பொது செய்தி

தமிழ்நாடு

நெற்பயிர்களுக்கு உரமிடும் பணி விறுவிறுப்பு

Added : ஜூலை 16, 2019
Advertisement

தேவதானப்பட்டி:ஜெயமங்கலத்தில் நெற்பயிர்களுக்கு உரமிடும் பணி நடைபெற்று வருகிறது.பெரியகுளம் ஒன்றியம் ஜெயமங்கலத்தில் வேட்டுவன்குளம் கண்மாயில் தேங்கும் நீரை கொண்டு ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர்மாதங்களில் ஆயிரம் ஏக்கர் பரப்பில் முதல்போக நெல்சாகுபடி பணி செய்யப்படுகிறது. தொடர்ந்து மழை இல்லாததால்கண்மாய் வறண்டு விட்டது. இந்நிலையில் கிணற்று நீரை ஆதாரமாக கொண்டு மூன்று கட்டங்களாக இரண்டாம் போக நெல்சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடவு செய்து 45 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை ஆன நெல் பயிர்களுக்கு உரமிடும் பணி துவங்கி உள்ளது.விவசாயிகள் கூறியதாவது: பருவமழை பொய்த்து விட்டது. எப்படியும் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில்நெல் நடவு செய்து விட்டோம். தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உரமிட்டு வருகிறோம், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X