அணு ஆயுதங்களை குவிக்கும் பாகிஸ்தான்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அணு ஆயுதங்களை குவிக்கும் பாகிஸ்தான்

Updated : ஜூலை 16, 2019 | Added : ஜூலை 16, 2019 | கருத்துகள் (22)
Share

புதுடில்லி : நிதி நெருக்கடியில் சிக்கியிருந்தாலும், பாகிஸ்தான் தொடர்ந்து அணுஆயுதங்களையும், ஏவுகணைகளையும் அதிகப்படுத்தி வருவதோடு, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் மூலம் இந்தியாவை குறிவைத்து வருவதாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.latest tamil newsராணுவத்தின் பிடியில் பாக்.,


இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில், ''பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு பொறுப்பேற்ற பிறகு, வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை கொள்கைகளை தீர்மானப்பதில், தன்னுடைய பிடியை அந்நாட்டு ராணுவம் உறுதிப்படுத்தியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.


latest tamil newsபயங்கரவாதிகளுக்கு உதவி :

மேலும், இந்தியாவுக்கு எதிரான அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் ஆதரவு அளிப்பதோடு, அண்டை நாடுகளை குறிவைக்கும் பயங்கரரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கையும் எடுப்பதில்லை. பயங்கரவாதிகள் எல்லை வழியாக ஊடுருவுவதற்கு உதவும் வகையில், இந்திய படைகளின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கோடு, எல்லைக்கு அப்பாலிருந்து இந்திய நிலைகளை குறிவைத்து தொடர்ச்சியாக தாக்கும் வேலையையும் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்கிறது.


43 % ஊடுருவல் குறைவு :

இந்த ஆண்டில் இதுவரை, எல்லை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவுவது, 43 சதவீதம் குறைந்திருப்பதோடு, எல்லைக்கு அப்பாலிருந்து பாகிஸ்தான் அத்துமீறி தாக்குவதில் கனரக ஆயுதங்களின் பயன்பாடும் குறைந்துள்ளது.


உள்நாட்டு மோதல்கள்

:பாகிஸ்தானின் பாலக்கோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது உள்ளிட்ட பதிலடி நடவடிக்கைகளால் இது குறைந்துள்ளதே தவிர, பாகிஸ்தானின் நேர்மையான மனமாற்றம் இதற்கு காரணம் அல்ல. மத அடிப்படைவாதம் அதிகரிப்பது, இனரீதியான, பிரதேச ரீதியான மோதல்கள் அதிகரித்திருப்பது, பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளையும் தாண்டி, உள்நாட்டுப் பகுதிகளுக்கும் மோதல் பரவியிருப்பது போன்றவை பாகிஸ்தானை கூறுபோட்டுக் கொண்டிருக்கிறது.


latest tamil newsபாக்.,கிடம் 150 அணுகுண்டுகள் :

இருப்பினும், பாகிஸ்தான் தொடர்ந்து அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் அதிகப்படுத்தி வருவதோடு, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் மூலம் இந்தியாவை குறிவைத்து வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.இந்தியாவில் 130 முதல் 140 அணுஆயுதங்கள் உள்ள நிலையில், பாகிஸ்தானிடம் 140 முதல் 150 அணு ஆயுதங்கள் வரை உள்ளது என்றும், 2025ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை, 250 வரை அதிகரிக்கும் என்றும் சர்வதேச மதிப்பீடுகள் ஏற்கெனவே தெரிவித்துள்ளன.

சீனா மற்றும் வடகொரியாவின் உதவியோடு பாகிஸ்தான் அணு ஆயுதங்களை பெருக்கியுள்ளது என்று சர்வதேச மதிப்பீடுகள் ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X