி நிர்வாகிகள், பல்லடம் எம்.எல்.ஏ.,வை புறக்கணிச்ச விஷயம்தான் ஞாபகத்துக்கு வருது,''''அட... அப்டியா? அது என்ன மேட்டர்?''''ஆளுங்கட்சி சார்பில், தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்சபா எம்.பி., களுக்கு வாழ்த்து தெரிவிச்சு.
இடுவாய் பகுதியில், வாழ்த்து பேனர் வச்சிருந்தாங்க; அதில், தொகுதி எம்.எல்.ஏ., பெயர், போட்டோ இல்லை,''''ஏன்னு கேட்டதுக்கு, எம்.எல்.ஏ., தன்னோட, சொந்தக்காரங்களுக்கு மட்டும் டெண்டர் கொடுக்கிறாரு. நாங்க, போனில் கூட அவர்கூட பேசமுடியலை. யாரையும் கண்டுக்கறதே இல்லை. இனியும் பொறுமையா இருக்க முடியாது. அதனால, எம்.எல்.ஏ.,வை புறக்கணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம்''னு, தைரியமாவே சொல்றாங்க.''ஆமா... மித்து. அவங்க சொல்றதிலும் நியாயம் இருக்கில்ல. கஷ்டப்பட்டு, ரோடு ரோட அலைஞ்சு, அவரை ஜெயிக்க வைச்சா, அவரு கண்டுக்கலைன்னா, இப்படித்தான். அவருக்கு மட்டுமல்ல... எல்லாத்துக்கும் இப்டித்தான் ஒரு நாள் நிலைமை வரும்,'' என்றாள் சித்ரா.''நீங்க... சொல்றதும் சரிதாங்க... இங்க இப்படின்னா, டிப்போ அதிகாரிங்க பண்ணின வேலையால, பயணிகள் ரொம்ப பாதிக்கப்பட்டுட்டாங்காக்கா,''
''எங்கே... எந்த பஸ்சில்?''ஆர்வமாக கேட்டாள் சித்ரா,''அக்கா.. திருப்பூரிலிருந்து திருச்சிக்கு ஒரு அரசு பஸ், சாயந்திரம், ஏழு மணிக்கு புறப்பட்டது. அது ஈரோடு கோட்ட பஸ்சாம். கரூர் கிட்ட மணவாசி செக்போஸ்டில், பஸ்சை நிறுத்திட்டாங்க,''''அப்ப, 10:30 மணி. ரொம்ப நேரமா பஸ் நின்னதால, பயணிகள் என்ன ஏதுன்னு விசாரிச்சதில், 'டோல்கேட்டில், டிக்கெட் எடுக்கலை'ன்னு தெரிஞ்சதும், எல்ேலாரும், கண்டக்டரை ஒரு பிடிபிடிச்சாங்க?''
''அடடே, அப்புறம் என்னாச்சு?''''அவரும், இது 'ஸ்பேர் பஸ். அதுக்கான லெட்டர்' என்று சொன்னாலும், டோல்கேட்டில் இருந்த ஊழியர்கள் ஒத்துக்கலை. சரின்னுட்டு, ஈரோட்டிலிருக்கிற ஏ.இ., கூப்பிட்டா, அவரு போனை அட்டெண்ட் பண்ணலையாம்,''''நேரம் ஆயிட்டே இருந்ததில், கண்டக்டர் வேற வழியில்லாம, பணத்தை கட்டினதும்தான், பஸ்சை விட்டிருக்காங்க. அந்த ராத்திரி நேரத்தில, பனியன் லேபர், லேடீஸ் இப்படி பலரும் கஷ்டப்பட்டுட்டாங்காக்கா,''''பாரு.. இந்த ஆபீசருங்க பண்ற வேலைய. ஊழியர்களையும், பயணிகளையும் பாடாய்ப்படுத்தறதே இவங்களுக்கு வேலையா போச்சு.
இதையெல்லாம், மேலதிகாரிங்க கேட்கவே மாட்டாங்களா?'' என்ற சித்ரா, 'சாயா தேக்கோ' என இந்தியில் பேசினாள்.''என்னக்கா... திடீர்ன்னு இந்திக்கு மாறிட்டீங்க...''''ஆமாண்டி... இனி, இந்தி கத்துக்க டியூஷன்' போலாமுன்னு அதிகாரிங்க முடிவு பண்ணியிருக்காங்க''''என்னக்கா, மத்திய அரசு ஏதாச்சும் புதுசா உத்தரவு போட்டிருக்கா...'' என்றாள் மித்ரா.''இல்லடீ. துப்புரவு பணியாளர் மத்திய ஆணைய உறுப்பினர், திருப்பூரில் ஆய்வு நடத்தினார்.
