பொது செய்தி

தமிழ்நாடு

அத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை

Updated : ஜூலை 16, 2019 | Added : ஜூலை 16, 2019 | கருத்துகள் (35)
Advertisement

சென்னை : காஞ்சிபுரத்தில் தற்போது பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை என்று இந்துசமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் பனீந்தர ரெட்டி கூறியுள்ளார்.






அத்திவரதரை காண்பதற்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து சிரமப்படுவதால், அத்திவரதரை இடமாற்ற வேண்டும் என்று பக்தர்களில் ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.





இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பனீந்திர ரெட்டி, '' வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு உள்ள ஐதீகத்தை மாற்ற முடியாது. பக்தர்களின் கோரிக்கை குறித்து இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை,'' என்று கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandrasekaran Narayanan - Hosur,இந்தியா
18-ஜூலை-201906:23:37 IST Report Abuse
Chandrasekaran Narayanan நானும் அத்திவரதரை தரிசித்தேன். போலீஸ் ஒழுங்காக தான் செயல்படுகிறார்கள். ஆனால் வரிசைக்கு கட்டி வைத்துள்ள அமைப்பு சரியில்லை. ஒரே நேரத்தில் மூவர் வரிசையாக உள்ளது. இதை ஒருவர் பின் ஒருவராக செல்வது போல் கட்டைகளை கட்டி விட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
S.kausalya - Chennai,இந்தியா
17-ஜூலை-201906:41:39 IST Report Abuse
S.kausalya இவ்வளவு கூட்டம் வரும் என அற நிலைய துறையும், கோயில் நிர்வாகமும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் ஒரு முறை பூஜை செய்து நிலை படுத்திய பின் வேறு ஒரு இடத்திற்கு மாற்றுவது கூடாது தான். இந்த ஊடகங்களால் வந்த வினை தான் இது. இவரை கும்பிட்டல் அனைத்து பாவமும் போய் விடும் என்று ஏதாவது ஒரு ஆன்மீக தலைவரை பேச வைப்பது போன்ற செயல்களை செய்வதால் தான் கூட்டம் கட்டுக்கு அடங்காமல் உள்ளது. ஹிந்து மதத்தில் பாவ. புண்ணிய கணக்குகள் அவர்வர்களால் அனுபவித்து தான் தீர வேண்டும். தட்டில் காசு போட்டு அல்லது கடவுளுக்கு பூ வாங்கி சாற்றி, இதெல்லாம் நம் மன சாந்தீங்க்கு செய்வது. பணம் போட்டேன், இந்த அர்ச்சகர் எனக்கு பூ தரவில்லை என மக்கள் அலப்பறை செய்தால்,அவர் என்ன செய்வார். அவரும் மனிதர் தான். மாற வேண்டியது மக்கள் தான். இப்போது தான் தொலை காட்சி பெட்டி முன் உட்கார்ந்தால், அத்தி வரதரை தரிசிக்க முடிகிறதே, அத்துடன் திருப்தி அடையலாம். இதில் சிறு குழந்தைகளை வேறு அழைத்து வந்து, கஷ்டபடித்துகின்றனர். இன்னும் அடுத்த 40 ஆவது வருடம் எப்படி இருக்குமோ தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Srinivas -  ( Posted via: Dinamalar Android App )
17-ஜூலை-201902:55:52 IST Report Abuse
Srinivas வீரமணியை வெறுப்பவர்கள் எண்ணிக்கை இங்கே ஓரளவுக்கு தெரிகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X