HDK trust vote on Thursday, BJP confident | அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மனு இன்று விசாரணை | Dinamalar

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மனு இன்று விசாரணை

Updated : ஜூலை 16, 2019 | Added : ஜூலை 16, 2019 | கருத்துகள் (5)
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மனு இன்று விசாரணை

புதுடில்லி: கர்நாடகாவைச் சேர்ந்த ஐந்து காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளன.
கர்நாடகாவில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தில் ஆளும் ம.ஜ.த. மற்றும் காங். கூட்டணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். 'தங்களுடைய ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும்' என 10 எம்.எல்.ஏ.க்கள் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.





அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் 'இந்த ராஜினாமா கடிதங்களின் மீதோ அல்லது அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அவர்களுடைய கட்சி அளித்த கடிதங்கள் மீதோ 16ம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது' என உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் 'தங்களுடைய ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும்' என காங்.கைச் சேர்ந்த மேலும் ஐந்து எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் இன்று விசாரிக்கப்பட உள்ளன. ஏற்கனவே வழக்கு தொடர்ந்த 10 எம்.எல்.ஏ.க்களின் மனுக்களும் இன்று விசாரிக்கப்பட உள்ளன.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X