அவருக்கு, ஆங்கிலம் சரியா வரலைனு சொல்லி, 'இந்தி தெரிஞ்ச யாராவது உதவி செய்யுங்க'னு சொன்னதால, இந்தியிலயே பேசினாரு''''உடனே, இந்தி தெரிஞ்ச, கார்ப்ரேஷன் ஏ.சி., ஒருத்தர், 'டிரான்ஸ்லேட்' செஞ்சு சமாளிச்சாரு. இனி, இந்த மாதிரி ஆகக்கூடாதுன்னு, இந்திக்காரங்கதான் இங்க வருவாங்க போல இருக்க; சீக்கிரமா, இந்தி 'டியூஷன்' போகனும்'னு பேசியிருக்காங்க'' என்றாள் சித்ரா.
''ஆமாமா... ஏற்கனவே, திருப்பூரில் எங்க பார்த்தாலும், நார்த் இன்டியன்ஸ் இருக்காங்க. ஓட்டல், பெட்டிக்கடை வெச்சிருக்கவறங்க, பஸ்சில் கண்டக்டர் இப்படி பலரும் அரைகுறையா இந்தி பேசறாங்க. அதனால, ஒரு மொழியை கத்துகிட்டா நல்லதுதானே'' என்ற சித்ரா, டீயை குடிக்க ஆரம்பித்தாள்.
டேபிள் மீதிருந்த செய்தித்தாளை புரட்டிய மித்ரா, ''அக்கா... இந்த அநியாயத்தை கேட்டீங்களா? மொபைல் 'சரக்கு' கடை வேணுமின்னு, எம்.எல்.ஏ., ஒருத்தர், அசெம்பிளியில் பேசியிருக்காரு...'' என, கோபமாக பேசினாள் மித்ரா.
''ஆமாம். நானும் பார்த்தேன். காங்கயம் அருகே ஒரு ரெஸ்டாரண்ட்டில், 'சரக்கு' பதுக்கி வைச்சு, விற்றதை பொதுமக்கள் கண்டுபிடிச்சு, வெளிக்கொண்டு வந்தாங்க. இதுக்கு முக்கிய காரணமே, தொகுதி எம்.எல்.ஏ.,தானாம்,''''இந்த சம்பவம் நடந்தப்பதான், அவரு, 'மது பிரியர்கள் வசதிக்காக மதுக்கடை இல்லாத ஊர்களில் நடமாடும் மதுக்கடைகள் துவங்க வேண்டும்' என அசெம்பிளியில் பேசினாராம்.
இதனால, ரெண்டையும், 'கனெக்ட்' பண்ணி, தொகுதியில் பலரும் கேலி பேசறாங்களாம்,'' சிரித்தாள் சித்ரா.அப்போது மித்ராவின், மொபைல் போன், ''சொல்லி அடிப்பேனடி, அடிச்சாலும் நெத்தி அடிதானடி,'' என்று ஒலித்தது.எடுத்து பேசி விட்டு, வைத்த மித்ராவிடம், ''இந்த பாட்டை கேட்டவுடன்தான், கலெக்டர் ஆபீசில் நடந்த மீட்டிங் பத்தி நினைவுக்கு வருது,''''ஜல்சக்தி அபியான்' திட்டம் சம்பந்தமாக, ஒரு மீட்டிங் நடந்துச்சுல. அதில் பேசிய, 'கார்ப்ரேஷன் கமிஷனர்' வீட்டு இணைப்பில் வரும் தண்ணீரே ரொம்ப நல்லா இருக்கு.
அதையே குடிக்கலாம்,'னு பேசினாரு. ஆனா, அந்த கூட்டத்தில், கம்பெனி வாட்டர் பாட்டில் தண்ணீர் கொடுத்திருக்காங்க,''''என்னடா... இது, கமிஷனர் பேசறது ஒன்ணு. செய்றது ஒண்ணு,' மீட்டிங்கில் கலந்துகிட்டவங்க, மத்த அதிகாரிங்க காதுபடவே 'நெத்தியடி'யாக சொல்லீட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.அதைக்கேட்டு சிரித்த மித்ரா, ''அக்கா... நல்லவங்களுக்கு காலமே இல்லீங்க்கா...'' என்றாள்.''என்னடி.. யாரை என்ன சொல்றே?''''சிட்டி போலீஸ் ஏ.ஆர்.,ரில் உள்ள போலீஸ் எஸ்.ஐ., ஒருவர், கொஞ்சம் 'ஸ்டிரிட்'டாக இருப்பார்.
