கர்நாடகா அதிருப்தி காங்., எம்எல்ஏ., கைது

Updated : ஜூலை 16, 2019 | Added : ஜூலை 16, 2019 | கருத்துகள் (15)
Share
Advertisement

பெங்களூரு: கர்நாடகாவில் அதிருப்தி காங்., எம்எல்ஏ., ஒருவரை மாநில போலீசார் பிடித்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



latest tamil news



கர்நாடகாவில் ஆளும் காங்., மஜத கூட்டணியை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் நாளுக்கொரு அரசியல் நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. ஆட்சியை தக்க வைக்கும் விதமாக நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சபாநாயகரிடம் முதல்வர் குமாரசாமி வழங்கினார்.
இதையடுத்து நம்பிக்கை தீர்மானத்தின் மீது வரும் 18 ம் தேதி ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளார். ஆட்சி கவிழுமா அல்லது தப்பிக்குமா என்ற சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் ராஜினாமா செய்த ரோசன்பெய்க் என்பவரை கர்நாடக போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால் கைது செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. இவர் விமான நிலையத்தில் மும்பை செல்லவிருந்த போது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவருடன் பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் உதவியாளர் சந்தோஷ் என்பவர் இருந்ததாக கூறப்படுகிறது.


latest tamil news



40 பேர் முதலீடு செய்த நிறுவனத்தில் ரூ.2 ஆயிரம் கோடிவரை பண மோசடி செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடந்து வருகிறது.

இந்நிலையில் ரோசன்பெய்க் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumaravel -  ( Posted via: Dinamalar Android App )
16-ஜூலை-201919:38:13 IST Report Abuse
Kumaravel இவர் மீது வழக்குகள் உள்ளது என்பது இப்போது தான் காவல்துறைக்கு தெரியுமா?
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
16-ஜூலை-201915:48:29 IST Report Abuse
natarajan s இவர் மீது IMA scam அதிபரிடம் பணம் பெற்றதாக புகார் உள்ளது . அந்த நபரே 400 கோடிவரை கர்நாடக அரசியல் வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்ததாக பதிவிட்டு இருந்தார் அதன் தொடர்ச்சிதான் இந்த கைது நடவடிக்கை .(இவரும் அதில் பங்குதாரர் என்ற புகாரும் உள்ளது )
Rate this:
Cancel
Mano - Madurai,இந்தியா
16-ஜூலை-201915:22:53 IST Report Abuse
Mano கொலையாளிகள் கொள்ளைக்காரர்கள் இவர்களுக்கு இருக்கும் ஒரே புகலிடம், B.J.P. தான். நாடு உருப்பட்டால் போலதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X