கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அக்காள் கணவரை கொன்றவருக்கு ஆயுள்

Added : ஜூலை 16, 2019
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார்:சொத்து பிரச்னையில் அக்கா கணவரை கத்தியால் குத்தி கொன்ற மைத்துனருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.வெம்பகோட்டை துலுக்கன்குறிச்சியை சேர்ந்தவர் நாகராஜ் 80. இவருக்கு ரெங்கம்மாள், இந்திராணி என இரு மனைவிகள் உண்டு. 25 ஆண்டுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இந்திராணி குழந்தைகளுடன் தனித்து வசித்து வந்தார். அப்போது சொத்து தகராறு ஏற்பட்டு இதன் வழக்கு நீதிமன்றத்தில் நடக்கிறது. இதை இந்திராணி தம்பி சுப்புராம் நடத்தி வந்தார்.2014 ஏப்ரல் 14 இரவு 9:30 மணிக்கு நாகராஜ் செவல்பட்டி பஸ் ஸ்டாப் ரோட்டில் நடந்து சென்றபோது அவரை வழிமறித்து சுப்புராம் ,கத்தியால் குத்தி கொலை செய்தார். இதன் வழக்கு ஸ்ரீவில்லிபுத்துார் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. விசாரித்த நீதிபதி பாரி ,சுப்புராமுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X