இதனால, ஏ.ஆர்., போலீஸ்காரங்க, அவரை திட்டிட்டே இருக்காங்களாம். இதில, கோபம் ஓவராக போயி, ஏ.ஆர்., வளாகத்தில் நிறுத்தியிருந்த அந்த எஸ்.ஐ.,யோட காரை, யாரோ நாலு டயரையும், 'கிழி'ச்சிட்டாங்க,''''இதைப்பார்த்து, அந்த எஸ்.ஐ., ரொம்ப மனசு உடைஞ்சு போயிட்டாராம். இதைப்பத்தி, கம்ப்ளைன்ட் கொடுத்திட்டார். இருந்தாலும், யாருனு கண்டுபிடிச்சு கமிஷனர் நடவடிக்கை எடுத்தா நல்லா இருக்கும்,'' என்றாள் சித்ரா.
''விடு, மித்து. முற்பகல் செய்யின், கண்டிப்பா, பிற்பகல் விளைஞ்சே தீரும்,'' என்ற, சித்ரா, ''லிங்கேஸ்வரர் ஊரில் பருவமழைக்கு பதிலா, வைட்டமின் 'ப' மழை பொழிகிறதாம்,'' என, பொடி வைத்தாள்.''எந்த டிபார்ட்மென்ட்டுங்க்கா?''''வேறெங்க... தினமும் லட்சக்கணக்கில், பணம் புழங்குற ஆபீசில்தான். ஒரு இடத்துக்கு இவ்ளோனு 'பிக்ஸ்' பண்ணி, வசூல் வேட்டையாடறாங்களாம். அதுவும் மூத்த அதிகாரி சொல்றதுதான் சட்டமாம். வேற வழியில்லாம, 'தண்டத்தீர்வை' கட்றாங்களாம்.
இதைப்பத்தி பலரும் மேலிடத்தில், புகார் பண்ணியும் யாரும் கண்டுக்கலையாம்,''''அதெப்படி நடவடிக்கை எடுப்பாங்க்கா... ஏன்னா... கரெக்டா மாமூல் போயிடுமே,'' என சிரித்த மித்ரா, ''அக்கா... வரவர இந்த 'வாட்ஸ்அப்' இல்லீகல் கிரைம் அதிகமாயிடுச்சுன்னு, லேடி இன்ஸ்பெக்டர் புலம்பறாங்களாம்,''என்று போலீஸ் மேட்டர் கூறினாள்.
''அப்படியா... சொல்லு பார்க்கலாம்''''அக்கா... பூண்டி பக்கத்தில, ஒரு ஏரியாவில் வசிக்கும் அந்த லேடிக்கு, கிட்டத்திட்ட, 50 வயசாக போகுதாம். வீட்டில எல்லோரும் வெளியே போன பின்னாடி, எப்ப பாத்தாலும், 'வாட்ஸ்அப்'பில் மூழ்கி கிடக்குமாம். போன வாரம், அடிக்கடி 'சாட்டிங்' பண்ற, 35 வயசு நபரோட 'எஸ்கேப்' ஆயிடுச்சாம்,''''நல்ல டெக்னாலஜி எதுக்கு யூஸ் ஆகுதுன்னு பாருங்க. இதிலென்ன கொடுமைன்னா, அந்த லேடிக்கு கல்யாண வயசுல, பையனும், இந்நபருக்கு, 15, 13 வயசுல குழந்தைங்களும் இருக்காங்களாம்,''''ஆமாண்டி, மித்து, தினமும் 'வாட்ஸ்அப்' தொல்லை குறித்து, பேப்பரில் வந்துட்டுத்தான் இருக்கு. காலேஜ் பசங்க., பொண்ணுங்க கூட, 'வாட்ஸ்அப்' ஐ இப்படி, வெறியோட பாப்பாங்களான்னு தெரியல.
ஆனா, இந்த 'ஆன்ட்டிஸ்' தொல்லை தாங்க முடியலைன்னு,' கவுண்டமணி பாணியில இன்ஸ்பெக்டர் புலம்பறாங்களாம்,''''தினமும் இப்படியே 'கேஸ்'வந்தா, அந்தம்மாதான் என்ன பண்ணுவாங்க சொல்லு,'' என்ற சித்ரா சொல்லவும், அவள் அம்மா வரவும் சரியாக இருந்தது. ''மம்மி... சீக்கிரம் டிபன் பண்ணுங்க, பசிக்குது,'' என்றாள். ''பத்தே நிமிஷம், ரெடி பண்ணிடறேன்,'' என்றவாறே, அவர் நகர, சித்ரா, சீரியஸாக 'டிவி' பார்க்க ஆரம்பித்தாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X