பொது செய்தி

தமிழ்நாடு

அதிர்ச்சி : எஸ்பிஐ ஏடிஎம்மில் கள்ளநோட்டுகள்

Added : ஜூலை 16, 2019 | கருத்துகள் (22)
Advertisement
கள்ளநோட்டுகள், நாமக்கல், ஏடிஎம், எஸ்பிஐ

நாமக்கல் : நாமக்கல் நகரில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம்மில் இருந்து வரிசையாக இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் அருகே, சேந்தமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் முதல்நிலை முகவராக பணியாற்றுபவர் மூர்த்தி. இவர் நேற்று இரவு நாமக்கல் சங்கரன் சாலையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் 40 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துள்ளார்.

அதில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் 5 ஒட்டப்பட்ட கள்ள நோட்டுக்களாக வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அருகே உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் புகார் அளிக்க சென்றபோது, அங்கிருந்த அதிகாரிகள் மூர்த்தியிடம் வங்கிக் கணக்கு எண்ணை கொடுத்துவிட்டு மறுநாள் வருமாறு கூறிவிட்டு வங்கியின் நுழைவாயிலைப் பூட்டியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி, ஒட்டப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுக்களை நுழைவாயிலின் முன்பு வைத்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், மூர்த்தியை சமாதானப்படுத்தி வங்கிக்குள் அழைத்து சென்றனர்.

மூர்த்தியிடம் புகார் மனு பெற்றுக்கொண்ட வங்கி அதிகாரிகள், ஒட்டப்பட்ட நோட்டுக்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர் எடுத்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பி தருவதாகவும் வங்கி அதிகாரிகள் கூறினர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டார், மூர்த்தி.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-ஜூலை-201916:50:20 IST Report Abuse
Lion Drsekar தவறானவர்கள் மற்ற துறையினர் போல் இனி வாழ்ந்திருப்பார்கள், லோன் கொடுத்து ஏமாற்றும் வியாபாரத்தில் தற்போது இந்த வாழ்க்கை வாழமுடியவில்லையே என்ற ஏக்கத்தில் இந்த மாற்று தொழிலில் ஈடுபட்டிருப்பார்களோ . வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
16-ஜூலை-201916:44:15 IST Report Abuse
ஆப்பு அடுத்த நோட் பந்திக்கு வேளை வந்திரும் போலிருக்கே... ஐயா கேட்டா ரொம்ப சந்தோஷப் படுவாரு...சின்ன கடுக்காய் வைத்தியம் குடுத்திறப் போறாரு.
Rate this:
Share this comment
Cancel
natarajan s - chennai,இந்தியா
16-ஜூலை-201915:43:51 IST Report Abuse
natarajan s அவை reissuable நோட்டுகளாக இருந்திருக்கும் . ATM மூலம் வெளியில் வரும்போது டிஸ்பென்சரில் மாட்டியதால் damage ஆகி இருக்கும் . பெரும்பாலும் note sort பண்ணியபிறகுதான் ATM எந்திரத்தில் வைப்பார்கள் . கள்ள நோட்டு வர சந்தர்ப்பம் மிக குறைவு. அதை ஹாண்டில் செய்பவர்கள் உடன்பாடு இல்லாமல் கள்ள நோட்டு வைக்கமுடியாது , நோட்டு மாற்றம் அதிகாரியின் மேற்பார்வையில் நடைபெறுவதால் இது நடக்க வாய்ப்பில்லை . ஆனால் தமிழ் நாட்டில் கள்ள நோட்டு மாற்றுவதெற்கென்ற ஒரு வங்கி உள்ளது . R B I அதெற்கு பலமுறை fine விதித்துள்ளது என்று அறிந்திருக்கிறேன் . அப்படியே கள்ள நோட்டு வந்தால் அங்குள்ள CCTV கமெரா முன் அந்த நோட்டின் எண் தெரிவதுபோல் காட்டி பதிவு செய்துவிட்டு வங்கியில் அந்த transaction பற்றிய விவரம், card எண் , ATM பற்றி புகார் கொடுத்தால் தகுந்த விசாணைக்குப்பின் கணக்கில் வரவு வைக்கப்படும் . இதுதான் நடைமுறை . உண்மையில் கள்ள நோட்டாக இருந்தால் போலீஸ் complaint கொடுக்கப்படும் அப்போது அந்த புகார் கொடுத்தவரும் வாக்குமூலம் அளிக்கவேண்டிவரும் .
Rate this:
Share this comment
16-ஜூலை-201917:30:10 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்ஒருமுறை எனக்கு ICICI வாங்கி ATM ல் ஒரு புதிய நோட்டு ஒரு ஓரம் கிழிந்து வந்தது , மறுநாள் வங்கிக்கு சென்று கொடுத்தேன் உடனடியாக மாற்றி கொடுத்துவிட்டார்கள் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X