பொது செய்தி

இந்தியா

அணு ஆயுதங்களை குவிக்கும் பாகிஸ்தான்

Updated : ஜூலை 16, 2019 | Added : ஜூலை 16, 2019 | கருத்துகள் (22)
Share
Advertisement
புதுடில்லி : நிதி நெருக்கடியில் சிக்கியிருந்தாலும், பாகிஸ்தான் தொடர்ந்து அணுஆயுதங்களையும், ஏவுகணைகளையும் அதிகப்படுத்தி வருவதோடு, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் மூலம் இந்தியாவை குறிவைத்து வருவதாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.ராணுவத்தின் பிடியில் பாக்.,இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில்,

புதுடில்லி : நிதி நெருக்கடியில் சிக்கியிருந்தாலும், பாகிஸ்தான் தொடர்ந்து அணுஆயுதங்களையும், ஏவுகணைகளையும் அதிகப்படுத்தி வருவதோடு, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் மூலம் இந்தியாவை குறிவைத்து வருவதாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.latest tamil newsராணுவத்தின் பிடியில் பாக்.,


இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில், ''பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு பொறுப்பேற்ற பிறகு, வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை கொள்கைகளை தீர்மானப்பதில், தன்னுடைய பிடியை அந்நாட்டு ராணுவம் உறுதிப்படுத்தியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.


latest tamil newsபயங்கரவாதிகளுக்கு உதவி :

மேலும், இந்தியாவுக்கு எதிரான அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் ஆதரவு அளிப்பதோடு, அண்டை நாடுகளை குறிவைக்கும் பயங்கரரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கையும் எடுப்பதில்லை. பயங்கரவாதிகள் எல்லை வழியாக ஊடுருவுவதற்கு உதவும் வகையில், இந்திய படைகளின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கோடு, எல்லைக்கு அப்பாலிருந்து இந்திய நிலைகளை குறிவைத்து தொடர்ச்சியாக தாக்கும் வேலையையும் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்கிறது.


43 % ஊடுருவல் குறைவு :

இந்த ஆண்டில் இதுவரை, எல்லை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவுவது, 43 சதவீதம் குறைந்திருப்பதோடு, எல்லைக்கு அப்பாலிருந்து பாகிஸ்தான் அத்துமீறி தாக்குவதில் கனரக ஆயுதங்களின் பயன்பாடும் குறைந்துள்ளது.


உள்நாட்டு மோதல்கள்

:பாகிஸ்தானின் பாலக்கோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது உள்ளிட்ட பதிலடி நடவடிக்கைகளால் இது குறைந்துள்ளதே தவிர, பாகிஸ்தானின் நேர்மையான மனமாற்றம் இதற்கு காரணம் அல்ல. மத அடிப்படைவாதம் அதிகரிப்பது, இனரீதியான, பிரதேச ரீதியான மோதல்கள் அதிகரித்திருப்பது, பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளையும் தாண்டி, உள்நாட்டுப் பகுதிகளுக்கும் மோதல் பரவியிருப்பது போன்றவை பாகிஸ்தானை கூறுபோட்டுக் கொண்டிருக்கிறது.


latest tamil newsபாக்.,கிடம் 150 அணுகுண்டுகள் :

இருப்பினும், பாகிஸ்தான் தொடர்ந்து அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் அதிகப்படுத்தி வருவதோடு, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் மூலம் இந்தியாவை குறிவைத்து வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.இந்தியாவில் 130 முதல் 140 அணுஆயுதங்கள் உள்ள நிலையில், பாகிஸ்தானிடம் 140 முதல் 150 அணு ஆயுதங்கள் வரை உள்ளது என்றும், 2025ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை, 250 வரை அதிகரிக்கும் என்றும் சர்வதேச மதிப்பீடுகள் ஏற்கெனவே தெரிவித்துள்ளன.

சீனா மற்றும் வடகொரியாவின் உதவியோடு பாகிஸ்தான் அணு ஆயுதங்களை பெருக்கியுள்ளது என்று சர்வதேச மதிப்பீடுகள் ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம் - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஜூலை-201913:02:06 IST Report Abuse
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம்  நம்ம அன்பார் கீழே சொன்ன மாதிரி PVC பைப்புல பெயிண்ட் அடிச்சி உதார் வுட்டுக்கினு இருக்கானுவ.. பாகிஸ்தானையெல்லாம் ஒரு பொருட்டாகவே இந்தியா நினைக்க வேண்டியது இல்லை.. பாவம் ரொட்டிக்கு அடிச்சிட்டு சாவுறானுவ.. நாமோ ஒண்ணுமே செய்யலன்னாலும் அவுனுகளாகவே அடிச்சிக்கிட்டு செத்துடுவானுவ.. அம்புட்டு அறிவாளி கும்பல் .. நாமோ நம்ம வேலைய பாப்போம்
Rate this:
Cancel
Adhithyan - chennai,இந்தியா
16-ஜூலை-201920:53:49 IST Report Abuse
Adhithyan அச்சம் கிளப்பும் துறை .சிறப்பாக செயல்படுகிறது
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
16-ஜூலை-201919:32:57 IST Report Abuse
Rajagopal பாகிஸ்தானில் மூன்று அரசாங்கங்கள் இருக்கின்றன. ஒன்று சனநாயகத்தினால் தேர்தெடுக்கப் படும் அரசியல் கட்சிகளின் ஆட்சி. இரண்டாவது அவர்களது ராணுவம். மூன்றாவது அவர்களது முல்லாக்கள். இதில் ராணுவம்தான் உண்மையான அதிகாரம் உடையது. அவர்கள் சனநாயக முகத்திரையை வைத்திருப்பதே உலக நாடுகளின் அங்கீகாரமும், உதவியும் பெறுவதற்குத்தான். முல்லாக்கள் ராணுவத்தோடு இணைந்து செயல் படுகிறார்கள். எந்த ராணுவத்திற்கும் ஒரு எதிரி எப்போதும் தேவை. அதுவும் நாட்டை ஆள வேண்டுமானால் ஒரு கொடூரமான எதிரி மிகவும் தேவை. அதனால் இந்தியாவை ஒரு இந்து நாடாக ஜோடித்து, இஸ்லாமியத்தை அழிக்க முனையும் அரக்கனைப் போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி, அதை வைத்து இந்த ராணுவம் தன் பிடியை ஆழமாக வைத்திருக்கிறது. இந்தியா இல்லையென்றால் அவர்களால் எதையும் வைத்து நாட்டை உடும்புப் பிடியில் வைத்திருக்க முடியாது. அதனால் அவர்கள் விடாமல் கட்சி வரை ஏதாவது இந்தியாவிற்கு எதிராகச் செய்து கொண்டுதான் இருப்பார்கள். அது தான் அவர்களை திவாலாகும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. இப்போது அணு ஆயுதங்களை வைத்துக் கொண்டு உலகை மிரட்டி அதை வைத்துப் பணம் செய்யப் பார்ப்பார்கள். பணம் கொடுங்கள், இல்லையேல் தீரவிரவாதிகள் கையில் அணு ஆயுதங்கள் சிக்கலாம் என்று முறையிட்டுப் பணம் குவிப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X