அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் வழக்கு: நாளை தீர்ப்பு| Dinamalar

அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் வழக்கு: நாளை தீர்ப்பு

Updated : ஜூலை 16, 2019 | Added : ஜூலை 16, 2019 | கருத்துகள் (28)
Share

புதுடில்லி : கர்நாடகா அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்த வழக்கில், நாளை ( ஜூலை 17) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.



latest tamil news




கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.,க்கள் 15 பேர் சமீபத்தில் ராஜினமா செய்தனர். ஆனால், தற்போது வரையில் அதுகுறித்து கர்நாடக சட்டசபை சபாநாயகர் ரமேஷ்குமார் இதுவரை முடிவெடுக்கவில்லை.


latest tamil news





சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு :


இதனால், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் மும்பையில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். அங்கிருந்து முதலில் 10 பேரும், பின்னர் 5 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அதில், தங்களது ராஜினமா குறித்து சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரிக்கை விடுத்துள்ளனர்.


latest tamil news




கோர்ட் தலையிட கூடாது :


இதன்மீது கடந்த வாரம் முதலில் சபாநாயகர் உரிய முடிவெடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியது. ஆனால், கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார், சபாநாயகர் முடிவெடுக்கும் விசயத்தில் கோர்ட் தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

இந்தநிலையில், இன்று வரையில் (ஜூலை 16) அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் குறித்து முடிவெடுக்க தடை விதித்த சுப்ரீம் கோர்ட், இன்று அந்த வழக்கை விசாரிப்பதாக உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று அந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.


latest tamil news





உத்தரவிட முடியாது :


அப்போது அதிருப்தியாளர்கள் சார்பில் ஆஜரான முகுல் ரோகத்கி, '' கர்நாடக சபாநாயகர் ஒரே நேரத்தில் ராஜினாமா ஏற்பு, தகுதி நீக்கம் என்று இருவித நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். இது தவறு,'' என்று வாதாடினார்.

இந்த விசாரணையில் கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், '' சபாநாகருக்கு நீதிமன்றங்கள் உத்தரவிட முடியாது,'' என்றார். மேலும் கருத்து தெரிவித்த கோகாய், '' அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் சபாநாயகர் என்று இருதரப்பினருக்கும் பாதகமில்லாத வகையில் தான் உத்தரவு பிறப்பிக்கப்படும்,'' என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் நாளை(ஜூலை 17)காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X