பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - ஈரோடு

Added : ஜூலை 16, 2019
Share
Advertisement

பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதி தேவை: கொடுமுடி பஸ் ஸ்டாண்டுக்குள் தினமும், 80க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. நூற்றுக்கணக்கான பயணிகள் வருவதால், அங்கு கூடுதல் கழிப்பறை அமைத்து சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். தற்போது, சாலையை கழிப்படமாக பயன்படுத்தும் நிலை உள்ளது. இரவு, 10:00 மணிக்கு மேல் கிராமங்களுக்கு செல்ல பஸ் வசதி இல்லாததால், அங்கு நிற்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

- ஆர்.கிருஷ்ணமூர்த்தி, கொடுமுடி.

தேங்கும் ஆலை கழிவால் துர்நாற்றம்: காளிங்கராயன் வாய்க்காலில் நீர் திறந்து பல மாதமாகும் நிலையிலும், வாய்க்காலிலும், பேபி வாய்க்காலிலும் சாய, சலவை, தோல் ஆலை கழிவுகள் தினமும் ஓடுகிறது. காவிரி, காளிங்கராயன் உள்ளிட்ட ஆறு, வாய்க்கால் கரைகளில் ஆலைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என விதிகள் இருந்தும், அதிகாரிகளின் அலட்சியத்தால், ஆலைகள் அமைக்கப்படுகிறது. தற்போது, வாய்க்காலில் தேங்கி கிடக்கும் சாய, சலவை ஆலை கழிவு நீரால் துர்நாற்றம் வீசுகிறது.

- கே.கேசவன், சூரியம்பாளையம், ஈரோடு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X