கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

Added : ஜூலை 16, 2019
Advertisement

சென்னை:செலவு செய்த, 1,500 ரூபாயை திரும்ப தராததால், ஆத்திரத்தில், நண்பரை கொலை செய்தவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீஹாரைச் சேர்ந்தவர், அருண்குமார் கச்சாப். அசாமை சேர்ந்தவர், ரஜீப்தத்தி. இருவரும் நண்பர்கள். சிந்தாதிரிபேட்டையில் நடந்த, மெட்ரோ ரயில் பணியில், காவலாளியாக வேலை செய்தனர். ரஜீப்தத்தி, 1,500 ரூபாயை, அருண்குமாருக்கு செலவு செய்துள்ளார். பலமுறை பணத்தை திருப்பி கேட்டும், அருண்குமார் பணம் தரவில்லை.இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில், அருண்குமார் மீது கல்லை போட்டு, ரஜீப்தத்தி கொலை செய்தார். இந்த சம்பவம், 2016ல் நடந்தது.சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரஜீப்தத்தியை கைது செய்தனர். வழக்கு, சென்னை, 18வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி, சத்யா முன் நடந்து வந்தது.அரசு தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், ஜெகதீசன் ஆஜரானார். ரஜீப்தத்திக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி சத்யா, நேற்று தீர்ப்பளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X