பொது செய்தி

தமிழ்நாடு

'கல்லூரி மாணவர்கள் மூலம் செயற்கைகோள் செய்ய முயற்சி'

Added : ஜூலை 16, 2019
Share
Advertisement

வந்தவாசி: ''கல்லூரி மாணவர்கள் மூலம், செயற்கைகோள்கள் செய்ய முடியுமா என, முயற்சி செய்யப்பட்டு வருகிறது,'' என, சந்திராயன் முன்னாள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளாறில், நேற்று முன்தினம் மாலை, தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது. இதில், பங்கேற்க வந்த, சந்திராயன் முன்னாள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களிடம் கூறியதாவது: நிலவுக்கு, 50 ஆண்டுகளுக்கு முன், ஆம்ஸ்ட்ராங் சென்றபோது, அமெரிக்க இளைஞர்களிடம் விழிப்புணர்வு உருவானது. அதன் மூலம்தான் அமெரிக்கா, உலகளவில் முன்னிலை பெற்றது. அந்த வகையில், இந்தியாவிலும் இளைஞர்களிடமும், மாணவர்களிடமும் சந்திராயன் மூலம், அறிவியல் விழிப்புணர்வு ஏற்படும். தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, மாதிரி செயற்கைகோள்களை, 10 கி.மீ., உயரத்தில், பலூனில் வைத்து பறக்க வைக்கும் போட்டியை அறிவித்துள்ளோம். இதன் மூலம், செயற்கைகோள்கள் குறித்து, பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் அறிந்து கொள்ள உதவும். இந்தியாவின், 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, தேசிய அளவில், கல்லூரி மாணவர்கள் மூலம், 75 செயற்கைக்கோள்கள் செய்ய முடியுமா என்பது குறித்து, முயற்சி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X