அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஏற்றத்தாழ்வு இல்லாதது புதிய கல்விக்கொள்கை: தமிழிசை பெருமிதம்

Added : ஜூலை 16, 2019
Advertisement

விருதுநகர்:''காமராஜர் எந்தவித ஏற்றத்தாழ்வும் இல்லாமல் கல்வியை கொடுத்தாரோ, அதுதான் தற்போது கொண்டு வரப்பெற்றுள்ள புதிய கல்விக் கொள்கை,'' என, பா.ஜ., மாநிலைத் தலைவர் தமிழிசை தெரிவித்தார்.விருதுநகரில் அவர் கூறியதாவது: பண மதிப்பிழப்பிற்கு பின் ஒரு தலைவர் இருந்திருந்தால் என்னை பாராட்டியிருப்பார் என மோடி குறிப்பிட்டது காமராஜரை தான் .
காமராஜர் வழியில் அனைவருக்கும் நல்ல கல்வியை கொடுக்க வேண்டும் என்று தான் மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை கொண்டு வருகிறது.நவோதயா பள்ளிகள் மற்ற மாநிலங்களில் நல்ல பலனை தந்து கொண்டிருக்கிறது .ஆனால் தமிழகத்தில்தான் எதிர்க்கிறார்கள். புதிய கல்விக்கொள்கை குறித்து தெரியாதவர்கள் எல்லாம் பேசுகிறார்கள். ஸ்டாலின் தான் பேசுகிறார் என்றால் நடிகர் சூர்யாவும் பேசுகிறார்.
என்னவென்று தெரியாமலே பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக வளர்ச்சிக்கு எதிராக தி.மு.க., உள்ளிட்டகட்சிகள் அரசியல் நடத்துகிறது . பிற மொழியை படிப்பதற்கு காமராஜர் எப்போதும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை.மக்கள் ஓட்டு போடமாட்டார்கள் என தெரிந்த உடன் டிவிட்டர் பக்கத்தில் இருந்து பெரியார் படத்தை நீக்கியவர் கனிமொழி. நவோதயா பள்ளியின் பெயர் இந்தியில் உள்ளதால் இந்தியை திணிப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X