பொது செய்தி

இந்தியா

அசாம் கனமழை: வெள்ளத்தில் மிதக்கிறது தேசிய பூங்கா

Added : ஜூலை 16, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
அசாம் கனமழை: வெள்ளத்தில் மிதக்கிறது தேசிய பூங்கா

கவுஹாத்தி:வட கிழக்கு மாநிலமான அசாமில், தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், பிரம்மபுத்ரா நதியில், வெள்ளம், அபாய அளவை தாண்டி ஓடுகிறது. சாலைகள், வெள்ளத்தால் சேதமடைந்தன. தேசிய பூங்காவான காஸிரங்கா பூங்கா வெள்ளத்தில் மிதக்கிறது.
நாட்டின் வடகிழக்கு மாநிலமான அசாமிலும், வடக்கு மாநிலங்களான உத்தரபிரதேசம், டில்லி, பஞ்சாப், பீஹார் மாநிலங்களிலும், பருவமழை தீவிரமடைந்துள்ளது. அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கன மழையால், பிரம்மபுத்ரா மற்றும் அதன் கிளை நதிகளில், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரம்மபுத்ரா நதியில், வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோர பகுதிகள் மட்டுமல்லாமல், தாழ்வான பகுதிகளிலும், வெள்ளம் புகுந்துள்ளது.

அசாமில் திப்ரூகர் வழியாக ஓடும் புர்கிதேகிங், லட்சுமிபூர் வழியாக ஓடும் சுபான்ஸ்ரீ, கோலகாட் வழியாக ஓடும் தான்ஸ்ரீ, சோனித்பூர் வழியாக ஓடும் ஜியாபெராலி, உள்ளிட்ட 9 கிளை ஆறுகளில் வெள்ளம் அபாய அளவை தாண்டி பாய்கின்றன. மேலும் சில மாவட்டங்களில் பெய்த கன மழையால் 4 லட்சத்திற்கும் அதிகமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பெரும்பாலான சாலைகள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளன; வீடுகள் இடிந்து விட்டன. நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. கனமழைக்கு 15 பேர் பலியாகியுள்ளனர்.
கனமழையால் கஸிரங்கா தேசிய வன விலங்கு பூங்கா 95 சதவீதம் வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. இங்குள்ள விலங்குகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விலங்குகளை மனிதர்கள் வேட்டையாடுவதை தடுக்கும் நடவடிக்கை அரசு மேற்கொண்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
16-ஜூலை-201918:48:09 IST Report Abuse
karutthu அசாம்மில் பேயும் மழை கொஞ்சம் தமிழகத்தில் பேய்ந்தால் நல்லது .வருண பகவான் அருள்புரியவேண்டும்
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
16-ஜூலை-201907:48:41 IST Report Abuse
A.George Alphonse ஒருபக்கம் வெள்ளம் மறு பக்கம் வறட்சி.வீணாகும் மழை நீருக்காகவும் மழையினால் ஏற்படும் இது போன்ற பேரழிவில் மீள ஒரே வழி ஜீவ நதிகளை தேசிய மயமாக்கி எல்லா மாநிலங்களுடன் இணைப்பதே.
Rate this:
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
16-ஜூலை-201910:16:44 IST Report Abuse
DSM .S/o PLM நதிகளை இணைப்பது சாத்தியமில்லை.. இது யாரோ ஒரு சாதாரண புவியியல்/ தொழில் நுட்ப வல்லுநர் சொல்லவில்லை. மாமேதை பப்பு உஊஊஊஉ சொன்னது.. அதற்கு பிறகும் நதிகளை இணைப்பது பற்றி நீங்கள் பேசுவது, சிறுபான்மையினருக்கு நீங்கள் இழைக்கும் துரோகம்....
Rate this:
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
16-ஜூலை-201913:18:45 IST Report Abuse
வந்தியதேவன்(உலகத்திலேயே மெத்த படிச்ச ஆளு.. நீங்க ஒருத்தர்தானய்யா... சாதி பேர பேனர்ல போட்டுக் கொள்கிறீர்கள்.) அடிப்படையாக எதைப் பற்றியும் தெரிந்து கொள்ளாமல்... கிழக்கு மேற்காக பாயும் ஜீவநதியை எப்படி அய்யா... தெற்கு பக்கம் திருப்பி இணைக்க முடியும்... அப்படியே இணைக்க நினைத்தாலும்... அந்நிலம் சமவெளி பிரதேசமாக இருக்கவேண்டும்... மலையும், பாதாள மடுவும், பள்ளமும், மேடும் நிறைந்த தக்காண பீடபூமியில் எப்படி அய்யா நதிநீர் கீழே பாயும்.. தண்ணீர் கீழிருந்து மேலே பாயுமா? இயற்கைக்கு மாறானவற்றை செய்வது சாத்தியாமா....ங்கற பேசிக் நாலெட்ஜே இல்லாம... இப்படி பேசுனா எப்படி...? நீங்க சொல்றது எப்படி இருக்குன்னா... கேரளாவில் மேற்கு பாயும் நீரோடைகளை.. கிழக்கே தமிழ்நாட்டுப்பக்கம்... அதாவது ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை பக்கம் பாய எப்படி அய்யா இயலும்...? மேற்கு நோக்கி பாயும் ஆறு... மேற்கு மலைத் தொடர்ச்சி மீது ஏறி.. மறுபுறம் தமிழகத்தின் பக்கம் கீழிறங்கி பாயுமா அய்யா...? இதெல்லாம் யோசனை செஞ்சு கமெண்ட் போடுங்க சார்..?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X